வண்ணம் ஒன்று..
வண்ணம் ஒன்று..
வண்ணம்
விக்கி உறக்கத்தில் புரண்டு படுத்து கொண்டு இருந்தான்.அது அதிகாலை நேரம்.அவன் பெங்களூரில் ஒரு மனித வள மேம்பாட்டிற்காக ஒரு நிறுவனம் நடத்தி வந்தான்
இத்தனை காலம் அமெரிக்காவில் பிறந்து வாழ்ந்து படிப்பை முடித்த பிறகு,அவன் படித்த மேலாண்மை பட்டப்படிப்பை தன் சொந்த தாய்நாட்டில் பயன் படுத்த நினைத்து வந்து பெங்களூரில் அவனும் ஒரு நண்பனும் சேர்ந்து இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள்.
அவன் பெற்றோருக்கு ஒரே மகன்.
திருமண வயதை எட்டிய விட்டதால்,
பெற்றோர் திருமண ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சொல்லஇவனும்,தனக்கு ஒரு பெண்ணை தேடி காதலித்துஅவளுடன் நேரம் செலவிட பொறுமை இல்லை,
நீங்களே இங்கு வந்து ஒரு பெண்ணை பாருங்கள்,உங்களுக்கு பிடித்து இருந்தால் போதும் என்று சொல்லி விட்டான்.
அதற்காக அவனுடைய பெற்றோர்கள் விடுமுறை எடுத்து கொண்டு,இந்தியா புறப்பட்டு உள்ளார்கள்.இன்று மாலைக்குள் பெங்களூர் வந்து விடுவார்கள் என்று எதிர்பார்த்தான்.துபாயில் இணைப்பு விமானம் உடனே கிடைத்தால் தாமதம் இருக்காது.மேலும் அவனுடைய தந்தைக்கு சற்று ஓய்வு தேவை பட்டது.அதிக பட்சம் பத்து மணி நேரத்திற்கு மேல் அவரால் உட்கார்ந்து பயணிக்க முடியாது.
தாமதத்திற்கு அதுவும் ஒரு காரணம்.
விக்கி அதிகாலையில் உறக்கத்தில் ஒரு கனவு கண்டான்.அவனுக்கு பிடித்த இளம் சிவப்பு,அந்த இடத்தை சுற்றி பரவி இருந்தது.ஆனால் எப்போதும் அது அவனுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் அந்த சூழ்நிலை,கனவில் ஏனோ ஒரு அழுத்தத்தை கொடுத்தது.இளம் சிவப்பு,அடர் வண்ணமாக மாறி எங்கு பார்த்தாலும் இரத்தம் தோய்ந்த காட்சிகள் அவன் கண்ணை உறுத்தியது.பாதி வழியில் பெற்றோர் பயணித்து கொண்டு இருக்கும் போது,அந்த அடர் நிறம் ஏதோ விபத்தை குறிப்பது போல தோன்றியது.
தூக்கம் சட்டென்று கலைந்தது.
அவன் பக்கத்தில் சார்ஜில் போட்டு இருந்த போனை வயரில் இருந்து இழுத்து எடுத்து,ஏதாவது செய்தி வந்து இருக்கா என்று பார்த்தான்.மனதில் உள்ளூர அப்பாவுக்கு ஏதாவது உடல்நல பிரச்சனை வந்து இருக்குமா என்று கவலை பட்டான்.
காரணம் அந்த கனவு.அதிகாலை விமான நிலையம் சென்று சேர்ந்து விட்டதாக செய்தி அனுப்பி இருந்தார்.
விமானம் புறப்பட இன்னும் நேரம் இருந்தது.அப்பாவை கூப்பிட்டால் அவர் பதில் அளிக்கவில்லை.அம்மா நல்ல நேரத்திலே போனை எங்காவது. வைத்து விடுவார்கள்.
பயணம் என்றால் சொல்லவே வேண்டாம்,அதை அணைத்து தோளில் மாட்டும் பையில் போட்டு விடுவார்கள்.
ஆனால் நல்ல வேளை அம்மா போனில் மணி அடித்தது,ஆனால் எடுக்கவில்லை.
விக்கி மிகவும் பதட்டம் அடைந்து விட்டான்.இனியும் விமானத்தில் ஏறவில்லை என்று புரிகிறது.
ஏற்கனவே விமானம் தாமதம்.மேலும்
தாமதம் ஆக வாய்ப்பு இல்லை.
போனை எடுத்து துபாய் விமான நிலையத்தை தொடர்பு கொண்டு
பேச நினைத்தான்,ஆனால் தொடர்பு
கிடைக்கவில்லை.சூழ்நிலை அவனை மேலும் குழப்பம் அடைய வைத்தது.விக்கி பயந்தது போலஅப்பா அம்மா இருவரும் ஒரு விபத்தில் சிக்கி இருந்தார்கள்.
விமான நிலையம் அருகே அவர்கள் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து தலை கீழாக,கவிழ்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில்….
இது கனவாக இருக்க கூடாதா என்று நினைத்து கொண்டு இருந்தான் விக்கி.நாமும் அப்படியே நினைப்போம்
முற்றும்.
