அன்பின் ஆத்மா!!
அன்பின் ஆத்மா!!


ஐயிரண்டு மாசம் நம்ம..
அழகாத்தான் பெத்திடுவா..
கருப்பட்டி நிறம்னாலும்..
கதிருபட போத்திடுவா..
வஞ்சனைய தள்ளிவெச்சு.
பஞ்சணையில் என்னவெச்சு..
கண்ணுறங்கி போனபின்னும்..
காவலுக்கு கண்முழிப்பா..
ஆத்திரத்தில், ஆதியில அடிச்ச கைய..
அந்தியில நொந்துக்குவா..
பள்ளிக்கூடம் முடிச்சு வந்தா..
பால்சோறு தான் கொடுப்பா..
பாஸ்மார்க்கு வாங்கி வந்தா.
Advertisement
.
கன்னத்தில வாய்பதிப்பா..
சொன்னாலும் தெரியாம..
பார்த்தாலும் புரியாம..
மகவு செஞ்ச வித்தயெல்லாம்..
மனசுக்குள்ள புத்தகமா போட்டுவைப்பா ..
பொசுக்குனு தான் நோவு வந்தா..
பொழுதுக்கும் புலம்பி தீர்ப்பா..
ஆவியா நீ போனதும் தான்..
பாவி மக.. மவுசு அறிஞ்சேன்..
இந்த பாவத்த பெத்தெடுத்த புண்ணியம் நீ, நான் தெளிஞ்சேன்..
அரிதாரம் பூசாத அன்பின் ஆத்மா, அம்மா!!