வலிகள்
வலிகள்
1 min
92
கடன் தொல்லையால் தலைமறைவான புருஷன். நோயில் விழுந்த மாமியார். பங்காளி சண்டையில் வந்து சேராத பூர்வீக பங்கு. ஏழ்மையை வம்புக்கு இழுக்கும் எதிர்த்த வீட்டு பகட்டுக்காரி. ழுழ்கி போன இரட்டை வடம் சங்கிலி . வாடகை பாக்கி . மளிகை கடன். இத்தனைக்கும் சேர்த்து தான் ஆடித்தீர்க்கிறாள். கருப்பன் கோயில் திருவிழாவில் உடுக்கை சத்தம் செவியில் அறையும் போது. அவள் உள் இறங்கியது கருப்போ இல்லை அவள் ஆற்றாமையின் விஸ்வரூபமோ யார் அறிவார்.