அவளுக்கு எப்படி சொல்வேன்
அவளுக்கு எப்படி சொல்வேன்
திருமணத்துக்கு பிறகு
அவள் சொன்னாள்,
நீ சிரிக்கும் போதும்
உன் கன்னத்தில் விழுந்த குழியிலும்,
கவிதை என்னும் பெயரில் வார்த்தைகளில் நீ செய்த வசியத்திலும் தான் நான் விழுந்துவிட்டேன் என்று!
பாவம்!
அவளுக்கு எப்படி சொல்வேன்?
அவள் தான் என் வார்த்தைகளுக்குள் வன்முறை ஏற்படுத்தியவள் என்று!
என்னை பார்க்கும் போது,
வெட்கத்தால் கட்டை விரலில்
அவள் போட்ட கோலம் தான்
என் இதயத்தில் அவள் வரைந்த முதல் காதல் ஓவியம் என்று!
அவள் அழகிய விழிகளின் நடனமும், சிரிப்பின் அலைகளும் தான்
ஆயிரம் காதல் கடிதம் எழுதியது என் இதயத்தில் என்று!...