STORYMIRROR

Magarajeswari Ramasamy

Abstract Inspirational

2  

Magarajeswari Ramasamy

Abstract Inspirational

நேசிப்பதற்காக சுவாசித்தவளே

நேசிப்பதற்காக சுவாசித்தவளே

1 min
170

எனக்காக மண்ணில் பிறந்தாய் நீ

உனக்காக உன்னுள் மலர்ந்தேன் நான்

என் முதல் சொந்தம் நீ

உன் முடிவில்லா சொந்தம் நான்

என் வாழ்வின் இன்பம் நீ

உன் அன்பின் பிம்பம் நான்

என் இதயத்தினை இயக்குபவள் நீ 

உன் மனதினை மயக்குபவள் நான்

என் கிறுக்கல்களுக்கு வண்ணம் அளித்தாய் நீ

உன் வாழ்வின் வண்ணமாய் வாழ்வேன் நான்

என்னை நேசிப்பதற்காக சுவாசித்தவளே

என் மூச்சின் முழுதும் நீயடி

என் தாயே 

என்றும் நீ என் மகளடி


Rate this content
Log in

Similar tamil poem from Abstract