Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

hema malini

Inspirational Others

4  

hema malini

Inspirational Others

நினைவுப்பாதை ❤️

நினைவுப்பாதை ❤️

1 min
5



நினைவுப்பாதை 

இது கடந்த காலமானால் ...

நம் கவலையில்லாத 

இளமையின் 

நினைவலைகள்...


நினைவுப்பாதை 

இது நிகழ்காலமானால் 

துயர வலையில் மீள 

மீட்பு நடவடிக்கைகள்...


நினைவுப்பாதை 

இது எதிர் காலமானால் 

எத்தனை அவதி 

இன்னுமென்ற 

அங்கலாய்ப்புகள்...


மனதில் அழியாத 

நினைவுப்பாதை 

நாம் மட்டும் 

கடந்த ஒற்றையடி பாதையாய்

நட்பும் காதலும் ...


நினைவுப்பாதை 

அகலப்பாதைக்காக 

ஆக்கிரமித்த 

இடமாக...

இல்லறமும் இன்னலுமாக...


விபத்தில்லாத 

நினைவுப்பாதை 

இறைவழியும் 

கொடுப்பினையுமாக...


டோல்கேட் இல்லாத 

நினைவுப்பாதை 

குடும்பமும் குழந்தையுமாக ...


ஆலயத்திற்கான 

நினைவுப்பாதை 

வேதனை தீர 

வேண்டுதலுக்காக...


கல்லணைக்கான 

நினைவுப்பாதை 

கரிகாலனின் 

வழித்தடமாக...


கடவுளுக்கான 

நினைவுப்பாதை 

கற்களின் 

கடந்த காலமாக...


நமக்கான 

நினைவுப்பாதை 

அலங்கார வளைவின் 

வரவேற்பாக...


நமக்கான 

நினைவுப்பாதை 

லட்சியங்களின் 

நுழைவாயிலாக...


நமக்கான 

நினைவுப்பாதை 

அலட்சியங்களால் 

காட்டு பகுதியாக...

நினைவுப்பாதையில் 

நினைவு தப்பினால் 

வழித்தடம் மறந்த 

நிம்மதி இழப்பாக...


நினைவுப்பாதையில் 

தடம் தப்பினால் 

மற்றொரு பயணத்தின் 

பாதிப்பாக ...


நினைவுப்பாதையில் 

கவனச்சிதைவின்றி 

பிறப்பித்த பிறவி 

பூர்த்தி செய்வோம்...


நினைவுப்பாதையில் 

சொர்க்கத்திற்கு 

வழித்தடம் அமைத்து 

புண்ணியம் சேர்ப்போம்...


நினைவுப்பாதையில் 

இளைப்பாற 

நிழற்குடை அமைத்து 

சந்ததிகளுக்கு 

மூதாதையராவோம்

நம் நினைவுப்பாதை 

பொதுப்பாதையாகி 

தீவிரவாதிகளுக்கு 

துணையாக வேண்டாம்...


நம் நினைவுப்பாதை 

காலவதியாகி 

பயனற்றும் 

போக வேண்டாம்...


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational