கனவு மெய்ப்பட வேண்டும்!!!
கனவு மெய்ப்பட வேண்டும்!!!
காற்று வீசிட வேண்டும்.. அதில்,
கண்டம் தாண்டிட வேண்டும்..
மின்னல் தோன்றிட வேண்டும்.. அதில்,
மின்குறை நீங்கிட வேண்டும்.
விஞ்ஞான வளர்ச்சி வேண்டும்.. அதில்,
விவசாயம் வளர்ந்திட வேண்டும்..
விதைகள் விருட்சமாக வேண்டும்.. அதில்,
இயற்கை வீரியம் இருந்திடல் வேண்டும்..
மண்மிசை வளங்கள் வேண்டும்.. அதில்,
மரங்கள் வாழ வேண்டும்..
"color: black;">அறிவுச் சபைகள் வேண்டும்.. அதில்,
ஆன்றோர் அமர்ந்திட வேண்டும்..
சத்திரம் சாலைகள் வேண்டும்.. அதில்,
சமத்துவம் நிச்சயம் வேண்டும்..
மாந்தருள் வேந்தன் வேண்டும்.. அவன்,
மானுடம் போற்றிட வேண்டும்..
இதை,
நானிலம் ஏற்றிச் செல்லும்..
அன்று, லட்சியம் நிச்சயம் வெல்லும்!!!
#கனவு மெய்ப்பட வேண்டும்!!!