Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

hema malini

Inspirational Others

4  

hema malini

Inspirational Others

தேநீர் விருந்து.....☕☕

தேநீர் விருந்து.....☕☕

1 min
4


 .


தேநீர் என்றால் இனிய அருள் தேடுகின்ற தேம்புதல் இறைவன் அரசன் என பொருள் இருக்கின்றது


உழைப்பவருக்கு இனிய தேநீர் விருந்து உற்சாகம்...


களைத்தவருக்கு தேடுதலான தேநீர் விருந்து மருந்து...


நட்பிற்கு நட்பு அருள் கூட தேநீர் விருந்து சிறப்பு...


காதலர் தேடுதலுக்கு

தேநீர்விருந்து 

காப்பு...


முதியோர் 

தேம்புதலில் தேற 

தேநீர் விருந்து 

உயிர்ப்பு...


தேநீர் கடையில் 

ஓசி தேநீர் விருந்து 

உபகார உபசரிப்பு...


கிராமத்து 

நீராகாரம் 

பதவியை பறித்து 

தேநீர் கலாச்சாரம் 

தத்தெடுப்பு...


தேநீரோடு...

காரவடை கலந்து 

ஒருகடி...ஒருகுடி 

என தனியான 

தேநீர் விருந்து 

ஏக சந்தோஷம்...


கூடி தேநீர் விருந்து 

கொண்டாடி 

கடன்பாக்கிக்காக 

கடைக்கு டாடாகாட்டிய 

வாடிக்கையாளர்கள் ஏராளம்...


டோக்கன் அறிமுகம்... 

தயவுசெய்து கடன் சொல்லாதீர்கள் ...

இது தேநீர்விருந்து தந்த 

சிறப்பு பயிற்சி முகாமின் அறிமுகம்...


பெண் பார்க்கும் 

படலத்தில்...

பஜ்ஜி வடையோடு 

தேநீர் விருந்து 

பெண்பிடித்தால் மட்டுமே சாப்பிடவும்...


அந்த விருந்தில் 

சாபம் ஏற்காதீர்கள்...


கட்டஞ்சாயா...

தித்தித்த சுவையமுது 

சிலருக்கு...


பாலற்ற சாயான்னா 

போய்யான்னு பிதற்றல் பலருக்கு...


சர்க்கரை வேணுமா 

வேண்டாமா...

சக்கரவியூகத்தில் 

தேநீர்விருந்து...


தேநீர் சில நோய்க்கு 

மருந்தாக கூறுகிறது 

விஞ்ஞானம்...


தேநீர் பலருக்கு 

வாழ்வாதாரம் என்கிறது 

தேநீர் கடைகள்...


தேநீர் விருந்து 

தெய்வீகமே...


தேநீர் விருந்து 

சுகபோகமே...


தேநீர் விருந்து 

வைபோகமே...

 அண்ணனுக்கு சூடா ரெண்டு டீ...

அண்ணன் டோக்கன் குடுங்க...


அய்யய்ய வாங்கலியே...

பர்சை பாத்தா பர்சும் காணலியே...


கூடவந்த நண்பரின் காசும் பத்தலியே...


தேநீர் விருந்து 

வருந்தும் படி ஆயிருச்சே...


இப்ப போட்டான் பாரு ஸ்டிராங்கா...ஏய்...

அண்ணனுக்கு ரெண்டு 

டீ கேன்சல்...😃☕





Rate this content
Log in

Similar tamil poem from Inspirational