தாமோதரன் சாது

Drama Romance Others

4.4  

தாமோதரன் சாது

Drama Romance Others

ராமன் தேடிய ராவணன்

ராமன் தேடிய ராவணன்

3 mins
217



வணக்கம் அன்பான வாசக பெருமக்களே 🙏🏼 


தலைப்பைப் பார்த்து ராமன் தேடிய சீதை என்று வைத்திருக்கலாமே ! என்ற எண்ணம் உங்களுக்குள் உதயமாயிருக்கும்., எல்லாரும் போன பாதையிலும் நாம் ஏன் பயணிக்க வேண்டும் ? சற்று வித்தியாசமாக இருக்க வேண்டும் ! என்று இந்தத் தலைப்பை தேர்ந்தெடுத்தேன்.


மனிதன் கடளாவுகவும் , கடவுள் மனிதகவும் சித்தரிக்கபட்டதுதான் இந்த கம்பராமாயணம் , மனிதன் கடவுள் நிலை அடைந்தால் என்ன நிலையாகும்?? இறைவனால் கூட மனிதபிறவியாக வாழ முடியும் ! என்று இந்த காவியத்தில் சொல்லப்படுகிறது .


கம்பராமாயணம் ஆறு காண்டம் கொண்டது, இதில் நாங்கள் பயணித்த கிட்கிந்தா காண்டத்தை பற்றிய பதிவு இது ! இந்த கட்டுரை கம்பராமயணம் சில பதிவுகளும்மற்றும் எங்கள் பயண அனுபவத்தில் உருவானது .,,,இருப்பினும் இந்த பயணத்தில் நமது மக்களுக்கு என்னென்னவோ சொல்ல முயல்கிறேன் , புத்திமதியும் இல்ல , எச்சரிக்கையும் இல்ல எனக்கு தெரியும் அதனால் பயன்பெறாது என்று ., ! பேச தெரியாத மழலை மொழி அம்மாவை தவிர வேறயாருக்கும் புரியாத ஒன்று ..! அதே போல மழலை மொழி மற்றவர்களுக்கு ஏதோஒன்று சொல்ல துடிக்கிறது .... கற்றதையா! கற்றுக் கொண்டுருப்பதையா! தெரியவில்லை ..! இருப்பினும் தேடிக் கொண்டிருக்கிறேன் ...! தேடுதல் என்ற புதிய முயற்சி பயணம்...!


இந்த பயணம் வித்தியசமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நீதிமன்றத்தில் அநீதிக்காக வழக்கறிஞ்கர்கள் வாதடுவது போலவும்வீட்டு பெரியோர்களிடம் வாதடி வென்றேன் ! தர்மம் தோற்றது , நீதிதேவதை கண்ணை கட்டியிருக்கும்கொண்ட காட்சி மனத்தில் பிம்பமாக காட்சியளித்தது , ராமேஸ்வரத்துக்கு இரு சக்கர வாகனத்தில் செல்ல அனுமதி கிடைத்தது . 

தனிமை பயணம் இனிமையானது ஆனால் பயணத்தில் நண்பனுடன் செல்வது சுவராஸ்யமாக இருக்கும் என்றால் அது மிகையாகது.


நானும் என் நண்பன் முத்துகுமாரும் தூத்துக்குடியிலிருந்து இருசக்கர வாகனத்தில் (Tuticorin to rameshwaram bike ride) சகாச பயணத்தை தொடங்கினோம் , கடலோர சாலை பயணம் என்பாதல் கடல் அலைகள் ஆசிர்வதித்து வழியனுப்பியது , நட்பு என்ற உறவு இருப்பதால் வருணபாகவன் வெளிச்சம் கூட நிலா வெளிச்சம் போலிருந்தது , காற்று எங்களை உச்சி முகர்ந்து தலைகோதி எங்களுடன் பயணித்தது , வானத்தில் மேகக்கூட்டத்தோடு போட்டி போட்டு சென்றோம் ! அப்பாக்கள் மகனிடம்/மகளுடன் தோற்பது போல சில மேகக் கூட்டங்கள் எங்களுக்காக தியாகம் செய்தது ..., இப்படி நாங்கள் பஞ்சபூதங்களோடு பயணித்து கொண்டிருந்தோம் ..,கடல் அலைகளோடு என் மனம் அலை பாய்ந்தது , 



சீதை என்ன அப்பேர்ப்பட்ட அழகிய ! என்று ராமன் சீதையை தேடியது போல இராமயணத்தில் என் மனம் கடலின் ஆழத்தில்பயணத்தை தொடர்ந்தது., அதில் மன்மதனால் கூட சீதையின் அழகை ஓவியம் தீட்டமுடியவில்லையாம் ! மன்மதன் யோசித்து சீதையை ஓவியம் வரைய பலபல வண்ணங்கள் போததது என்று !அமுதத்தை எடுத்தான் அதில் தூரிகை தேய்த்து ஓவியம் வரைய நினைத்தான் .., அப்படிப்பட்ட அமுதத்தால் கூட அந்த பேரழகை ஓவியம் தீட்டமுடியவில்லையாம் ; மன்மதன் திகைத்து போய் நின்றான் ! 

“ அதரித்து அமுதில் கோல் தோய்த்து அவயம் அமைக்கும் தன்மை யாதெனத் திகைக்கும் “

இப்படி கம்பனின் கவிநயம் மனதில் அலையாடித்தது 


.....

கடலில் முழ்கிருந்த என் மனதை கீ .... கீ ..... என இருசக்கர வாகன ஒலி என்னை எழுப்பியது .,.,

சில மணி நேர பயணித்துக்கு பின் தேநீர் அருந்துவதுக்காக இளைபாற எடுத்தோம் . 

இந்த தேநீர் உற்சாக பானம் !ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை என்பது இருசக்கர வாகனத்தில் (bike ride) பயணிப்போர்க்கு மட்டுமே தெரிந்த இரகசியம் .., 

அரசியல்வாதிகள் தன் கொள்கைகளையும் , கட்சிகளையும் மாற்றிக் கொள்வது மாதிரி நாங்களும்இருசக்கர வாகனத்தை (bike) ஒருவக்கொருவர் மாற்றி கொண்டு பயணித்தோம் .., நீண்ட நெடும் கடற்கரை சாலை முடிவற்று வேகமாக கிழிபடுபது போல தெரிந்தது ! 


வருணபாகவன் செங்கதிர்களை வெளியீட்டு மகுடத்தை பிளந்து எங்களிடம் இருந்து விடை பெற்று சென்று கொண்டிருந்தான் , அங்கங்கே நின்ற தெரு மின்விளக்கு கம்பங்கள் ஐந்தாறு மீட்டருக்கு அள்ளித் தெளித்த மஞ்சள் நிற வெளிச்சத்தை வைத்துக் கொண்டு தன் கதிரவனென காண்போரை நம்பவைக்க முயன்று கொண்டிருந்தது ,தெருவோரங்களில் விளையாடும் பிள்ளைகளை அம்மாகள் கூப்பிடுவதை போல பறவைகள் கூட்டை அடைவதற்காக ஒலியோசை மூலம் தம் பிள்ளைகளை அழைத்து எங்களுடன் போட்டியிட்டுபோட்டு சென்றது ..,



இருள் சூழ்ந்தது அங்கங்கே மின்மினி பூச்சிகள் வெளிச்சம் - மின்கம்பங்கள் ...,  நிலாவும் வெளிச்சமும் கடலில் மிதந்து பிரகாசமாக தெரிந்தது 

சிலர் சாலைகளில் வாகனத்தை ஒட்டாமல் , பறந்து கொண்டிருந்தார்கள் , எண்டா! இப்படி ஒரு பாரம்னு பொசுக்குனு கண்ணு முழிச்சுப்பாக்குறா பூமிதாயி ! இப்படி இவர்கள் வாகனத்தில் முந்துபவர்கள் வாழ்க்கையில் முந்தினால் வீடு/நாடு சிறப்பாகும் என்று மனம் உள்ளூர ஓலமிட்டுக் கொண்டது ..கர்ணனனுக்கு கவசகுண்டலம் பயன்படுவது போலஎங்களுக்கு தலைகவசம் இருந்ததால் ... அச்சமில்லாமல்பயணத்தை மேற்கொண்டோம் . 


சினிமாவில் வருவது போல்பார்த்தவுடன் காதலா! என்று சீக்கு வந்த மாடு மாதிரி செருமிக்கிட்டே இருக்கு மனசு ..!கன்னி மாடத்தில் சீதை நிற்க ! ஸ்ரீராமனின் கண்களும் அவளுடைய கண்களும் ஒன்றோடு ஒன்று ஈர்த்துக் கொண்டன , ஸ்ரீ ராமன் தன் ஆண்மை பலத்தை கொண்டுவில்லை உடைத்த பிறகுதான் சீதையை வீர பார்வை கொண்டு பார்க்கிறான் . ஒருவருக்கொருவர் இதயத்தை பரிமாறிக் கொள்கின்றனர்

“நோக்கு எனும் பாசத்தால் பிணித்து', கண் பார்வை ... 'இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினார்' என்று முடித்தார் கம்பர். .


இப்படிப்பட்ட கவியத்திலிருந்து தான் சினிமாவில் பார்த்தவுடன் காதல் என்ற ஒன்று தோன்றியது என மனம் நிகழ் காலத்துக்கு வந்தடைந்தது ..,

காதல் வசத்தில் இருந்த என்னை ரோட்டோரம் , இட்லி கடை வாசனையும் நாசியை தீண்டியது .., சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு மீண்டும் பயணம் செய்தோம் சிறிது நேர கத தூரத்து பயணத்திற்குப் பின் பாம்பன் பாலத்தை கண்டோம் ! 


ஸ்ரீராமன் சீதை திருமண விழாவில் கலந்து கொண்டது மாதிரி பாம்பன் பாலம் என்ற தோரணக்கலும் கடல் அலைகள் பன்னீர் தெளித்து எங்களை வரவேற்றது , காற்று ஊதி ஊழையிட்ட சத்தம் கூட மேளம் தளம் மாதிரி இருந்தது ! ராமேஸ்வரத்தில் நுழைந்ததும்திருமண விழாவில் சொந்தகாரர்கள் வரவேற்றது போலிருந்தது ...,இரவு ஹோட்டலை அடைந்தோம் அங்கு நுழைந்தவுடன் சுவாமி விவேகானந்த படம் ஒன்று அதனடியில் “ you cannot believe in god ; until you believe in yourself


Rate this content
Log in

Similar tamil story from Drama