என்னை விரும்பாதே
என்னை விரும்பாதே


என்னை மன்னி
யாராலும் விரும்பப்பட முகாந்திரங்களே அற்றவன் என்று நம்பிக் கொண்டிருக்கிறேன்,
ஆதலால் தான் கண்மணி
உன் பிரியங்களை
கூண்டில் ஏற்றி விசாரிக்கிறேன்
எதைக் குறையெனச் சொல்லிச் சொல்லி எனை நிராகரித்தார்களோ
அதை உன்னிடம் மீண்டும் மீண்டும் குறிப்பிட்டு
அப்படியுமா என்னைப் பிடித்திருக்கிறது? என்று உறுதிசெய்துகொள்கிறேன்.
யாருமே விரும்பவில்லை என்பதற்கு கவலையுற்றதை விட
நீ என்னை விரும்புகிறாய் என்பதற்கு அதிகம் கவலையுறுகிறேன்
அன்பே இலாத தனிமைப் பயத்தை விட
அன்பின் பொருட்டு எழும் பயம் பெரிது.
நீ நிலைப்பாயா எனப் பயந்து உன்னைப் பற்றிக் கொள்ளும் தீவிரத்தில்
காயப்படுத்தி விடுகிறேன்.
என்னை மன்னி.
என்னை விரும்பாதே
என்னை விட்டுப்போ
ஐ லவ் யூ.