அவள்!!
அவள்!!


அவள்,
பொம்மை பார்த்த மழலைச் சிரிப்பு..
பனியில் நனைந்த உடல் துவட்டா பன்னீர்ப்பூ...
அரிசிமாக் கோலமிடும் அன்னபூரணி..
ஆரணி கட்டிவரும் அழகுத்தாவணி..
ரவிக்கை அணிந்த இராணுவ எறும்பு..
தோகை இல்
லா இருகால் கரும்பு..
உள்ளம் தூண்டும் ஆதி ..ஆப்பில்
உருவக் கூட்டில் கனடா மேப்பில்..
மூச்சுவிடும் முழுமதி..
முன்கோபத் திருமதி..
இருப்பினும், இறைதந்த வெகுமதி..