அன்பின் கண்ணீர் துளிகள்
அன்பின் கண்ணீர் துளிகள்
காற்றிலே வீசும் மணம் போல்
என்னை வந்து பற்றிக்கொண்டாயே.......
இன்றோ..உன்னை தவிர்க்க முடியாமல்
துடித்துக் கொண்டு இருக்கிறேன்....
நான் சிந்தும் கண்ணீர் துளிகள்
ஒவொன்றையும் கேட்டுப்பார்...
உன்மேல் வைத்த அன்பும், உன் பிரிவை தாங்கமுடியாமல்
தத்தளித்துக் கொண்டு தவிக்கிறது ...
கண்ணீர் கடலாய் சென்றிருக்கும்
நேரத்தில் கூட ....
ஒவ்வொரு
துளிகளிலும் உன் அன்புமுகம்
மட்டுமே தெரிகிறது....
என்றும் நீ
என் மனதில் நினைவு அலைகளாய்
ஓடிகொண்டே இருப்பாய்......
அன்புக்கு ஏது எல்லை...