சூரிய காதலி
சூரிய காதலி
நான் சுட்டரிக்கும்
அக்னியின் வெப்ப கதிர் தான்
என்றும் பிரகாசிக்கும்
சூரியனின் காதலி தான்
அதனால் என் வார்த்தைகளும்
வெப்பத்தின் தாக்கத்தினில்
உன்னையும் சுட்டிடலாம்
அதனால் நீ தள்ளியே இரு
என் கரந்தீண்டிட நினைத்தாலும்
தீயின் நாக்குகளாய்
உன்னை சுட்டரிக்கலாம்
என் காதலின் வலிமையறிந்திட
இதுவல்ல நேரம்
உனக்கு
கேள்விகளுக்கு பதில்களை
நான் சொல்லாமலே நீ
புரிந்து கொள்ளும் போது
என் காதல் உனக்குப் புரியும்.