அவசரக்காரி
அவசரக்காரி

1 min

502
நானுன்னை உதாசீனம் செய்தேன், அலட்சியப்படுத்தினேன், என்னைவிட்டு எங்கே போய்விடப்போகிறாய் என்றுதான் பொருட்படுத்தாமல் இருந்தேன் பொறுத்துப்பார்த்த நீ ''போகிறேன்'' என்று விடைபெற வந்தபோது உன்னை நிறுத்த என்னிடம் நியாயங்களே இல்லை.
''போகாதே'' என்னும் சொல்லைச் சுமந்தபடி தலைகவிழ்ந்து நிற்கிறேன்,
என் கலக்கம் அறிந்து அருகில்வந்து என்னை நிமிர்த்தி ''போகவிடாதே'' என்கிறாய்
''என்னை பத்திரமா வச்சிக்கோ'' என்கிறாய்
இம்முறையாவது நான் மன்னிப்பு கேட்டதற்கு பிறகு நீயென்னை மன்னித்திருக்கலாம்.
அவசரக்காரி நீ! கோபத்திலும்
அன்பிலும்
மன்னிப்பதிலும்...