தாமோதரன் சாது

Romance Classics Inspirational

4.5  

தாமோதரன் சாது

Romance Classics Inspirational

இளவரசி மலை காவியம்

இளவரசி மலை காவியம்

13 mins
199


கொடைக்கானல் மலைகளின் இளவரசி

        


வணக்கம் அன்பான வாசக பெருமக்களே !


தலைப்பை பார்த்தவுடன் பெண்களை பற்றி சொல்லப் போறேன் என்று எண்ண வேண்டாம் இது கொடைக்கானல் மலைகளின் இளவரசியை பற்றியை பயணம் ! இந்த பதிவில் வரும் வார்த்தைகள் யாரையாவது பாதித்திருந்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல ! திருத்திக் கொள்ளுங்கள் எனக்கும் சேர்த்துதான் , வாருங்கள் பயணிப்போம் !


நான் என் தமையன் ஜிவானந்தம் மற்றும் மகன் (மைதினி மகன்) பிரசன்னா நாங்கள் மூவரும் அன்பு என்ற ஒன்று கட்டுப்பட்டால் ! சகாச பயணத்தை மேற்க்கொள்ளாமல் தூத்துக்குடியிலிருந்து பேருந்தில் கொடை மலை பேரழகி இளவரசியை காண சென்றோம்.

அந்த இளவரசியின் வராலற்றை படித்து செல்லும் போது பேருந்துவுடன் சேர்ந்து பல எண்ணோட்டங்கள் என்னுள் ஒடியது, ஓடியது என்னவோ மனம் மட்டும் தான் என்று தவறாக நினைத்தேன்., நேரமும் கூட கதிரவன் தன் வீட்டை அடைந்தான் , எங்கும் இருள் சூழ்ந்தது அங்கங்கே அரசியல் நல்ல தலைவர்கள் தோன்றுவது போல் மின் விளக்குகள் எரிந்தன ,                                                       சிறிதும் எதிர்ப்பார்க்கதா வேளையில் தூங்கி கொண்டிருக்கும் கணவன்மார்களை மனைவிமார்கள் எழுப்புவது போல் மழை சாரல் என்னை எழுப்பியது ,சராளங்களை அடைக்க முற்பட்டபோது அப்போது கண்ட காட்சி அது பிராமிக்கடைய செய்தது வெள்ளியை உருக்கி ஒடுவதுப் போல் அருவியிலிருந்து நீர்வீழ்ச்சி ஒடியது .                        

நீர்வீழ்ச்சி ஒடிவது போல் சிறிது கானதூரம் பேருந்து ஒடியது ,நள்ளிரவு ஹோட்டலை அடைந்தோம்

பயணச் செய்த களைப்பில் அப்படியே ஆழ்ந்த அந்த நினைவுகளோடே நித்திரை வரை என் நித்திரைகளிலும் கூட திரிந்து கொண்டே திரிந்தது அந்த இளவரசியின் நினைவு. உறக்கம் ஒன்றே என்னை அமைதிபடுத்தியது. என் நாசியை ஆக்கிரமித்து என்னை எழுப்பியது ! அக்கரத்து காபி மணம் அந்த ஹோட்டலில் , வெளியே வந்து இயற்கை மிண்டும் காதலிக்க ஆரம்பிக்க தொடங்கினேன் , மாமாவை கண்டவுடன் அம்மாவின் பின்னே ஒளிந்து கொண்டு கள்ளப்புன்னகைவுடன் மற்றும் ஒரப் பார்வைவுடனும் எட்டிப் பார்ப்பது போல் கதிரவன் பேரழகி மலைகளிருந்து நடுவில் எட்டிப் பார்த்தான், அதே புன்னகைவுடன் நாங்கள் வெளியே செல்ல கிளாம்பினோம்.

 அந்த ஹோட்டலின் உதவியுடன் நாங்கள் காரை எடுத்து இளவரசியை காணச் சென்றோம் , அந்த மலையின் பேரழகி இளவரசி வரலாறைத் தெரிந்துக் கொள்ள அருகாட்சியை சென்றடைந்தோம் , அங்கு கண்ட காட்சியையும் , சிறப்பையும் என்னை மேலும் அந்த பேரழகியை காதலிக்கத் தூண்டியது , இந்த அருங்காட்சியத்தில் மனித இனத்தை கருவில்யிருந்து உருவாகுவதை மிகவும் தத்துருவமாக காட்சியளிக்கப்பட்ட்து ,

எண்ணற்ற உயிரனங்கள் வாழ்ந்த & வாழுகின்ற அதற்கு ஆதரமாக இருந்தது , அதை பாதுகாத்தும் மற்றும் பராமரித்து வாருகின்றன ,  ஒரு சில கொடூர மிருக மனிதனின் காதல் போல் இல்லாமல் அங்கு வாழ்கின்ற உயிரனங்கள் அனைத்தும் பேரழகி இளவரசியை காதலித்து வருகின்றன , நாங்கள்அருங்காட்சியில் விடைபெற்று வண்ணப் பூஞ்சோலைக்கு போக முடிவு செய்தோம்.

நன்கு அனுபவம் வாய்ந்த ஓட்டுனர் எங்களுக்கு பயண வழிகாட்டியவும் மட்டுமின்றி தாத்தா , பாட்டி தன்அனுபவத்தை பேரன்களுக்கு பகிர்வது போல இளவரசியில் வாழும் ஜனங்களை பற்றியும் அங்குள்ள சிறப்புகளையும் சொல்லிக் கொண்டு வந்தார் ,  மலைகளின் வளைவுகள் மற்றும் செல்லும் வழியெங்கும் மேடு பள்ளங்கள் மனிதர்களின் வாழ்க்கையை போல , கடைசியில் சிறிது காததூர பயணத்துக்கு பின் வண்ணப் பூஞ்சோலையை அடைந்தோம் ,

இரண்டு காந்த அலைகள் ஒன்றோடு ஒன்றாக ஈர்ப்பது போல் அந்த வண்ணப் பூஞ்சோலை எங்களை கவர்ந்தது , 􏱬கண்னை கவரும் அழகும் நாசியை நிறைக்கும் இனிய மணமும் பொருந்திய அந்தப் பூஞ்சோலை ஆர்வம் திர நுகர்ந்து பார்த்தேன் அந்த பூஞ்சோலையில் உலா வரும் போது எண்ணிடாங்கத எண்ணோட்டங்கள் என்னுள் வந்தன , அவை சூதாட்டத்தில் பாண்டவர்கள் நாட்டை இழந்தது போல் இங்கே சில பூக்கள் சிதறிருந்தன , அக்கா மகளை குறும்பாக தொட்டல் சினுங்குவது போல தொட்டல் சினுங்கும் தாவரங்களும் உள்ளன . கடலுக்கு சென்ற எம் மீனவ மக்கள் வெறுங்கைவுடன் திரும்பி வந்து தன் வலையை கடல் மேற்பரப்பில் பரப்புவார்கள் எதற்கும் பயன்படாத சிறு மீன்களும் , சங்கு , சிப்பிகளும் அதே போலிருந்த சில பூக்கள் , பெரிய பெரிய பணக்கார மற்றும் அரசியல் உழல்வாதிகள் வீடுகளில் காணப்படும் அரிய வகை பூக்கள் அங்கங்கே , என் தேசத்தில் உழல் படர்ந்து விரிந்துருப்பது போல இங்கு செடி கொடிகள் காணப்பட்டன, 12 வருடத்திற்க்கு ஒருமுறை சொந்தகாரர்களை காணுவது போல அங்கங்கே குறிஞ்சி செடிகள் நான் சென்ற நேரம் என்னவோ மாமியார்கள் சில மருமகளை மலடி என்று சொல்வது போல குறிஞ்சி செடிகளை கண்டேன். மொட்டு பற்கள் வைத்து

புன்முறுவல் புரியும் மழலை போல ஆங்கே சில மொட்டுப் பூக்கள் , காதலர் தினத்தன்று காதலன் காதலியிடம் கொடுக்கும் பலவகை ரோஜாக்கள் இந்த பேரழகி இளவரசி பூக்காரிடம், தமிழர்களின் வரலாற்றை அழிக்கும் ஒரு சில அரசியல்வாதிகளுக்கு எற்ற வசனம் இங்கே கண்டேன்


‘“ என்னை பறிக்காதிர்கள் நான் உயிர் வாழ வேண்டும் “”””


இது அரசியல்வாதிகளுக்கு மட்டுமில்லை இங்கு வரும் குரங்கு வகை மனிதர்களுக்கும் பொருந்தும் .

இந்த பூங்கா. மொத்தம் 20.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவை உருவாக்கியவர், எச்.டி.ப்ரயண்ட். இதை அவர் 1908 ஆம் ஆண்டு உருவாக்கினார். இந்த பூங்காவில் ஏறக்குறைய 325 வகையான மரங்கள், 740 வகையான ரோஜா மலர்கள் உள்ளன.

150 வயதுடைய போதி மரமும், யூகலிப்டஸ் மரமும் இங்கு இருப்பது இந்த பூங்காவின் சிறப்பம்சமாகும். மே மாதம் இங்கு தோட்டக்கலை துறையின் கண்காட்சியும், மலர்க் கண்காட்சியும் நடைபெறும்.

 பள்ளிக்கூடம் கடைசி நாள் வாழ்க்கையை போல் இந்த பூஞ்சோலையை விட்டு பிரிந்த ஓர் உணர்வு , உலகமே கையிலிருக்கும் கைபேசி இருந்தும் நாங்கள் அடுத்து எங்கு செல்ல வேண்டும் என்று அந்த இளவரசி மலையில் வாழ்ந்து வரும் வழிகாட்டியிடம் ஆலோசித்து சென்றோம் , சிறிது நேரம் மெளனத்திற்க்கு பிறகு தன் அனுபவத்தை கூறிக்கொண்டு வந்தார் , தூங்க செல்லும் குழந்தை தன் தாயிடம் கதையை கேட்பது போல் கேட்டுக் கொண்டு வந்தோம் , சிறிது காதத்தூர பயணத்துக்கு பின் அந்த இடத்தை அடைந்தோம் ,

அது தான் ஊசியிலை காடு (Pine Forest).

அதை பார்த்த பின்பு தான் நேதாஜி , காந்திஜி நினைத்து பார்த்து சினத்தைத் தூண்டியது எண்ட இந்த சுதந்திரத்தை பெற்றோம் என்று , அப்போது நம் தாய் நாட்டை அண்ட ஆங்கிலேயர்கள் காடுவளத்தை மேம்படுத்திருக்கிறார்கள் அதற்கு இந்த ஊசியிலை காடே சாட்சி அதே ஆங்கிலேயர்கள் தான் இப்போது ஆமேசான் காடுகளை (Amazon Forest ) தீ வைத்து அழித்துருக்கிறார்கள் பணம் பத்தும் செய்யும் என்று நினைத்துக் கொண்டேன் ,


 எங்கள் ஊர்களில் வாகன நெரிசல் , காப்பர் தொழிற்சாலை மற்றும் இதர தொழில்சாலைலிருந்து வரும் மாசு கலந்த காற்றை சுவாசித்து அலுத்து போயிருந்த எனக்கு கருவுற்ற தாய் தன் கருவறயிலிருக்கும் பிள்ளைக்கு கலப்பிடல்லாமல் மாசுற்ற காற்றை கொடுப்பதுப் போல காட்டில் நுழைந்தவுடன் இந்த பேரழகி இளவரசி எங்களுக்கு கொடுத்தல் பிறந்த பலனடைந்த ஓர் உணர்வு மீண்டும் என்னுள் தோன்றியது , மனித உடலில் இரத்ததைக் கொண்டு செல்லும் நரம்புகளை போன்ற இங்கே மரங்களின் வேர்கள் ஒன்றோடு ஒன்றாக பின்னினைந்து பாய்ந்து கொண்டிருந்தன , தாய்மார்கள் தன் குழந்தைகளை தொட்டில் போட்டு ஆடும் குழந்தையை போல இங்கே பாயும் வேர்களில் சிறுவர்கள் ஆனந்தமாக ஆடினார்கள் கண்டுகளித்து சிறிது நேரம் மீசை வைத்த சிறுவர்களானோம்.


மகாபரதத்தில் சொந்தகாரர்களை எதிர்த்து போர் செய்வதை விட காடுகளுக்கே திரும்பி செல்வது மேலென்று தருமன் கண்ணணிடம் ஏன் ? எதற்கு கூறினான் என்று இந்த சோலைவனத்தை பார்த்தப் பின்பு தான் புரிந்தது ,

காடுகளில் மறைந்து வாழ்ந்து வந்த சந்தன கடத்தல் வீரப்பனை போல ஆங்கங்கே கள்ளக் காதலர்கள் தென்ப்பட்டனர், அனாதை இல்லம் நிறைய இருந்தும் ஆங்கங்கே குழந்தைகள் காணபடுவது போல் இந்த சோலைவனத்தில் குப்பைத்தொட்டியிருந்தும் குப்பைகளை கண்டு மனம் பொங்கியது , நாய் வாலை நிமிர்த்த முடியாது என்று இந்த மிருக வகை மனிதர்களை எண்ணி மனம் வருந்தியது ,

நாங்கள் வருந்த்திய மனதோடு அடுத்த இடத்தை அடைந்தோம் , பெண்களுக்கு இயல்பாகவே ரகசியத்தை மறைத்து வைக்கும் குணமுண்டு என்று இந்த இடத்தை மலை இளவரசியிடம் கண்ட பின்பு தான் என் மனம் ஏற்றுக் கொண்டது , அப்படிப்பட்டது தான் இந்த குணா குகை ,

"ஆழம் தெரியாமல் காலை விடாதே " இந்த பழமொழிக்கு ஏற்ப சில

இளையஞர்கள் ஆர்வக் கோளரில் உள்ளே இறங்கி பார்க்கிறோம் என்று குகைக்குள் சென்று மாட்டி அதல பாதளத்திற்க்கு சென்றுருக்கிறார்கள்

மனிதர்கள் தவறு செய்வது சாதரணம் தான் , ஆனால் பிறரை பாதிக்காத படியிருந்தால் எதுவும் பெரியதாக தெரியது, அப்படிப்பட்ட மனிதர்கள் தவறு செய்ததால் இங்கே இப்போது யாரையும் அனுமதிப்பதில்லை , நாங்கள் பொது தரிசனத்தில் தூரத்தில் கடவுளை காண்பதை போல் கண்டு மகிழ்ச்சியடைந்தோம்.

அடுத்த இடத்தை நோக்கி பயணம் செய்யும் போது இந்த குகையின் வரலாற்றை கேட்டு தெரிந்துக் கொண்டோம் இந்த குகையை பார்க்கும் போது அனைவருக்கும் இது மனதில் காட்சியளிக்கும்

“” மனிதர்கள் புரிந்துக் கொள்ள இது மனிதக் காதல் அல்ல அதையும் தாண்டிப் புனிதமானது “” அதன் பின்பு தான் இதற்கு குணா குகை பெயர் பெற்றது , அதற்கு முன் இந்த குகையின் உண்மையான பெயர் பிசாசின் சமையலறை (devil kitchen)

Pine Forest:

  இந்த காட்டை பிரயண்ட் என்பவர் உருவாக்கி உள்ளார். கொடைக்கானல் மலைப்பகுதியை பசுமையாக்கும் முயற்சியில் பல ஊசியிலை மரங்களை அவர் நட்டு வளர்த்தார். இந்த காடு தற்போது சுற்றுலாத் தளமாக விளங்குகிறது.

 குணா குகை:

இந்த மரப்பாலம் மூலம் குகையின் முகப்பு பகுதியை காணலாம் , இந்த இடம் கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது ,


இந்த அழகான மலை பேரழகி இளவரசியின் பெயரை கெடுப்பதுற்கே இந்த இடம் பசுமைப் பள்ளதாக்கு ( Suicide point ) .

வாழ எவ்வுளவோ வழிருந்தும் வாழமல் உயிர் துறித்துருக்கிறார்கள் ,அவை

 காதல் எனும் அசட்டுத்தனம் , காலித்தனம் எல்லாம் கதைகளிலும் , பத்திரிக்கையிலும் , சினிமாவிலும் தான் நடக்கும் அதை பார்த்து சில அறிவற்ற ஜன்மங்கள் கெட்டுபோகின்றன ,காதல் என்ற வார்த்தைகே தகுதியேல்லாத கோழை காதலர்களும் , தகுதிக்கு மீறி கடன் வாங்கியவர்களும் ,சில சாதி வெறி பிடித்த மிருகங்களால் வேட்டையாடபட்டவர்களும் ,இங்கே

எண்ணற்ற சடலங்கள் எடுக்கப்பட்டுருக்கின்றன மற்றும் இன்னும் சில பேர் இங்குள்ள செடி கொடிகளுகளுக்கு,மரங்களுக்கு உரமாக விதைக்கப்பட்டுருக்கிறார்கள்.

இங்கே குரங்குகள் எண்ணிக்கை அதிகம் காணப்படும்

மனிதர்கள் மனிதர்களாக இருந்தால் குரங்குகளால் ஆபத்து நேரிடாது , அரசியல்வாதிகள் 364 நாட்கள் வஞ்சக எண்ணத்துடன் வாழ்ந்துவிட்டு ஒரு நாள் ( பிறந்த நாள் ) அன்று மட்டும் உணவு தானம் செய்வது போல் இங்கே குரங்களுக்கும் செய்தனார் , அரசியல்வாதிகளுக்கு மட்டும் இல்லை ! அனைவருக்கும் இது பொருந்தும் ,

 மதிய வேளையில் தெருயொரங்களில் சிறுவர்கள் விளையாடுவதை போல் இங்கே குரங்குகள் துள்ளி குதித்து விளையாடின , அதே தெருக்களில் அம்மாகள் தம் பிள்ளைக்கு பணிவிடை செய்வதும் (பேன் பார்ப்பது ) ,பிள்ளைகள் அம்மாகளுக்கு அதே பணிவிடை செய்வதும் இந்த குரங்குகளிடமும் கண்டேன் .இதை கண்ட பின் குரங்குயில் இருந்து நாம் வந்தோம் என சில அறிஞர்கள் சொன்னது உண்மையா ?? இல்லையா?? என்று மனம் உள்ளூர துணுக்குற்றது.

அரண்மனைகள் மற்றும் கோவில்களில் செயற்கை தூண்களை பார்த்து அலுத்து போயிருந்த எங்களுக்கு ! இந்த இளவரசி மலையின் இயற்கை தூண் பாறைகளை கண்டு வியந்து பார்த்தோம் , மட்டை பந்தாட்டத்தில் ( Cricket) ஸ்டெம்பு உபயோகிப்பது போல் இந்த மூன்று இயற்கை தூண் பாறைகளை மேகக் கூட்டங்கள் மோதி ஒன்றோடு ஒன்றாக விளையாடிக் கொண்டிருந்தன , 

ஆதி காலத்தில் வாழ்ந்த மனித இனம் உடல்களை மறைப்பதற்கு தான்ஆடையை பயன்படுத்துவது மாதிரி இந்த இளவரசி தூண் பாறைகளை மேகக் கூட்டங்களை கொண்டு மறைத்து விடுகிறாள் , “பொறுத்தால் பூமி ஆள்வார்” என்ற

பழமொழிக்கு ஏற்ப இங்கே பெருமையுள்ளவார்களுக்கும் மட்டுமே மேகக் கூட்டங்கள் கலைந்து காட்சியளிக்கபடும் , தந்தையின் பிடியிலிருந்து வெகுதூரம் சென்றுவிட்டோம் !,தனித்து நின்றுவிட்டோம் ! என்று மகன் எண்ணுவதும் ! தூண் பாறைகளும் எண்ணுகின்றன ஆராய்ந்து பார்த்தால் உண்மை புரியும் , பாறைகள் உடைந்த பின் சிற்பமாவதை பார்த்திருப்போம் இங்கே இயற்கையாக செதுக்கிய இந்த தூண் பாறைகள் ,

தனித்து இருப்பவர்கள் உயர்ந்துருக்கிறார்கள் ! அதற்கு இந்த தூண் பாறைகள் உதாரணம் என்று எண்ணி கொண்டு அடுத்த இடத்தை அடைந்தோம் பியர் சோழா அருவி .

இந்த அருவியில் கரடி நீர் அருந்துவதாகவும் அதனால் இதற்கு இப்பெயர் பெற்றது,

 பாறையின் சிறையில் பிடியில் நடுவே இருக்கும் மரம்,செடி , கொடிகளுக்கு முகம் கழுவியும்,வேர்களுக்கு தலைவாரியும் அருவிகள் பாய்ந்தன , இசைஞானிகளுக்கு பின்னிசையாக இந்த அருவியின் சத்தம் கேட்டுக் கொண்டே எண்ணங்களும் அருவி போல சேர்ந்து ஓட தொடங்கியன ..,

வானத்தில் வானவில் வர்ணஜாலங்களை காட்டுவது போல் பனிப் பொழிவுகளுக்கிடையே மங்கைகள் அருவியை காண்பதற்காக கல்லூரி பேருந்திலிருந்து வந்தனார் , அதில் ஒரு சிறுமியை கண்டேன்! கல்லூரி படிப்பது போல் தோன்றவில்லை , உயர் பள்ளி மாணவி போல தோற்றம் , அவளது தோற்றத்திலிருந்தே அவள் வசதி படைத்தாள் இல்லை சொல்லமுடியும் என்று நினைத்தேன் , ஒரு ஆரஞ்சு நிற பவாடை கலர், பொருத்தமேயில்லாத அவள் தாயோடு புடவையில் சாயம் போய் என்ன! நிறம் என்று சொல்ல முடியாத ஒரு வகை சிவப்பு நிற தாவணி , கழுத்தில் நூல் கோர்த்து வெள்ளை பாசிமணிகள், இந்த முகத்துக்கு நகையே வேண்டாம் என்று ! சுடர் விட்டு பிரகாசித்த புரண்டு புரண்டு மின்னுகின்ற அவளது கரைபடியாத குழந்தை கண்கள் , அவளை பார்கின்ற யாருக்கும் எளிமையான உலகத்தில் எத்தனையோ விலையுயர்ந்த பொருட்கள் இல்லாத எளிமையோடு திகழும் இளவரசி மலையில் புதியதாக மலர்ந்துள்ள புக்ஷ்பம் தான் நினைவுக்கு வந்தது .

சித்தாப்பு .... என்று பிரசன்னா அழைத்தான் !

ஓடுகின்ற அருவியை அணைகட்டி நிறுத்துவது போல !

ஓடிய என் மனதை அந்த ஒலி நிகழ் காலத்துக்கு அழைத்தது..

ஓடிய எண்ணோட்டங்களுடன் அடுத்த அருவியை அடைந்தோம் பாம்பர் அருவி , கடுங்குளிர் மற்றும் மேகமூட்டங்கள் என்பாதல் நீராட முடியவில்லை நாங்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தோம் , இதுவரை கடந்து வந்த பாதையால் எற்பட்ட களைப்பு இந்த அருவியில் காலை நனைத்தோம் , அந்த நொடியில் உடலில் பெரும் மாற்றம் இரத்த நாளங்கள் மின்னல்கள் போல் அங்கங்கே அருவி போல பாய்ந்து புத்துணர்ச்சியைடைந்தோம் , சில்லென்று பாதம் நனைந்ததில் உயிர் உறைந்தது , கொஞ்சம் நடுங்கினோம் ! இந்த கடும் குளிரில் வெகுநேரம் கால் நனைத்தால் “யாத்தே " என்று கால் உதறினேன் ...

 எங்கள் மனநிலை அறிந்து வழிகாட்டி உற்சாகமாக இருக்க வேண்டுமென்று கொடை ஏரிக்கு அழைத்து சென்றார் , நம் கைரேகை மாதிரி மலைகளில் ரேகையாக வடியும் நீர் இளவரசி பள்ளதாக்கில் சேமித்து வைத்திருக்கிறாள் ,


அடே பாவிகளாக ..! ஏன்டா இந்த கொலைவெறி ! இந்த கடும் குளிரில் நாங்களே ஒளிந்து ! ஓடி .. வாழ்ந்து கொண்டிருக்கிறோம் .,,, எங்களை ஏன்டா ! பிடிக்கீறிங்க ! என மீன்களின் கதறல் இவர்கள் காதுக்கு எட்டவில்லை

அகப்படாத மீன்களைப் போல அங்கும் இங்கும் துள்ளி குதித்து ஓடிக் கொண்டே இருக்கும் மழலைகள் தூண்டில் மாதிரி சில அம்மாக்கள் துரத்திக் கொண்டிருந்தார்கள் .!அகப்பட்ட சிலமீன்களை துன்புறுத்துகிறார்கள் அம்மாமார்கள் , இன்னும் சில மீன்கள் கங்காரு குட்டி போல அப்பாக்கள் மடியில் .

இந்த கொடை ஏரியில் பல்வேறு பொழுதுப்போக்குகள் உதராணமாக குதிரை சவாரி ; கொடைக்கானல் சைக்கிள் சவாரி ; படகு சவாரி.... இன்னும் பல ....






கொடைக்கானல் ஏரி படகுச் சவாரி தவிர இந்த ஏரியில் விளையாடுவதற்கு பொழுது போக்குவதற்கு ஏகப்பட்ட விஷயங்கள் இந்தப் பேரழகி இளவரசி மறைத்து வைத்திருக்கிறாள்.


ஜாதி / மத கலவரம் நடந்தால் 144 ஊரடங்கு அரசாங்கம் தடை செய்வது மாதிரி அன்று கடும் பனிப்பொழிவு மலைச்சாரல் காரணமாக படகு சவாரி இந்த மலை இளவரசி எங்களுக்கு தடை செய்தால்.


நாம் பண்டைய காலத்தில் வாழ்ந்த தமிழர்களின் பாரம்பரிய மரபுகளை மறந்தது மாதிரி இந்த மிதிவண்டி பயனையும் முற்றிலுமாக மறந்து கொண்டிருக்கிறோம்.

சைக்கிள் என்ற சொல் இந்த சொல்லை கடந்து வளர்ந்து இருந்திருக்க மாட்டோம். மிதிவண்டியை கண்டவுடனே ! உயர்கல்வி பயில்வதற்கும் அரசாங்க வேலைக்கும் அரசியல்வாதிகளை சிபாரிசுக்கு அழைப்பது மாதிரி மாமாவையும் வாடகை மிதிவண்டி வாங்க மணி கடைக்கு சென்றதும் மாலை நேரங்களிலும் , விடுமுறை நாட்களிலும் தெருவோரங்களில் வேகமாக சென்றதும் .இந்த நினைவுகுளவி கூடுக்கட்டியது ,


மிதிவண்டி எடுத்தோம் !

பெடல் செய்த ஆரம்பித்தோம் ! வேகம் பிடித்தோம் ! முகத்தில் குளிர் காற்று படர்ந்தது ! மனதில் ஒரு வகை ஏக்கத்தை ஏற்படுத்தியது !சொல்ல வார்த்தைகள் இல்லை ..,

எங்களுக்குப் போட்டியாக ஆடவர்களும் , மங்கைகளும் , சிறுமிகளும் , சிறுவர்களும் போட்டி போட்டுச் சென்றனர் , எதிரிலும் பக்கத்திலும் நிறைய மிதிவண்டிகள் பறந்தன!

கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்த மாதிரி இந்த ஏரியை சுற்றி மிதிவண்டியில் உற்சாகமாக உலா வந்தோம் .

குதிரை சவாரி என்பது உலகிலேயே மிகவும் பழமையான போக்குவரத்து ; இங்கே கண்ட காட்சி இளம் தம்பதினாரும் , பெரியோர்களும் , மூதியோர்களும் குதிரை சவாரி செய்தனார் ; அதில் ஒரு அப்பா தன் மகனை குதிரையிலே அமர்த்தி பயணத்தை ஆரம்பித்தார் ; மூக்கு ஒழுக அழுத பையன் ! அப்பா குடுத்த உற்சாகத்தில் உண்மையான ராஜாவாக திகழ்ந்தான். எல்லா அப்பாக்களுக்கு தன் மகன் ராஜா தான் என்று மனம் அசைப் போட்டு கொண்டது .


 அந்திப் பொழுது கூட மார்கழி மாதம் விடியல் பொழுது போல் இளவரசி தோற்றமளித்தாள்,இது அந்திப்பொழுது தானா ! என்று கடிகாரத்தைப் பார்த்து தான் தெரிந்து கொண்டோம் ! இந்தக் குழப்பத்தில் தங்கியிருந்த விடுதியை அடைந்தோம் ;

 விடுதியில் நாங்கள் சென்றபோது கோழிக்கும் மீன்களுக்கும் மஞ்சள் நீராட்டு விழா நடத்திக்கொண்டிருந்தார் ! அன்று நடந்த நிகழ்வுகளை மனதில் அசை போட்டுக் கொண்டிருந்தபோது நாசியை துளைத்து முரண்டு பிடித்த அந்த வாசனை எச்சி ஊற தூண்டியது ; அந்த மீன் குழம்பு எங்களை வா ! வா ! என்று அழைத்தது , என் தமையன் கரண்டியை செலுத்தி ஆழத்தில் துழாவி ஈரலும் , கறியும் அள்ளி போட்டுக்கொண்டான் . சோற்றில் கிடந்த தலைக்கறியா ! தொடைக்கறியா ! எதை முதலில் சாப்பிடுவது என்று முடிவெடுத்து ! தொடை கறியை எடுத்து ஒரு கடி இளவரசி மலை அதிரும்படி அடித்தொண்டையில் ஒரு குரல் , மலைகளிடையே இருந்த முழு நிலவு தமையன் பார்த்து சிரிப்பதே போல் சூழ்ந்திருந்த மேக கூட்டத்தின் மத்தியிலிருந்து அவசரமாய் வெளி வந்தது .

சூரிய உதயத்திற்கு இப்படி ஓர் அழகா!

பனி மலையிடையில் கிழித்து வெளிவரும் செங்கதிரவனின் கரங்கள்!

என்ன ஒரு கம்பீர தோற்றம் !

என் விழிவழியே புகுந்து காலை கதிரவன் எண்ண அலைகளாக பிராணமித்துக் கொண்டிருந்தான் . இந்த கொடை மலையில் விடியற்பொழுதை கண்டு !

மரம் ஏறிய அணில் வாலை தரையில் தொட்டு குதிக்கிற மாதிரி மனசு நிதானத்துக்கு வந்தது . இந்த மலையின் இரகசியங்களை தெரிந்து கொள்ள ! விடுதியை விடைப் பெற்று ! மேலும் பயணத்தை தொடர்ந்தோம் .

பூம்பாறை நோக்கி பயணம் செய்தோம் ! வழிகாட்டி எங்களுக்கு அங்குள்ள சிறப்புகளை கூறிக் கொண்டு வந்தார் ; தீடிரென்று வானம் தன் உடையை மாற்றி மேகக்கூட்டத்தை கருமையாக மாறி கொண்டு ,

உண்டியலை உடைத்த சில்லறை சத்தம் ! சட சடன்னு மழை ; வழி தெரியல ! மலை தெரியல ! பூம்பாறை காடு நனையுது ; மலை பாறை நனையுது ; பாறையில இருக்கிற மரம் , செடி , கொடி நனையுது ; பூமியிலருக்கிற வேர் நனையுது ; நனையாம இருந்தது நாங்க மட்டும் தான் காருக்குள்ளே ! இயற்கை அபிக்ஷேகத்தில் இந்த இளவரசி குளிர நனைந்தால் ;

ஆயிரம் கண்கள் போதுமா!

மழை பெய்ந்து ஒய்ந்த பின் கொடை மலை

பூம்பாறை பச்சை தீப்பிடிச்ச எரிக்கிற

மாதிரியிருக்கு இந்த பூமி !

“ கோவில்யில்லாத ஊர்களில் குடியிருக்க வேண்டாம்” இந்த அழகிய இளவரசி மலையே ஒரு கோவில் மேலும் அழகுவுட்ட சில கோவில்கள் இங்கே ! இந்து சமயத்தால் கவரப்படட ஒரு ஐரோப்பிய பெண்ணால் கட்டப்பட்ட இந்த குறிஞ்சியாண்டவர் கோவில் ; இங்கு ஆண்ட ஆங்கிலேயர் காலத்தில் கொடை மலை பகுதியில் நீல நிற வண்ணத்தில் பூத்து குலுங்கும் குறிங்சிமலரின் அழகை காதலித்த ஒரு ஐரோப்பிய பெண்மணி , இதே பகுதியை சார்ந்த இராமநாதனையும் காதலித்து மணந்து தன் பெயரையும் மாற்றியுள்ளார்கள் லீலாவதி என்று ! இப்படி இந்த கதையை சொல்லிகொண்டுவந்தார் ; கதையை கேட்டுக்கொண்டு குறிஞ்சியாண்டவர் கோவிலையடைந்தோம் ,

முருகப்பெருமானை தரிசித்து ; கோவிலை அங்கப்பிரதேஷணம் செய்துகொண்டிருக்கும் போது எங்களுடன் சேர்ந்து பனிமுட்டங்கள் கொஞ்சி விளையாடி வந்தது ; சில நினைவுகளை பதிவு செய்துவிட்டு பயணம் செய்தோம் , விட்ட கதையை தொடர…….

பூம்பாறையிலிருந்து பார்த்தல் பழனி மலை முருகனை தரிசிக்கலாம் ; பனிமுட்டங்கள் கருணை செய்தல் செய்தால் மட்டும் அப்படி ஒருநாள் இந்த ஐரோப்பிய பெண்மணி குறிஞ்சி மலரையும் பழனி கோவில் தரிசித்த போது பனிமுட்டங்கள் முடியதாலும் ; அதற்கு முருகன் என்ன செய்வார் ? முருக திருவிளையாட்டு இயற்கையோடு விளையாண்டு இந்த கோவிலை காட்டியுள்ளனர் என சிலர் ; தற்போது இந்த கோவில் பினபுறத்திலிருந்து பழனி கோவிலையும் , வைகை அணையும் இளவரசி பேரழகுடு சேர்த்து கண்டு மகிழலாம்.இளவரசி மலை பேரழகில் வரலாற்றை பெருமையாக சொல்லி கொண்டு வந்தார் ; மீசை வைத்த சிறுபிள்ளைகளாக இயற்கையோடு சேர்த்து கதையை ரசித்து கொண்டு சென்றோம் ,

பூம்பாறை செல்லும் வழியில் புதிதாக கட்டிக்கொண்ட்டிருக்கும் மஹாலஷ்மி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு ; பூம்பாறைக்கு பயணத்தை தொடர்ந்தோம் , திருப்பதி கோவில் படிக்கட்டுகள் மாதிரி அடுக்காக பசுமையான வயல்வெளிகள் ;

கண்களுக்கு எட்டிய தூரம் வரை பனிபடர்ந்த மலைகள் , அடர்ந்த காடுகள் , மலை ,குன்றுகள் இருக்கும் இடம் என்றாலேமுருகன் இல்லாமல் எப்படி? 


இதன் குன்றுகள் மத்தியில் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவில் நவபாஷணத்தால் செய்யப்படட சிலை ; இந்த சிலை வடிவில் குழந்தையாக காட்சியளிப்பார் முருகப்பெருமாள் ! மற்ற முருகன் கோவில் போலயில்லாமல் அனைவருக்கும் சமஉரிமை , இடையூறு இல்லாமல் தரிசனம் செய்தோம் ; சிறப்பு தரிசனம் இந்த கோவிலில் இல்லை ! இந்த மலை (மலை கிராமம்) வாழ் மக்களின் செயல் மற்றும் ஒற்றுமையை கண்டு மெய்சிலிர்த்தது , இளவரசி பேரழகி மலை பகுதி மத்தியில் இயற்கையான அமைதியான சூழ்நிலையில் சுத்தமான பராமரிப்பில் கோவில் ! இங்கே ஒரு அம்மா தேனும் , தினைமாவும் கலந்து கோவிலை நிவேதனம் செய்து கொண்டிருந்தார் ; தரிசனம் செய்து விட்டு , அங்கே சென்றோம் அதற்குள் முடிந்தேவிட்டது , தீர்ந்து போன வைத்திருந்த பாத்திரத்தை காண்பித்தார்கள்….,மனதுக்குள் இருண்டுவிட்டது ! பனிமுட்டங்கள் கோவிலை மறைத்தது ! எத்தரமாக கோவிலை வலம் வரும் போது திர்ந்து போய்ச்சு சொன்ன அம்மா மீண்டும் விநியோகம் செய்தார்கள் ; எங்களை கண்டவுடன் ஒரு உருண்டை தந்தார்கள் , கோவிலுக்கு வந்த வேலை நிறைவேறியது போல் ஒர் உணர்வு ! மூடியிருந்த பனிமுட்டங்கள் விலகி கோவில் கோபுர தரிசனம் காட்சியளித்தது .

இந்த பூம்பாறை வேறு உலகம் போல் காட்சியளித்தது ! இயற்கையே வரமாக கொண்ட விவசாயிகளுக்கு தங்க சுரங்கம் ; இந்த சுரங்கத்தை நிலத்தை உழுவதற்கு கோடைவெயில் கூட நிலா வெளிச்சம் தான் ! சோள தொகையில் தேங்கி நிற்கும் உருண்ட மழைத்துளி பனிக்காற்றில் தள்ளலுக்கு தாங்காமல் ‘விழுந்துட்டேன் விழுந்துட்டேன்’ என உருண்டு விழுந்து தண்ணீர்குடம் போல புல்லின் மீது உடைந்தது . இந்த நிகழ்வையெல்லாம் நினைத்து கொண்டு டால்பின் மூக்கு என்ற இடத்தையடைந்தோம் ,

மேலிருந்து கொட்டும் நீர்வீழ்ச்சி தாழ்வான நிலத்தை நோக்கி செல்வது போல , இந்த ஒற்றையடிப் பாதையின் வழியாக நடந்து சென்றோம் ; வழியெங்கும் மனித மூளை செல்லும் எண்ணற்ற நரம்புகள் மாதிரி இந்த மர வேர் வழித்தடம் .

டால்பின் மூக்கு பாறையில் நின்று பார்த்தால் கண்களுக்கு எட்டும் தூரம் வரை பசுமையே ! இந்த பசுமைக்கு மத்தியில் வெள்ளி மழை மாதிரி ஒழுகி வருது தண்ணி !

காட்டுவன யாவும் அழகென்று வேறென்ன அவ்வியற்கை அழகு ! தெருவோரங்களில் எத்தனை கோடி பணத்தை செலவு செய்து செய்யப்படும் செயற்கை அழகுக்கு இயற்கை அழகு ஈடாகுமா ! மனிதர்களால் ஆக்க முடியாத அழகுகள் பல இம்மலையில் திகழ்கின்றன ! என்ன அழகிய கற்கள் ! எத்தனை பல வகையான கற்கள் ! இவை கண்டதும் இவன் யாரோ ஆக்கின என்னென்ன இயற்கை அற்புதம் என்று குரங்கு மாதிரி மலைமேல் ஏரி மரத்துக்கு மரம் மனம் தாவுகிறது .

இந்த இயற்கை அழகை கண்டு தச்சன் உளியினால் செதுக்கி அரும்பாடுபட்ட ஒழுங்குபடுத்தி அழகிய பலப்பல வடிவான கற்குப்பைகள் நிரல் நிரலான மலையில் எல்லா பகுதி கிடைக்கின்றன , உருண்டை ,சதுரம் , நீண்ட , முக்கோணம் , வடிவமும் மற்றும் சொல்ல முடியாத வடிவங்களும் மனது என்ற கண்ணைக் கவருகின்றன ,

 சுத்தமான காற்று மனித கண்களுக்கே தெரியாத துவாரத்தின் வழியே சென்று திகட்டச்செய்கிறது ,


 இவ்வியற்கை அழகை ண்டிருந்த தண்ணீரை ரசித்து , வர்ணித்துக் கொண்டும் அடுத்த கொடை ஏரியை அடைந்தோம் , முந்தைய நாள் போல் எந்த இயற்கை சீற்றமும் இல்லாமல் , இளவரசி வழிவகுத்தால் படகு சவாரிக்கு , தூங்கிக்கொதட்டி எழுப்பி படகு சவாரி செய்ய ஆரம்பித்தோம் .

எங்களுடன் சேர்த்து மீன்களும் சவாரி செய்ய ஆரம்பித்தது ...,

படகு சவாரி செய்து கொண்டிருந்த போது திடீரென்று மழை சாரல் பனிமூட்டம் குடையாக இருந்தது ! பக்கத்தில் இருக்கும் ஒருவரை ஒருவர் கூட காண முடியாத அப்படி ஒரு பனிமூட்டம் ! சற்று நேரம் பிறகு பொழுது அடைந்த நேரம் உண்டியலில் காசு விரலுக்கு வெளிய மட்டும் தெரிகிற மாதிரி இளவரசி மலைக்கு அங்கிட்டு தெரியுது அரைவாசி சூரியன். இந்த வெளிச்சத்துல படகிலிருந்து பார்த்தா பச்சை சேலை நனைந்து போன மாதிரி தெரியுது இந்த இயற்கை பேரழகி இளவரசி மலை !

இவ்வாறு இயற்கை அழகை ரசித்தபடி காட்சி நுகர்ந்தபடி படகு சவாரியை முடித்தோம்.

குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருந்தது வெளி உலகம் குளிர்ந்திருந்தது எங்களுக்கு உள்ளம் மட்டும் கொதித்து இருந்தது இந்த இளவரசியின் பிரிந்துசென்றதை நினைத்து. .....

வீட்டில் ஹோம் தியேட்டரில் கிடைக்காத இசை துளி பேரின்பத்தை இந்த இளவரசி மலையில் கேட்டேன் ! எத்தனை எத்தனை ஏசி களில் கிடைக்காத குளிர்காற்று இந்த மழை மரக்கிளையில் அனுபவித்தேன் ! புன்னகைக்கும் தோட்டத்துப் பூக்கள் இம்மலையில் !

ஒரு வேண்டுகோள் !

இயற்கை மலை சுரண்டியும் , மனித கனிம வளங்களை அழிப்பது மனித இனங்களைப் பெருக்குவது அடுத்த சந்ததிக்கு செய்யும் பெரும்பாவம்.!

பயணியாளர்க்கு கவனத்திற்கு !

ஒரு இடத்துக்கு பயணிக்கும்போது அங்கு உள்ள சிறப்புகளை , நன்மை , தீமைகளை அறிந்து கொண்டால் பயணங்கள் மேலும் மேலும் சுவாரஸ்யமாக இருக்கும் ! கற்று கொண்டே இருப்போம் .




பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று !நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று !

 நீ என்ற தூரம் வரை நீளதோ எந்தன் குடை !

 நான் என்ற நேரம் வரை தூவதோ உந்தன் மழை !

இந்தப் பாடலை கேட்டுக்கொண்டே விடைபெற்றோம் ..!


நன்றி


Rate this content
Log in

Similar tamil story from Romance