என் அன்பே
என் அன்பே
உன் விழிச்சூரியன் கண்டு மலர்ந்திடும் என் முகத்தாமரை!
உன் ரோஜா இதழ்கண்டு மொய்த்திடும்
என் கருவண்டு கண்கள்!
உன் நாசிவீசிடும் தென்றல் தீண்டி
பறந்திடும் என் கருங்கூந்தல்....
உன் கனிவாய் திறந்திட இனித்திடும்
என் பளிங்கு கன்னங்கள்
உன் மென்கரங்கள் அணைத்திட சிலிர்த்திடும் என் மலர்தேகம்...
நெஞ்சுக்குழி படபடக்க...
மனசு கிடந்து தவிதவிக்க....
இதயம் தானாய் துடி துடிக்க....
வழிமேல் விழி வைத்துக் காத்துக் கிடக்கிறேன்!
உன் கால்கள் போன திசையை நோக்கி பார்த்து தவிக்கிறேன்!
நீ கொடுத்த நினைவுகளை நெஞ்சுக்குள் மூடி சுமக்கிறேன் !
வந்து விடு.... என் அன்பே!
காதலை தந்து விடு!

