தாமோதரன் சாது

Drama Romance Tragedy

4.3  

தாமோதரன் சாது

Drama Romance Tragedy

பெண் கடல்

பெண் கடல்

2 mins
269


                               

வணக்கம் அன்பான வாசக பெருமக்களே 🙏🏼 


"கூட்டததில் குற்றம் காணாமல் நாம் விலகி ! விழித்திருப்போம் " 




இது தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பற்றிய

கதை ! என்னுள் உதித்த சிறிய முத்துக்கள் !


பரந்து விரிந்த வானம் மாதிரி நீல நிற தண்ணீர் மேற்பரப்பு , உப்பின் மணம் , ஈர மணல்வெளியில் சின்ன சின்ன முத்து இல்லாத சிப்பிகளும் , சங்குகளும் .



அலைகளோடு ஓடி பிடித்து நண்டுகள் விளையாடுவது மாதிரி மீசை வளர்த்த மற்றும் வளர்க்காத மழலைகளும் இன்னும் சில இளந்தாரிகளும்.

அக்னி சொற்களில் முகம் இணங்குவது போல சோளமும் , குளிரிலும் மேலும் குளிரூட்ட ஐஸ்கீரீம்களும் இன்னும் பல அன்றாடமாக நடக்கும் சில நிகழ்வுகள் எங்கள் ஊர் தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் ! 




மீன்களை ஏலம் விடுவது போல 

சிறுவன் கடலை , முறுக்கு போன்றவை ஏலம் விட்டு விற்றுக் 

கொண்டிருக்கிறான்.


என்னைப் பொறுத்தவரை மனமும் கடலும் ஒன்றுதான் ! தொடக்கம் மட்டுமே ! அலைகள் மாதிரி , ஆரவாரம் ஆசைகளெல்லாம் ஆனால் போகப்போக ஆழம் ! அமைதியான ஆழம் !



கடல் மணல் பரப்பில் நடந்து செல்லும்போது உள்ளங்காலுக்கு கிச்சு கிச்சு கிச்சு....மூட்டுகிறது ! கடல் அலைகள்



கடலில் நீந்துகையில் ! இனம்புரியாத ஒரு இன்பம் ! சிற்றலைகள் மார்போடு அணைத்துக் கொள்கிறது ! இராட்ச பேரலைகள் தன்னுள் பொய்யாக இழுத்துக் கொள்கிறது ! 


ஒரு கூட்டம் நீந்துகிறது ! அதில் ஒரு தாயின் பதற்ற குரல் ஏலே ! ரொம்ப ஆழத்துக்கு போகாதல ! சிலர் கால்களை மட்டும் நனைத்து சிலிர்த்துப் போகிறார்கள் !

சில கூட்டம் நினைவுகளைப் பதிவு செய்ய புகைப்படம் எடுக்கிறார்கள் ! 

அதே கடற்கரையில் தான் அதிகாலையிலும், மாலை நேரங்களிலும்,

நெடுந்தூரம் வாழ்க்கை பயணம் கண்ட முதியோர் காதலர்கள் நடைப்பயிற்சி செய்கிறார்கள்! இன்னும் சிலர் வாழ்க்கை பயணத்தை முடித்த ஒருவரின் அஸ்தியை கடலில் கரைத்துக் கொண்டிருந்தார்கள்.


இங்கே ஆரம்பிக்கின்ற காதல்கள் கடல் அலைகள் அட்சதை தூவியும் , முடிகின்ற காதல்கள் கடல் உள்வாங்கியும் தன் உணர்ச்சியை வெளிகாட்டியது .


வாழ்க்கையில் சிக்கல்களை மாதிரி !மீன்வலையில் பிண்ணி பிணைந்து இருக்கும் சிக்கல்களை சாதாரணமாக

 எடுத்துக் கொண்டிருக்கும் எம் மீன்வ மக்கள்.


எம் மீனவ மக்களுக்கு வாடைக்காற்று போல் வறுமை ! உப்புநீர் போல் உறவு ! சூறாவளி என்னும் சூழ்நிலை ! 

இவர்கள் கடலுக்கு சென்றால் தூரத்தில் துருவ நட்சத்திரம் போல் பிரகாசிக்கும் கலங்கரை விளக்கு தான் வாழ்க்கை பாதை.


கடலுக்கும் எனக்கும் ஒரே ஒற்றுமை தனிமை ஒன்றே ! பலமுறை வருகிறேன் ! தனியாகவும் வருகிறேன் ! நண்பர்களுடனும் வருகிறேன் ! ஆனால் எனக்கு இந்தக் கடல் சலிக்கவே இல்லை ! இந்தக் கடலுக்கு வருகின்ற ஒவ்வொரு முறையும் ஒரு புது விஷயத்தையும் அனுபவத்தையும் ! இது எனக்கு தந்து கொண்டேதான் இருக்கிறது .




கடல் அலைகளின் வழியே நன்றி சொல்கிறேன் வீடு வரை உப்பு பிசுபிசுப்பு கால்களில்.



         ( நேரம் செலுத்தியதற்கு நன்றி )


Rate this content
Log in

Similar tamil story from Drama