சுதந்திரம்
சுதந்திரம்
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
எது சுதந்திரம்? இன்று நாம்🇮🇳🇮🇳🇮🇳 அனுபவித்து, வாழ்வதா? இல்லை, நம் முன்னோர்கள், தங்களையே இழந்து, நமக்காக, கொடுத்ததா?✊
பல நூறு வருடங்கள், முகலாயர், ஆங்கிலேயர், என்று பலரும், இந்த மண்ணையும், நம் உழைப்பையும், சிறுக சிறுக, சுரண்டித் தின்றனர்.🏞️
இன்றோ, சட்டம், விதி, வரி என்ற பெயரில், நம்மில் சிலரே, இந்த மண், மற்றும், சக மனிதர்களின் வாழ்வை, சுரண்டிக் கொண்டிருக்கின்றனர். ⛰️
என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில்? எல்லாம் இருந்தும், ஏன் கை நீட்டுகிரோம் வெளிநாட்டில்?
ஒழுங்காய் பாடு படு வயக் காட்டில். என்று சொல்ல, எது வயல்? எங்கே விட்டு வைக்கிரார்கள் காட்டை?🌲🪵
நியாயம், காயம், இரண்டும், அவனே அறிவான், என்பது மட்டும், உண்மை.
உழைப்புக்கான நியாய விலையை நிர்ணயிக்க முடியாமல் காயப்பட்டு நிற்கும், ஒவ்வொரு தனி மனித உழைப்பாலியின் வலியையும், அவன் ஒருவனே அறிவான்.🙇🙇🙇
எல்லா
தேசங்களும், மக்களின் நலனை, பார பட்சம் இன்றி தான், வழங்குகிறன. ஆனால் இங்கோ, இருப்பவர்களுக்கு இன்னும் கிடைக்க, இல்லாதவர்கள், மேலும் இழந்து கொண்டே இருக்கின்றனர்.
இது தான் நம் முன்னோர் கண்ட சுதந்திரமா? இது தான் சம உரிமையா? நம் நாட்டின், என்றும் மாறா, நிலையா? நம் கதியா? 🤦🤦
மாறும், நாம் ஒவ்வொருவரின் ஆள் காட்டி விரலில் பதிக்கும் மையை கொண்டு மட்டும் அல்ல, பொறுப்புள்ள குடிமக்களாக, நாம் ஒவ்வொருவரும் எடுக்கும் முயற்சி கொண்டு, மட்டுமே மாறும். வருங் கால சந்ததிக்கு, நாம் கற்பிக்கும், நெறிகள் மற்றும் வாழ்க்கை முறை மட்டுமே, இந்நிலையை மாற்றும். 🙋
இன்றைய தலைமுறைக்கு, சுதந்திரத்தை பற்றியும், அதற்காக தியாகம் செய்ய எண்ணற்ற உயிர்கள் பற்றியும், நமக்கு கிடைத்து இருக்கும் பொக்கிஷம் பற்றியும், நம் நாட்டின் பெருமை பற்றியும், கல்வியோடு கற்பித்தால், மீண்டும் நம் பூமியில், புள் பூண்டு மட்டும் இன்றி, பொண்ணும் விளையும். நன்றி, வணக்கம்.🙏🙏🙏