தாமோதரன் சாது

Romance Tragedy Inspirational

4.7  

தாமோதரன் சாது

Romance Tragedy Inspirational

என் கனவு பயணம்

என் கனவு பயணம்

3 mins
287



வானத்தில் கருநிலவை போர்வையாக போத்திக்கொள்ளுகின்ற நேரம் அது !


நித்திராதேவியுடன் பேச நித்திரைக்கு சென்ற நேரம் அது !


டாங் ... டாங்... பயணிகள் பணிவான கவனத்திற்கு ! வண்டி எண் 1992 பிறப்பிலிருந்து-இறப்பு வழியாக முக்தி அடைய செல்லும் இறைவடி எக்ஸ்பிரஸ் சர்வமும் சிவமயம் பிளாட்பரத்திலிருந்து புறப்படும்.


ரயில் வண்டி பயணம் எப்பொழுதுமே சுவராஸ்யங்கள் நிரம்பியது .


அரும்பு – மொட்டு - மலர் - பூ - காய் - கனி அதே போல் எல்லா அகவை (வயது) சந்திக்காலம்


ரயில் பயணத்தின் போது பல்வேறு மனிதர்களை சந்திக்க நேரிடும் ; அவை


அன்புங்கிற - மழை !


துக்கங்கிற - நீர்விழ்ச்சி !


கவலைங்கிற - ஆறு !


சோகங்கிற - அணைக்கட்டு !


சந்தோஷங்கிற – கடல் !


இப்படி நீர்வளங்கள் பயணம் செய்யுற மாதிரி இந்த ரயிலில் பயணம் செய்யும் போது பல்வேறுவிதமான  வாழும் மனிதர்களை காணலாம்.


பிரயாணத்தின் போது குழந்தை கூட பிறக்கிறது ரயில் வண்டி பயணம் மாதிரி மனித வாழ்க்கை பயணமும் இருக்கிறது.


வாழ்க்கை என்பது இரயில் பயணம் ...!

ரசனை என்பது ரயிலுக்கு வெளியே தெரியும் மரங்கள் ..!         ஜன்னல் வழியே மரம் பார்த்து ரசிக்கலாமே தவிர ..! ரசனைக்காக இரயிலை விட்டு குதிக்க மாட்டோம் ..!



இயற்கையில் பல்வேறு பரிமாணங்களை ரசித்த அற்புத பயணம் இந்த ரயில் பயணம் இது ..!


பயணத்தின் போது மேக கூட்டங்கள் ஒன்றோடு ஒன்று முட்டி மோதி விளையாடுவது மாதிரி இரயில் பொட்டிகளில் அங்குங்கும் மழலைகள் ஒடியாடி விளையாடுவார்கள்...


மேக கூட்டங்கள் மலையில் மோதி தஞ்சமடைவது மாதிரி மழலைகள் தன் பெற்றோரிடம் தஞ்சமடைவார்கள்...


மின்னல்கள் மேகக்கூட்டங்களை துணி மாதிரி தைப்பதும் ; தைத்ததை கிழிப்பதும் ; அதை போல பெற்றோர்கள் குழந்தைகளை அரவணைப்பதும் ; அடிப்பதுமான இந்த கூத்தை பயணத்தின் போது ரசிக்கலாம்...


பேரலை ஒன்று பாறையை மீது ஒங்கியடித்து குளிப்பாட்டி இடையிடையே இருக்கும் பள்ளத்தில் நீரை நிரப்பிவிட்டு செல்லும் - இரயில் பயணத்தில் சிறிதும் எதிர்பார்க்காத சமயத்தில் சராளங்களிடையே மழை வந்து ஒங்கியடித்து குளிப்பாட்டி செல்லும்..


விரைந்து சென்றுக் கொண்டிருக்கிற பயணம் ஒவ்வொரு இரயில் நிலையத்திலும் நிற்குது மனசு...!


டீ...காபி ... வாட்டர் பாட்டில் .... அம்மா .... சுட சுட....செய்திதாள் .... இப்படி கர்நாடக சங்கீதத்துடன் உள்ளூர் அம்பானிகள்...!


சிலருக்கு இது எரிச்சல் ஒலி !


பலருக்கு கடிகார அலார ஒலி !


பசித்தவருக்கு சங்கீத ஒலி !


புசித்தவருக்கு ச..ரி...க..ம.. என்று வயிற்றில் சஞ்சர ஒலி ...!


கழுகு கோழிக்குஞ்சுகளை தூக்குவது மாதிரி !

இரயில் நிலையத்தில் பொருள்களை தூக்குகிறார்கள் ! இல்லை வாங்குகிறார்கள் .


மீண்டும் பச்சை கொடி காட்டி இரயில பயணிக்க ஆரம்பிக்குது மனசு ....!


வாழ்க்கையங்கிற பயணத்துல ஓடுற மாதிரி - இரயில் நிலையத்தில் ஓடி வாங்க சென்ற பொருட்களை அங்கே விட்டு ஓடிக் கொண்டிருக்கும் இரயிலில் ஏதோ ஒரு பொட்டியில் ஏறி இலக்கையடைவார்கள் ... இதில் இரயிலை தவறா விட்டாவர்களும் இருக்கிறார்கள் - தற்கொலை .


சந்தோஷத்திலிருந்து ஒரு சோக குரல் ..!            

 எதிர் இருக்கையில் வெளிநாட்டு வாழ் இந்தியர் ...   

இரயில் எஞ்சின்ல உத்துன டீசல் எரிய மாதிரி பேச ஆரம்பித்தார் ...

சவுதியிலிருந்து சென்னைக்கு வந்த தூரம் தெரியல ;

 சென்னையிலிருந்து செங்கல்பட்டு பாரம தெரியது ; 

 நான் 48kG தூக்கிட்டு வந்த சுமை பாரம தெரியல ;     

  24 மாசம் மனசுல சேர்த்து வச்ச சுமை இப்ப பாரம

தெரியுது;

துப்பவும் முடியல ...முழுங்கவும் முடியாம ... ஈசன் போல தொண்டையல நீக்குது விஷம் ...   என்றார் ... !

எதிர் திசையிலிருந்து இரயில் காற்றை இழுத்துட்டு வந்து ஜன்னல் வழியா கன்னத்துல அடிச்சிட்டு ...

கண்ணுக்குள் புகுந்து படலங்களில் பசை தடவி கடந்து போகுது ...

கண்ணு கலங்குது ; மனசு கலங்குது ; அறுதல் சொல்ல வார்த்த இல்ல - ஊமை படம் ஓடுது ....!


 அதே எதிர் இருக்கையில் முதியோர் இருந்தால் !

அவருக்கு நித்திரை வரும் வரை ... தம்பிக்கு எந்த ஊர் ஆரம்பிச்சு ??   

உலக அரசியல் வரை போயிட்டு ... நான் உனக்கு தூரத்து சொந்தம்னு ...

அவர் நித்திரைக்கு போயிருவார்..! எதிர் இருப்போரின் வந்த நித்திரை இரயில் வேகத்தில் ஒடியே போய்விடும் ...!


இதுவே தொழில் முனைவரோ ..! வர்த்தகரோ இருந்தால்!

வெங்காய விலை ஆரம்பிச்சி ..? கச்சா எண்ணெய் .... தங்கம் .. அடுக்கடுக்க சரக்கு இரயில் மாதிரி மனசுல அமெரிக்கா வர்த்தக குப்பை சுமந்துட்டு இந்திய இரயிலில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்வார்கள்.


அதுவே இளந்தாரியாக இருந்தால் ...!

இரண்டு கண்களோடு இரண்டு கண் பேசும் ...!

லப்டப்...லப்டப் ..! என்ற இதய ஒலியோடு~இரயில் ஒலியோடு சேர்ந்து சங்கமித்து ..; இசையாக காதுக்குள் சங்கமிக்கும் ..!

முதல் வகுப்பிலுள்ள ஏசி காத்து மாதிரி மனசெல்லம் சிறகு முளைத்த காத்து குளிர் பறக்கிறது -...!


பார்த்த கான நேரத்தில் வண்ணச்சாய

ரோஜா இதழ் அலட்சியமாய் ஈரப்படுத்திக்கொண்டு -

திறந்து எங்க போறிங்க ?? என்று கேட்டால் போதும் ...! 


ஜப்பானில் ஓடும் புல்லட் இரயில் வேகத்துக்கு - மின்சார இரயில் மாதிரி - மின்சாரம் முதுகுத் தண்டை முட்டி தாக்கி

காதல் ஆரம்பித்து ~ திருமணத்துல முடிஞ்சு ... , கடைசி கால வாழ்க்கை வரை கனவு பயணத்துக்கு ஓடும்...! இப்படி இப்படி பேச வேண்டும் ... இன்னது சொல்ல வேண்டும் .. மனக்கோட்டையை கட்டி கொண்டிருக்கும் நேரத்தில் ....அண்ணா! என்றால் மூச்சி நின்று - காத்து நின்று - கடலோசை நின்று -பறவைகள் நின்று - பூமி சுத்துற வேகத்துல தலை சுற்றி ..! வேகத்தில் ஓடிய இரயில் தடம் புரண்டு ... மனக்கோட்டையை தகர்த்துவிடும் ..!


ஜன்னல் கம்பியில் தலை வச்சி !

உடம்பை இரயில வச்சி !

மனசை பிரபஞ்சத்துல வச்சி !

 பயணம் செய்றதுதான் இந்த - தனிமை பயணம் !

தாமரை இலையில் தண்ணீர் மாதிரி இரயிலில்

ஜன்னலோரம் ரசிக்கமிகுந்தவை !


துன்பமான வாழ்க்கை..!

இன்பமான தேடல்..!

தேடல்கள் துன்பம் போல !

துன்பங்கள் தேடல் போல ..!


உங்களுக்கு எந்த ஊர் ??


நீண்ட பெருமூச்சுக்குப் பிறகு ...


யாதும் ஊரே ; யாவரும் கேளிர்...!


தீடிரென்று ... !

ஜன்னலிருந்து வெத்தல போட்டு துப்பி மூஞ்சில தெறிக்கிற மாதிரி ...!

என் அத்தை மூஞ்சில தண்ணீ உத்தி எழுப்பி ...!


எப்ப பாரு பகல் கனவு கண்டுட்டு ..! கடைக்கு போய் பால்பாக்கெட் 100g சீனி வாங்கிட்டு வா...!


நித்திரை....



Rate this content
Log in

Similar tamil story from Romance