தாமோதரன் சாது

Children Stories Drama Inspirational

4.5  

தாமோதரன் சாது

Children Stories Drama Inspirational

வானவில்

வானவில்

2 mins
194



வணக்கம் அன்பான வாசக பெருமக்களே

வானம் இசையால் நிரம்பியது ..!

 மேகங்கள் இசையின் எழுத்துகள்..!

மின்னல்கள் இசையின் கசிவுகள்..!

இடிகள் இசையின் துணைகள்..!

காற்று இசையின் சிறகுகள்..!

வானவில் இசையின் கருவிகள்..!


      நமக்கு இயற்கை எப்போதும் ஏதாவது ஒன்று கற்றுக் கொடுக்கிற மாதிரி நம் வாழ்க்கையிலும் சிலர் கற்றுக் கொடுத்து விட்டு சொல்கிறார்கள் ..


தென்மேற்கு பருவமழை என்றாலே அழகு தான் .. மழை பெய்த பின் தெருக்களில் 

அங்கங்கே குளம் போல தண்ணீர்கள் தேங்கியிருந்தது ..,

தெருவில் ஜனங்கள் சில பேர் கவுன்சீலர் முதல் பிரதமர் வரை தீட்டிக் கொண்டே சலசலப்பில் 

நடந்து சென்றுக் கொண்டிருந்தன .,

அப்போது அந்த காட்சியை கண்டேன் ... மனதில் இடி தாக்கியது . 


————


நான் தெருவில் நடந்து செல்லும்போது, ஒரு சிறுமியை அவளது நாயுடன் பார்த்தேன்.அந்த சிறுமி ஒரு நல்ல வண்ணமயமான ஆடை அணிந்திருந்தாள்.

அவளுடைய நாய் வரிக்குதிரை மாதிரி இருந்தது . 


இது ஒரு அழகான சூழ்நிலை, சில 

கணவன் மனைவி உறவு மாதிரி லேசான மழை மற்றும் லேசான சூரிய ஒளியுடன் இருந்தது. சூரிய ஒளி அதிகரித்ததால் நான் என் குடையை மடக்கி வைத்தேன் . அந்த நேரத்தில் வானவில்லை பார்த்தேன்.



பொதுவாகவே குழந்தைகள் எல்லாமே ஆச்சரியமாக பார்ப்பார்கள் .., அதை மனதில் நினைத்துக் கொண்டு அந்த சின்னப் பெண்ணிடம் அருகே சென்று வானவில்லை பார்க்கச் சொன்னேன் ..,

ஆனால் அவள் எதுவுமே சொல்லாமலிருந்தால் வானவில்லை பார்த்து - ஆச்சரியப்பட்டதை விட அவளை பார்த்து 

ஆச்சரியப்பட்டேன் . அதுவே எனக்கு அவளிடம் கேள்விகள் கேட்ட ஆர்வத்தை தூண்டியது .


அதற்கு முன் 

என் மனதில் சில கேள்வி மழைகள்

பெய்தன ; ஒரு வேளை இப்பவே வாழ்க்கை வெறுத்து விட்டாளோ ??

இல்லையென்றால் ஞானியாக இருக்குமோ ? அப்படி இருக்குமோ ? இப்படி இருக்குமோ ? மழை ஒய்ந்த பின் கட்டிய குளம் போல் ஆனது மனசு .


ஆழ்ந்த பெருமூச்சு விட்டு மனதிலிருக்கும் குளத்தை வெளியேற்றிவிட்டு 

அச்சிறுமிடம் கேள்விகள் எழுப்பினேன் .



அவளால் எதையுமே பார்க்க முடியாது, கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தை மட்டுமே பார்க்க முடியும்', ஆனால் எனக்கு 

அவள் வானவில் போன்ற வண்ணம் உடையவாள் தான் என்று அவளுடைய தாய் கூறினாள்.


அவள் தனது நாயுடன் விளையாடிக் கொண்டிருந்தால் ,

அப்படி சொன்ன பிறகு நான் வானவில்லையும் அந்த சிறுமியையும் பார்த்தேன் .


இந்த உலகத்தின் வண்ணங்களை அவளால் பார்க்க முடியவில்லை என்றால் பரவாயில்லை .. ஆனால் அவள் நாயின் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருந்ததால் 'உண்மையான வண்ணங்களை' அவளால் பார்க்க முடிந்தது. அது தான் 

அவளுடைய உலகத்தில் வானவில் என்று தோன்றியது



அன்று நான் ஏழு வண்ணங்களை மட்டும் பார்க்கவில்லை ... எட்டு பார்த்தேன்!





Rate this content
Log in