சொல்ல நினைத்தது
சொல்ல நினைத்தது


ஒற்றைச்சங்கின் ஒலியாக
அலைகளின் ஒலியாக
காற்றினில் கலந்து ஒலித்தது
உன்னோடு நான் சொல்ல நினைத்தது
மெல்லிய மலரிதழ்களில் ரீங்கரிக்கும்
தேனீக்கள் சுமந்திடும் மகரந்த துகள்களாய்
என்னுள் உன்னுடைய நினைவுகள்
நறுமணம் வீசும் மாலைத் தென்றலில்
துவண்டு நான் நிற்கும் போதினில்
கண்களின் பார்வையாக உன் குரலில்
உலகினை நான் காணும் பொழுதுகள்
இரவினையும் பகலாக்கும்
ஆழ்கடலின் ஓசை அதிர்வுகளில்
உதித்தெழும் சூரிய சந்திரனாய்
குளிர்ந்திடும் கிரணங்களாய்
என்னுள் நிறைந்தாய்!