பயணச்சீட்டை காட்டு
பயணச்சீட்டை காட்டு
என்னுடைய முதல் ரயில் பயண அனுபவத்தை இப்பொழுது நினைத்துப்பார்த்தாலும் திகில் நிறைந்த சிரிப்புத்தான் வரும்.
எண் வீடு சென்னையில் உள்ள பரங்கிமலையில் உள்ளது. . நான் பன்னிரெண்டாம் வகுப்பு முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். கல்லுரியில் சேருவதற்காக குரோம் பேட்டையில் உள்ள வைனவ கல்லுரியில் விண்ணப்பம் வாங்க நானும் என் நன்பியும் ரயில் நிலையத்திற்கு முதல் முறையாக சென்றோம்.
நாங்கள் சென்ற பொழுது, தாம்பாரம் நோக்கிச் செல்லும் ரயில், பயணச்சீட்டு வாங்கி கொண்டு வரும் வரை நடைமேடையில் நின்றுக்கொண்டே இருந்தது.
ஆதலால் அந்த ரயிலில் நாங்கள் இருவரும் ஏறி அமர்ந்து கொண்டோம். ரயிலும் புறப்பட்டது,
ரயில் புறப்பட்டபிறகுத்தான் நாங்கள் கவணித்தோம் அது பீச் நோக்கி செல்வதை. நாங்கள் இருவரும் என்ன செய்வதன்று சிறிது நேரம் புலப்படவில்லை.
பிறகு பக்கத்தில் இருந்தவர்களிடம் விசரித்தப்பொழுது தான் தெரிந்தது, அந்த ரயில் பரங்கிமலையிலிருந்து தாம்பரம் செல்லாது, அந்த நேரத்திற்கு அது திரும்ப பரங்கி மலையிலிருந்து பீச்சுக்கு போகும் என்பது.
பிறகு அடுத்து வந்த கிண்டி நிறத்தில் இறங்கி கொண்டோம். அடுத்த வண்டியை பிடித்தாவது குரோம்பேட்டை செல்லவேண்டும், ஆனால் அந்த வண்டிக்கு எங்கு நிற்பது என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் திருதிருவென முழித்து கொண்டு இருந்தோம்
இதை கவணித்த ரயில் பரிசோதகர் எங்கள் இருவரையும் அழைத்து பயண சீட்டை காட்டசொன்னர்.
எங்களிடமிருந்த குரோம்பேட்டை பயடசீட்டை காண்பித்துவிட்டு நடந்தை கூறினோம்.
பிறகு அவர் வண்டியில் ஏறம் முன்பு வண்டிக்கு முதல் பெட்டியிலும் கடைசி பெட்டியிலும், ரயில் அடையும் கடைசி நிறுத்தை எழுத்தில் குறிப்பு இருக்கும் அஃதாவது- தாம்பாரம் நோக்கி செல்லும் வண்டியில் 'T' என்ற எழுத்தும் பீச் நோக்கி செல்லும் வண்டியில் 'B' என்ற எழுத்தும் இருக்கும் என்று கூறினார்.
பிறகு திரும்ப குரோம்போட்டைக்கு வேறு பயணச்சீட்டு வாங்கிக்கொண்டு செல்லுமாறு அறிவுரை கூறி அனுப்பினார்.
அதன் பிறகு முதல் நான் எப்பொழுது வண்டி எறினாலும் சரியாக பார்த்துவிட்டு தான் ஏறுவேன். இது முதல் பயணமாக இருந்தாலும் எங்களுக்கு ஓரு அனுபவத்தை தந்தது.
