Lakshmi Renjith

Drama Inspirational Others

4.8  

Lakshmi Renjith

Drama Inspirational Others

ஆசிரியர் பயிற்சி...

ஆசிரியர் பயிற்சி...

2 mins
322


இன்று நான் ஒரு தனியார் பள்ளியில் மேல் நிலை ஆசிரியாராக பணிப்புரிகிறேன். 

ஆசிரியர் பயிற்சியினை முடித்த என் அனுபவத்தை கூற உள்ளேன். 

 என் பெற்றோருக்கு ஆறு பெண் பிள்ளைகள், அதில் நான் இரண்டாவது மகள். எனக்கு நிறைய படிக்க வேண்டும் என்று ஆசை. 

பெற்றோர் என்னை பி. எஸ். ஸி. கணிதம் வரை படிக்க வைத்தனர், அதன் பிறகு, நான் வேலை செய்து கொண்டே தொலைதூர கல்வி மூலம், எம். எஸ. ஸி மற்றும் M. Phil., கணிதம் வரை முடித்த நான், சென்னன குரோம் பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மேல் நிலை ஆசிரியாராக பணியாற்றினேன். 

ஆனால் மேல்நிலை ஆசிரியாராக தொடர வேண்டுமென்றால், நான் ஆசிரியார் பயிற்சினை முடித்து இருக்கவேண்டும். 

என் வீட்டின் நிலமை அறிந்த தலைமை ஆசியார் சீனிவாசன் ஐயா அவர்கள் முன் வந்து என்னை மேற்கொண்டு படிக்க வைத்தார், 

 ஆசிரியர் பயிற்சியை நான் IGNOU வில் சேர்ந்தேன். அதில் எனக்கு கவுன்சிலிங் படி புதுக்கோட்டையில் உள்ள ஆசிரியர் பயிற்சியில் இடம் கிடைத்தது. 

அதில் மே மாதத்தில் 12 நாள் கட்டாய பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள வேண்டும், அப்பொழுது தான் செய்முறை மதிப்பென் கிடைக்கும். 

முதலாம் ஆண்டு பயிற்சி வகுப்பும் வந்தது அந்த பயிற்சி வகுப்பினை என் வாழ் நாளில் மறக்க முடியாத அனுபவத்தை தந்தது. 

திருமணம் முடிந்து ஓரு வாரத்திற்குள் என்னுடைய ஆசிரியர் பயிற்சி வகுப்புக்கு செல்ல வேண்டிய நிலை. வகுப்புக்கு முதல் நாள் என் கணவரே, அந்த பயிற்சி கல்லுரி வரை வந்து என்னைவிட்டு சென்றார். அது முதல் வரை எனக்கு எங்கேயும் சென்று தங்கிய அனுபவமில்லை. 

என் சொத்தம் பந்தம் அனைவரையும் விட்டு, புதுக்கோட்டையில் முதல் முறை தங்க வேண்டிய சுழல், அப்படி இருக்க, அந்த பயிற்று கல்லுரியிலோ முதல் நாள் அங்க தங்க அனுமதி இல்லை என்று கூறிவிட்டனார். 

வெளி இடத்தில் தங்கி பழக்கமில்லாத எனக்கு, கண்ணகட்டி காட்டில் விட்டதை போன்று இருந்தது. 

என்னை போன்று 100 மாணவர்கள், பல்வேறு மாவட்டத்திலிருந்து வந்து இருந்தனர், அனைவரும் சென்று பேசி அங்கு தங்க அனுமதியும் பெற்றுவிடுடோம், ஆனால் அது இரண்டாம் நாள் முதல்  அங்கு உள்ள விடுதியில் தங்கி கொள்ளாம் என்று கூறிவிட்டனர். அன்றைய தினம்? 

பிறகு, திரும்ப பேசி அங்கு உள்ள Hall யில் தங்க அனுமதி பெற்றோம், பெண்கள் உள்ளேயும் ஆண்கள் வெளியையும் தங்கி கொண்டோம். 

வெளி மாவட்டத்திற்குச் சென்று, இப்படி தங்க கூட இடம் இல்லாமல் இருந்ததை இப்பொழுது நினைத்து பார்த்தாலும்  ஒரு பெரு ஆச்சிரியமாகத்தான் இருக்கும்.

அதற்கு பிறகு, 12 நாட்கள் தங்கி பயிற்சி வகுப்பினை வெற்றிகரமாக முடித்தேன். 

இரண்டாம் ஆண்டு  அந்த 12 நாள் பயிற்சிக்கு செல்லும் நான் நான்கு மாத கற்பமாக இருந்தேன், அது வேறு மாறியான அனுபவத்தை தந்தது. 

இரடண்டாம் ஆண்டு தேர்வு எழுதும் பொழுது, எனக்கு என் மகன் பிறந்து இருபது நாளில் தேர்வினை எழுதினேன். அதுவும் ஓரு புதுவித அனுபவமாகதான் இருந்தது. 

ஆதனால், நம் வாழ்வில் எத்தகைய இடர்பாடுகள் வந்தாலும், அதைப்பற்றி சிந்திக்காமல் நாம் முன்னேறி சென்றால் வாழ்வில் வெற்றி என்பது ஊறுதி என்பது போல, நானும், ஆசிரியர் பயிற்சி படிப்பில் (B Ed) சிறப்பு முதலில்  (First class - distinction) வெற்றிப்பேற்றேன். 



Rate this content
Log in

Similar tamil story from Drama