அக்கா
அக்கா
அவளை முதல் முறை
அப்படி பார்த்தேன்
இரு கையை வணங்கியபடி
பட்டுப் புடவை
கழுத்தில் அழகிய மாலை
கலர் கண்ணாடி வளையல்கள்
தலை நிறைய மல்லிகைப் பூ
பெரிய சிவப்பு பொட்டு
மணக்கோலத்தி்ல் அல்ல
பிணக்கோலத்தில்!!!😭
உன் தலைவிதியை
இப்படி எழுதியதற்கு
எழுதாமலே இருந்திருக்கலாம்!!!
மறு பிறவியிலாவது
நீள் ஆயுள் கொண்டு
மணக்கோலம் பூண்டு
மனம் மகிழ்ந்து நீ வாழ வேண்டும்!!!