அப்பனே!!
அப்பனே!!


உயிருக்கு முதலாய் உன்னைத் தருவாய்..
உலகைத் தொட்டபின் ஊக்கம் தருவாய்..
ஊர்ந்து விளையாட தேகம் தருவாய்..
ஊக்கம் குறைந்தால் உத்வேகம் தருவாய்..
கலைகள் நான்கற்க அறிவைத் தருவாய்..
கவலையில் நானிருக்க ஆற்றுதல் தருவாய்..
உய்வு நான்பெற உன்வளம் தருவாய்..
சாதித்து மகிழ்கையில் சாந்தம் தருவாய்..
k;"> மேதினியில் எனக்கென மேன்மைகள் தருவாய்..
இறுதியில்,
என்மகவுக்கு உன்பெயரையும் விட்டுத் தருவாய்..
யார் கண்டது??
என்மகவாய் ஒருமுறை மீண்டும் நீயே வருவாய்!
அன்பின் வாசல் அன்னை என்றால்,
அதன் முகவரி “அப்பனே”!!!