லாக் டவுன் கற்று கொடுத்த பாடம்
லாக் டவுன் கற்று கொடுத்த பாடம்


நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஆசிரியாராரன எனக்கு இந்த லாக் டவுன் பல பாடங்களை கற்று கொடுத்தது.
அவற்றில் சில வற்றை பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.
1. மொபைல் கைப்பேசி பேசுவதற்கு மட்டுமே என்று நினைத்துக் கொண்டு இருந்த எனக்கு மாணவர்களுக்கு பாடமும் கற்றுக்கொடுக்க முடியும் என்று தெரிந்து கொண்டேன்.
2. வீட்டிலிருந்து வேலை என்பது ஐ. டி பணி செய்பவர்களுக்கு மட்டும் சொந்தம் என்று நினைத்து இருந்தேன், இல்லை மாணவர்களுக்கு பாடமும் எடுக்கலாம் என்று தெரிந்து கொண்டேன்
3. சம்பள உயர்வு என்று கேள்விப்பட்டு இருக்கிறேன், ஆனால் சம்பாளம் குறைப்பு என்பது என்னுடைய 20 வருட அனுபவத்தில் இதுவே முதல் தடவை ஆகும்.
4. எதற்கு வங்கி கடன் வாங்கி வீடு கட்டினோம், என்று கவலை, சம்பள குறைப்பினால். தவனையை கட்ட கஷ்டபடுவதினால்.
5. பள்ளிக்கு செல்லும் வரை வேலை நேரம் மாலை 5 மணி வரைக்கும் என்று இருந்தது ஆனால் இப்பொழுது எத்தனை மணி வரைக்கும் வேலை செய்கிறோம் என்று தெரியவில்லை.
6.. வேலைக்கு செல்லும் வரை வீட்டில் அனைவரும் சிறுசிறு உதவிகளை செய்தனார் ஆனால் இப்பொழுது நாம் வீட்டிலிருந்து வேலை செய்தாலும், நீ வீட்டியில் தானே இருக்க வேலை நீயே செய் என்று தான் கூறுகிறார்கள், அதனால் வீட்டின் வேலை மற்றும் பள்ளியின் வேலை என்று வேலையின் சுமை இரட்டிப்பானது தான் மிச்சம்.
7. என்னாலும் இந்த அளவுக்கு எழுத முடியும் என்று அறிந்து கொண்டதும் இந்த லாக்டவுனில் தான்.
இன்னும் பல பல...
எப்படி சிக்கனமாக குடும்பத்தை நடுத்துவது, கடனையும் அடைப்பது, என பல பல.