ஊரடங்கு
ஊரடங்கு


ராதை கண்ணனின் மனைவி.
அவள் காலை 5 மணிக்கெல்லாம் எழுந்து வாசலை திறந்து கோலம் போட்டு, காலை உணவை 7 மணிக்கெல்லாம் முடித்து, தன் ஒரே மகனை எழுப்பி அவனை பள்ளிக்குச் செல்ல தயர் படுத்தத வேண்டும்.
பிறகு கணவரை அலுவலகத்துக்கு அனுப்ப தயார் படுத்த வேண்டும்.
கணவர் மற்றும் மகனை அவர்களுக்கு வேண்டியவற்றை தயார் செய்து அலுவலகத்திற்கும், பள்ளுக்கும் அனுப்பிவிட்டு திரும்பி பார்த்தால் மணி 10 அஆகிவிடும்.
பிறகு வீட்டை சுத்தப்படுத்தி, துணி துவைத்து, பாத்திரங்களை கழுவி அப்படி, இப்படி என்று 1 மணியாகிவிடும்.
அப்புறம் ஒரு குட்டி தூக்கம் போட்டு எழுந்தால், துணிகளை மடித்து வைப்பது, வீட்டை சுத்தப்படுத்துவது, தன் மகனுக்காக, மாலை சிற்றுண்டி தயார் செய்வதற்கு, அவனுடைய ஆட்டோ சத்தம் கேட்கும்.
மகன் வந்தவுடன், அவனை குளிக்க வைத்து சிற்றுண்டி கொடுத்துவிட்டு, சிறிது நேரம் தொலைக்காட்சி அவனுடன் சேர்ந்து பார்த்து விட்டு 6 மணிக்கு படிக்க வைத்து, எழுந்துக்கும் பொழுது மணி 8 ஆகிவிடும்.
திரும்ப இரவுக்கு உணவு தயாரித்து, அதற்கு உள்ள கணவரும் வந்து சேர, மூவருமாக அமர்ந்து, இரவு உணவை முடித்துவிட்டு, பாத்திரங்களை சுத்தம் செய்த முடித்து வந்து படுப்பதற்கு மணி 11 ஆகிவிடும். அதற்குள் ள கணவனும் மகனும் உறங்கிவிடுவார்கள்.
இது, இன்று அல்ல நேற்று அல்ல திருமணம் ஆன நாள் முதல் இது தான் ராதை யின் வாழ்க்கை.
ஓய்வின்றி இருந்த அவளுடைய வாழ்க்கையில், இயற்கை அருளிய ஒரு pause button தான் கொரோனா.
அரசாங்கம் கொடுத்த ஊரடங்கு யாருக்கு மகிழ்ச்சி இருக்குமோ¦ இல்லையோ¦ கண்டிப்பாக, ஓய்வின்றி உழைத்த குடும்ப பென்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் ஆகும்.