STORYMIRROR

Vignesh Swamynathan

Romance

3  

Vignesh Swamynathan

Romance

அன்பிலே!!!

அன்பிலே!!!

1 min
241

வானின் நீலம் போல

நீயென் வாழ்வில் சேர

சோகம் யாவும் இங்கே

மேகம்போல் ஓடுதே...

வாழ்வின் தூரம் மட்டும்

காதல் நெஞ்சில் சொட்ட

காணும் யாவும் இங்கே

கனவாக மாறுதே.....

வானவில் பூவாய் நீ,

வந்தாய் பெண்ணே..

வாசனை நாட்கள் நீ,

தந்தாய் கண்ணே..

பூந்தென்றல் தேராய் நீ,

எந்தன் முன்னே..

தும்பிகள் வருமே இனி,

உந்தன் பின்னே..

தாவரம் நான் நீரின்றி வாட,

தா’ வரம் நீ என்வேர் வாழவே...

உன் காலைகள் என் மார்பிலே

என் நெஞ்சில் உன்னைப் போர்த்துவேன்..

நீ மாலையில் தோள் சாய்ந்திட

நான் என்னில் உன்னை ஏந்துவேன்..

காற்றில் ஆடும் நூல்பொம்மை போல

உன்கையில் நானும் ஆகிறேன்..

உன் கைவிரல் எனைக் கைவிட்டால்

அப்போதே இற்றுப் போகிறேன்..

சாயும் அந்தி நேரம்- தோள்

சாய்ந்த கண்ணில் ஈரம்

பாரம் நெஞ்சில் தேவையில்லை

தூரம் போவோம், அன்பிலே..

 


Rate this content
Log in

Similar tamil poem from Romance