கரைக்காதே
கரைக்காதே


மங்கையவள் சிந்திய
கண்ணீர்ப்பொறிகள்..
பட்டுப் பற்றியெறிந்தன
என்மார்பின் திரிகள்...
அறிந்துகொண்டேன் நான்..
நெருப்பிலும் உண்டு தண்ணீர்
அதன் பேர் “கண்ணீர்”..
ஏ... சந்தனப் பெண்ணே!!
இனி உன் கந்தகக் கண்கள் கரைக்காதே..
அதில் காவிய உண்மை உரைக்காதே..