திறமைக்கு வயதில்லை
திறமைக்கு வயதில்லை
ஒருமுறை ஒரு விஞ்ஞானி குழந்தைகளுடன் ஓடியாடி விளையாடும் ரோபோட் ஒன்றை கண்டுபிடித்து கொண்டிருந்தார். ஆனால் அது எத்தனை முறை ஒழுங்கு படுத்தினாலும் அது வேலை செய்ய மறுத்தது. இரண்டு நாளாக முயற்சி செய்தும் அது சரியாகவில்லை.இதனால் ஆத்திரமடைந்த அந்த விஞ்ஞானி அந்த ரோபோட்டை தூக்கி வீசி விட்டார். அப்பொழுது விஞ்ஞானிக்கு சாப்பாடு கொண்டு வந்த அவரது மகன் அந்த நொறுங்கி விழுந்த ரோபோட்டை கையில் எடுத்து பார்த்தான் . அதில் ஒரு சிறிய மாற்றங்கள் செய்தால் ரோபோட் சரியாகிவிடும் என நினைத்தான். பள்ளிப்பருவ பையனாக இருந்தாலும் தன் தந்தையுடன் சேர்ந்து சிறு வயதிலேயே நிறைய விஞ்ஞான விஷயத்தை கற்றுக் கொண்டான். அவன் விஞ்ஞானியிடம் சென்று அப்பா இந்த இடத்தில் சிறிது மாற்றம் செய்தால் ரோபோட் சரியாகிவிடும் என கூறினான். விஞ்ஞானிக்கு கோபம் வந்தது சாப்பாட்டை ரோபோட்டின் மீது தூக்கி எறிந்து விட்டு தன் மகனையும் கோபத்தில் அடித்து விட்டார். மகன் அழுது கொண்டே அந்த உடைந்த ரோபோட்டை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றான். வீட்டிற்கு சென்றவுடன் அந்த ரோபோட்டை அவனும் சரி செய்து பார்த்தான். அதை சரி செய்ய அவனுக்கு ஒரு வாரம் எடுத்துக் கொண்டது. அதில் ஒரு இணைப்பு மட்டும் சரி இல்லாமல் இருந்தது. அதையும் சரி செய்தான். ரோபோட் வேலை செய்ய ஆரம்பித்தது. மகிழ்ச்சியுடன் அம்மாவிடம் " வேலையை நான் சுலபமாக முடித்து விட்டேன் அம்மா". எனக் கூறிக் கொண்டு ஆடிக் கொண்டே இருந்தான். அப்பொழுது அவன் அப்பா ஆராய்ச்சி அறையிலிருந்து ஒரு வாரம் கழித்து வ வீட்டிற்கு வந்தார். வந்தவுடன்" அன்னைக்கு தெரியாம அடிச்சேன் டா... சாரி... " என விஞ்ஞானி கூறவும், அவன் மகன் அந்த ரோபோட்டை எடுத்துக்கொண்டு அப்பாவிடம் காண்பித்தான். அவருக்கு ஆச்சரியம் நம்பமுடியவில்லை. "புலிக்கு பிறந்தது பூனையாகுமா" என விஞ்ஞானியின் மனைவி கூறினாள். விஞ்ஞானி சிரித்தார். "என் இத்தனை வருட உழைப்பை ஒரு வாரத்தில் சரி செய்து விட்டாய்" என்று கூறி தன் மகனின் கன்னத்தை பிடித்து கிள்ளினார். உங்கள் பாச மழையை நிறுத்தி விட்டு சாப்பிட வாருங்கள் என விஞ்ஞானியின் மனைவி இருவரையும் அழைத்தாள். விஞ்ஞானி அந்த ரோபோட் இருக்கு தன் மகனின் பெயரையே சூட்டினார். மறுநாள் உலகிற்கு அந்த ரோபோட்டை அறிமுகம் செய்யும் பொழுது 'இதுதான் என் தேவா" எனக்கூறி அறிமுகப்படுத்தினார். இதை தொலைக்காட்சியில் பார்த்த தேவா "என் பெயர்..." எனக் கூறி குதித்தான்.
