Lakshmi Renjith

Drama Inspirational Children

4.8  

Lakshmi Renjith

Drama Inspirational Children

வெற்றி செல்வன்

வெற்றி செல்வன்

2 mins
243


வடுகப்பட்டி ஒர் சிறிய கிராமம் அந்த கிராமமே திருவிழா போல் மக்கள் கூட்டம் கூட்டமாக பஞ்சாயித்திற்கு சென்று கொண்டு இருந்தனர். அதற்கு காரணம் வெற்றி செல்வன். 

ஆம் அவன் அந்த மாவட்டத்திலேயே ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று அங்3யே அதிகாரியாக பதவி எற்றதே காரணம். 

அதற்கு அவ்வூர் மக்கள் ஒன்று சேர்ந்து அவனுக்கு பாராட்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். அதற்கு தான் இந்த திருவிழா கூட்டமே. 

மேடையிலிருந்த வெற்றி செல்வன் கீழே அமர்ந்திருந்த அவனுடைய வரலாறு ஆசிரியரை கண்ட, உடனே கீழே இறங்கி சென்று அவரிடம் ஆசிர்வாதத்தினை பெற்றுக் கொண்டான். 

மேலும், அவனுக்கு பரிசினை வழங்கும் போழுதும் அதை அவன் அந்த ஆசிரியர் கையினால் வாங்கிகொள்ள ஆசைப்பட்டான். 

அதற்கான காரணத்தை அந்த மேடையிலேயே அவன் கூற தொடங்கினான். 

இது அவன் எட்டாவது படிக்கும் பொழுது நடந்தது. அவன் எட்டாவது படிக்கும் போது அவனுடைய வரலாறு ஆசிரியரை அவனுக்கு வகுப்பு ஆசிரியாராக இருந்தார். 

அப்பொழுதெல்லாம், வெற்றி செல்வனுக்கு, ஓரே எண்ணம் தான், அஃதாவது, என்ன தவறு வேனாலும் செய்து வெற்றி பெறுவதே. 

அரையாண்டு தேர்வும் வந்தது, அவன் எப்பொழுதும் போல, காப்பி அடித்த் தேர்வினை எழுதிக்கொண்டு இருந்தான், பல நாள் திருடன் ஒருநா‌ள் அகபடுவான் என்பது போல, இதனை தலைமை ஆசிரியர் கவணித்துவிட்டார், 

அந்த பள்ளியில் ஓரு பழக்கம் யாரவது எந்த தவறாவது செய்தால் அதை அஸம்பளியில் பலர் முன்னிலையில் தண்டிக்கபடுவார். 

இது வெற்றி செல்வனுக்கு தெரியாது, ஏன்னென்றால் இவன் அந்த பள்ளியில் சேர்ந்தே அந்த ஆண்டுத்தான். 

மாட்டிக்கொண்ட அடுத்த நோடிய மாணவர்களை அஸம்பளிக்கு அழைக்கப்பட்டனர், மேடையில் அவனை அடிப்பதற்கு, தலைமை ஆசிரியர் தயாராக நின்று இருந்தர், வெற்றியை அழைத்தனர், அனால் அவனுக்கு பதில் அவனுடைய வகுப்பு ஆசிரியர் அந்த தண்டனைய வாங்க முன் வந்தார். 

நான் சரியாக பாடம் சொல்லி கொடுக்காததினால் தான் அவன் அந்த தவறினை செய்தான், அதனால் தண்டனைய தனக்கு தறுமாறு விவாதம் செய்து, முடிவில் தண்டனைய பெறுவதற்கும் தயார் ஆனார், 

அதை கவணித்த வெற்றிக்கு கண்ணீர் வர அரம்பித்து, உடனே தன் தவறினை உணர்ந்து, அதற்கு தனக்கே தண்டனைய கொடுக்குமாறு அழதான், இனி இவ்வாறு செய்யமாட்டேன் என்றும் கூறிறான். 

ஆனால் இதை எதையும் தலைமை ஆசிரியர் காதில் வாங்குவதாக இல்லை, அவர், வரலாறு ஆசிரியரின் கையில் அடித்தார். 

இந்த நிகழ்வுக்கு பிறகு வெற்றி செல்வன், எப்பொழுதுமே நேர்வழியிலேயே வெற்றி பெறுவேன் என்று உறுதி எடுத்துக்கொண்டு சாதித்துக்காட்டினான். 

எப்படிப்பட்ட மாணவனையும், ஓரு நல்ல ஆசிரியரால் உறுவாக்கமுடியும் என்பதற்கு, வெற்றி செல்வனின் வாழ்க்கையே ஒரு சான்று. 


Rate this content
Log in

Similar tamil story from Drama