மன்றாடல்🙏🏻
மன்றாடல்🙏🏻
கருவறையோடு
மன்றாடல்
பிறப்பின் கோட்பாடு...
எண்களோடு
மன்றாடல்
கணிதத்தின் வாய்ப்பாடு...
நம் பிறப்புக்கு
மன்றாடல்
தாயின் வேண்டுதல்...
கருகலைப்பிற்கு
மன்றாடல்
தீதின் தூண்டுதல்...
அருவருப்பில்
மன்றாடல்
ஒவ்வாமை வெளிப்பாடு...
குற்றவாளியின்
மன்றாடல்
குற்றம் களையும்
செயல்பாடு...
தமிழோடு
மன்றாடல்
திருவிளையாடலின்
சிறப்பு ...
மண்ணோடு
மன்றாடல்
விதைகள்
மரமாகும் வாய்ப்பு...
கல்லோடு
உளியின் மன்றாடல்
கடவுளின் வார்ப்பு...
வாழ்வோடு
மன்றாடல்
நல்வாழ்வின் காப்பு...
தன்மானத்தோடு
மன்றாடல்
இல்லற மதிப்பு...
மன்றத்தில் மன்றாடல் புலமைக்கு
பசிப்பிணி...
ஆலயத்தில்
பிச்சைக்கு
மன்றாடல்
திருவோட்டின்
பெரும்பணி...
மக்களுக்காக
மன்றாடல்
தலைவர்களின்
அரும்பணி...
கொடிய
சுயநலனின்
மன்றாடல்
பெரும்பிணி...
வளர்ச்சியில்
மன்றாடல்
வாலிப சக்தி...
இலட்சியத்தில்
மன்றாடல்
உயர்வின் கீர்த்தி...
முதுமையில்
மன்றாடல்
இயலாமையின்
விரக்தி...
மன்றாடல்
இருந்தாலும்
கொன்றாடல்
பல இங்கே அனுமதி...
சிங்கம் புலி
பசியில் மன்றாட
ஆடு மாடு
உயிரோடு மன்றாட...
மன்றாடல்
பலகோடி
ஆலயத்தில்
கோரிக்கையாக...
மன்றாடல்
பல இங்கே
கோரிக்கை
வாயிலாக...
மன்றாடல்
கடவுளிடம்
காணிக்கை
மூலமாக...
நீதியிடம்
மன்றாடல்
சொத்து குவிப்பு
வழக்காக...
நன்றுக்கு
மன்றாடல்
மனிதனை
மனிதனாக்க...
தீதுக்கு
மன்றாடல்
தன்பிறப்பை
பாழாக்கவே...
பாழாக்கவே...