சிறைபிடிக்கப்பட்ட சீதைகள்
சிறைபிடிக்கப்பட்ட சீதைகள்
பிறர் நாவின் சுவையறிந்து சமைத்தவள்,
தன் நாவின் சுவை மறந்ததேனோ?
பிறர் பசியினை போக்கி வாழ்த்தவள்,
தன் பசி தீர புசிக்க மறந்ததேனோ?
பிறர் ஆரோக்கியத்தினை ஆராதித்தவள்,
தன் ஆரோக்கியத்தினை அறவே மறந்ததேனோ?
பிறர் கனவின் வழிகாட்டியாய் நின்றவள்,
காலமெல்லாம்...
சமையலறையில் சிறை பிடிக்கப்பட்ட சீதையாய் வாழ்வதேனோ?