எறும்புகளின் அலுப்பு
எறும்புகளின் அலுப்பு
மார்கழி யாவும்
வண்ணக் கோலங்களாக
மிளிர்ந்தாலும்
அரிசி உணவுக்காக
கோலங்களைத்தான்
தேடுகிறோம்!
பூக்கோலத்தில்
தேனை உறிஞ்சி
சென்ற வண்டின்
முகத்தை ஏக்கத்துடன்
பார்த்து நீர்மேல் கோலம்
தேடிப் பார்த்தால்
வண்ணத்தில் முகம்
சுளிக்க வைத்தனவே!
கோலங்கள் வெறும்
அழகு மட்டுமல்ல
எங்கள் உணவிற்காக
என்பதை அறிவார்
உளரோ!