செங்காந்தள் மலரினைப் போன்ற காதல்!
செங்காந்தள் மலரினைப் போன்ற காதல்!
செங்காந்தள் மலரினைப் போன்ற அழகுள்ள எனது காதலியுடன் நான் நட்புடன் பழகும்பொழுது!
செங்காந்தள் மலரின் இதழ்களைக் கொண்டுள்ள எனது காதலியினை நான் நினைக்கும்பொழுது!
செங்காந்தள் மலர்ச் சாலையில் எனது காதலி நடந்து வரும்பொழுது!
செங்காந்தள் மலரினைப் போன்ற புன்னகையுடன் எனது காதலி என்னுடன் பேசும்பொழுது!
செங்காந்தள் மலரின் நிறம் கொண்ட பட்டுப் புடவையினை எனது காதலி அணிந்து கொண்டு சாலையில் செல்லும்பொழுது!
செங்காந்தள் மலரின் அழகுக்கு நிகரான தூயத் தமிழ்ச் சொற்களைக் கவிதை எழுதுவதற்காக நான் தேடித் தொடர்ந்து அலையும்பொழுது!
செங்காந்தள் மலரினை என் காதலியிடம் கொடுத்து நான் செம்மையாகப் பேச முற்படும்பொழுது!
செங்காந்தள் மலரின் நிறத்தில் உள்ள காகிதத்தில் அனைத்துக் கவிதைகளையும் தொகுத்து எழுதி வைக்கும்பொழுது!
செங்காந்தள் மலரினை தலையில் சூடிக் கொண்ட என்னவள் எனது காதல் கவிதைகளைக் கையில் வைத்திருக்கும்பொழுது!
செங்காந்தள் நிறப் பேருந்தில் அமர்ந்து கொண்டு எனது காதல் கவிதைகளைப் படிக்கும்பொழுது!
செங்காந்தள் மலரினை நான் கையில் ஏந்திக் கொண்டு நான் எனது காதலியினை நினைத்துக் கொண்டு இருக்கிறேன்!

