என்று அடங்கும் உன் கோரப்பசி
என்று அடங்கும் உன் கோரப்பசி


கொரோனா...
உலகின் இயக்கத்தையே நிறுத்தி விட்டாய்!
கடைகள் மூடப்பட்டது!
கம்பெனிகளின் கேட்டும் அடைக்கப்பட்ட து!
பத்து பாத்திரம் கழுவி பிழைக்கலாம் என்றாலோ?
அதற்கும் வழியில்லை!
வேலைத் தேடி வெளியே அலைந்து.... அலைந்து...
கால்கள் சோர்ந்து போயின!
பெட்ரோல் விலை நித்தம்.. நித்தம்.... ஏறுது!
வண்டியை நிரப்பவும் வழியில்லை!
உண்டியை நிரப்பவும் வழியில்லை!
குறையைச் சொல்ல....
இறைவனைத் தேடிப் போனேன்!
அவன் கோயில் வாசலை மட்டுமல்ல.... இதயவாசலையும் அடைத்துக் கொண்டான்!
போக்குவரத்தும் நின்று போனது!
பிழைப்பைத் தேடி எங்கே செல்வேன்!
நீயோ பற்ற வைத்த காட்டுத் தீயாய்....
மேனியெங்கும் பற்றி எரிக்கிறாய்!
மேதினி எங்கும் சுற்றித் திரிகிறாய்!
காட்டாற்று வெள்ளமாய் காவு வாங்குகிறாய்!
உனக்கும் கோரப் பசியோ?
எனில் என்று அடங்கும் உன் கோரப் பசி?
ஏழைமக்கள் எதை தின்று பசியாற்றுவோர்?
சிந்தனை செய்! நிந்தனை செய்யாதே!
உலகை விட்டு சென்று விடு!
உயிர்கள் வாழ வழிவிடு !