கற்பனை உலகம்
கற்பனை உலகம்
வணக்கம் அன்பான வாசக பெருமக்களே 🙏🏼
நான் எனது கேமராவை சார்ஜர் லிருந்து எடுத்து அதன் பையில் வைத்தேன், ஒரு ஜோடி கூடுதல் பேட்டரிகளை எடுத்துக் கொண்டேன், ஏனென்றால் “வேற ஒரு உலகத்தில் தன்னிலை மறந்து புகைப்படம் எடுக்கும் போது சார்ஜ் இல்லாம போகும் போது தான் சுயநினைவுக்கே வருவோம்”.
சந்திரன் தன் வேலையை செய்ய வானத்தில் உதயமாகியது ; நானும் சந்திரனுடன் சேர்ந்து பயணத்தை ஆரம்பித்தேன்.
சந்திரன் பயணம் செய்வது போல ; நானும் அதே செய்தேன் ;
“யாரும் நெருங்க முடியாத தூரம்”
“யாரும் போகாத ஒரு இடம்”
‘உள்ளுக்குள் வெப்பம் ’
‘வெளியே குளுமை’
ஒரு கணத்தில் யோசித்தேன் சந்திரனுக்கு இதே கோட்பாடு தானோ என்று !
எனக்கு இயற்கையாகவே - இயற்கை பற்றிய ஒரு தேடுதல்;
ஒரு கனவில் தேடுவது போல ; இணையதளத்திலும் தேடினேன் அப்படி ஒரு இடத்தை.
கனவில் தேடுவதற்காக ! இப்படி ஒரு இடத்தை கற்பனை செய்தேன்.
“நாம் என்ன நினைக்கிறோமோ! அதுதானே கனவில் வருகிறது என்ன வாசகர்களே”
இணையதளத்துக்கு கீவேடு மாதிரி ; கனவுக்கு கீவேடு “கற்பனை”
சந்திரன் என் தலைக்கு மேல் இருந்தபோது நான் அந்த இடத்தை அடைந்தேன். ஆனால் அங்கே குளிர்ந்த சூழ்நிலை .
இது ஒரு ரம்மியமான ‘கற்பனை’.
என்னை சுற்றி ரோஜாவனம் ;
என் மனநிலை மாதிரி ரோஜா பூக்களை சுற்றி வண்டுகள் மகிழ்ச்சியாக ஆனந்தத்தில் துள்ளி குதித்தது.
திடீரென்று காற்று வந்து வண்டுகளிடமிருந்து பூக்களை காப்பாற்றியது இந்த காட்சியை கேமராவில் படத்தை பிடித்தேன்.
அந்த நேரத்தில் நான் கேமராவைப் பார்க்கும்போது அவளைப் பார்த்தேன்.
காற்றோடு போனது .., வண்டு மட்டும் இல்லை நானும் தான்!
ஓ.. ஓ.. இதுதான் விதியா ! இல்லை
விதியின் சதியா !
முன்னொரு நேரத்தில் என்னிடம் நேரம் இல்லை - அவள் என்னிடம் இருந்தால்; இப்போதோ என்னிடம் நேரம் இருக்கு !ஆனால் என் வாழ்க்கையில்
அவள் இல்லை.
இப்போது அவள் எனக்கு முன்னால் இருந்ததால், நேரம் இனி இல்லை என்பது போல.
காதல்.
இதுதான் காதல் என்று நினைத்தேன்.
அவள் சிரித்தபடி,
என்னைப் பார்த்து அவளும்;
அவளை பார்த்து நானும்;
தொலைந்த போன
என் கண்களை பார்த்ததும்
தந்து விட்டாய்..! கண்களை
தந்து விட்டு இதயத்தை
பறித்து விட்டாய்…!
ரோஜா மொட்டுகளில் வண்டுகள் சிக்கிக் கொள்ளுவது போல நானும் சிக்கி கொண்டேன்.
இந்த விசித்திரமான தொடர்பில் சிக்கிக்கொண்டது பற்றி என் காதில் கிசுகிசுத்தாள்.
நான் மட்டும் தான் சிக்கி கொண்டேன் என்று தவறாக நினைத்துவிட்டேன்.
அவளைப் பற்றிய எண்ணங்கள் யாவும் தெய்வீகமானது.
சல.. சல,, என்ற இலையிலிருந்து வந்த ஓசை அவளை அழைத்தது போலவே இருந்தது அவளுடைய விசாலமான கரிய கண்கள் அவ்வனத்தில் மேல் பரப்பினாள்.
அவள் பார்த்த அந்த கணம் ரோஜா பூக்கள் கூட பொறமைக் கொண்டது அவள் அழகை கண்டு ! அதை கேமராவில் புகைப்படம் பிடித்தேன்.
அவள் ஒவ்வொரு செய்கையும் நிறைய படங்களை கிளிக் செய்துக் கொண்டிருந்தேன்.
புகைப்படங்கள் பிறந்துவிட்டன..!
பேட்டரிகள் இறந்துவிட்டன..!
புகைப்படத்தை எடுத்துக்கொண்டே இருந்தேன்.
கேமராவில் தப்பித்த படங்கள் எல்லாம் என் இதயம் படம் பிடித்தது.
என் இதயத்தில் ஒவ்வொரு கிளிக்கிலும் என் இதய துடிப்பு இருந்தது.
சிகரெட் துண்டு கடைசி வரை வந்து விரலிடையில் சுடுவது மாதிரி அந்த பிரகாசமான குளிர் கூட என்னை சுட்டது.
நிகழ்காலத்துக்கு வந்தேன்.
அவள் இல்லாத இந்த நிகழ்காலம் ; இறந்த காலம் போல இருந்தது. அவள் இருக்கிற அந்த இறந்த காலம் ; நிகழ்காலம் போல இருக்குது.
என்றும் நீங்கா நினைவுடன் ஆழ்ந்த அந்த நினைவுகளோடே நித்திரை வரை என் நித்திரைகளிலும் கூட திரிந்து கொண்டே திரிந்தது அவளை பற்றிய ‘கற்பனை’
‘அது தான் என் ‘கற்பனை உலகம்’. அவள் தான் என் " கற்பனை ".
நன்றி