விழியே.. வழியே.. வலியே..
விழியே.. வழியே.. வலியே..


கலைந்த கனவும், மறந்த உறவும்..
மீண்டும் கிடைக்குமா?
என் கடந்தகால வாழ்வு எனக்கு
திரும்ப நிலைக்குமா?
காலம் கடந்து போச்சு..
என் காயம் மரத்துப் போச்சு..
மண்ணின் மேலே நடக்கும் உடலும்
மிருதம் ஆகிப் போச்சு..
தாண்டி வந்த பாதையில்
பூக்கள் இல்லையே..
என் இறுதிச்சுற்றில் பார்க்கிறேன்
ஈக்கள் இல்லையே..
வழியைக் காட்டிப் போனாய்.. கண்ணில்
வலியைக் கூட்டிப் போனாய்..
சேருமிடம் சொர்க்கம் என்று.. இந்த
நரகில் தள்ளிப் போனாய்..
விழியே.. வழியே.. வலியே..