Arivazhagan Subbarayan

Abstract Drama Romance

5.0  

Arivazhagan Subbarayan

Abstract Drama Romance

புன்னகை மன்னன்...!

புன்னகை மன்னன்...!

3 mins
312   'புன்னகை மன்னன் பூவிழிக்கண்ணன்' பாடல் மூலம் அலைபேசி அழைக்க, பெயர் பார்த்து, தேவிகா என்று அறிந்து, அழைப்பை அனுமதித்துக் காதில் வைத்து,

  "எங்க இருக்க தேவிகா?" என்றான் கிஷோர்.


  "அடப்பாவி! மறந்துட்டியா? ஹோட்டல் பெர்ல் டவர்ல. எனக்கு பர்த்டே டா! ஒரு தடவையாவது ஒழுங்கா என் பர்த் டேக்கு வந்திருக்கயா? ஒன்னப் போய் லவ் பண்ணினேம் பாரு! என்னச் சொல்லணும்!"

  "சாரி பேபி, உண்மையச் சொன்னா உதைப்பே! இன்னும் அரைமணியில அங்கிருப்பேன்!"


  அழைப்பைத் துண்டித்து, தன் பி எம் டபிள்யூவை விரட்டி சரியாக முப்பதாவது நிமிடம் பெர்ல் டவர் வந்தடைந்தான். தூரத்தில் தேவிகா பார்த்துக் கையசைக்க

  "ஹாய் தேவ்" என்று ஃபிளையிங் கிஸ் கொடுத்தான். 

  "வாடா என் செல்லக் காதலனே!"


 சிவந்த நிறத்தில் ஆறடி உயரத்தில் சிக்ஸ் பேக் வைத்திருந்த பணக்கார கிஷோருக்கு இருபத்து ஏழு வயது. அப்பாவின் டெக்ஸ்டைல் மில்லை அவரை விட இரண்டு மடங்கு லாபத்தில் உயர்த்தி, பீளமேட்டில் இருந்த மற்றொரு மில்லையும் இரண்டே வருடத்தில் கைவசப்படுத்திய பிஸினஸ் மூளைக்குச் சொந்தக்காரன்.


இந்த வருஷ இறுதியில் சக்ஸஸ்ஃபுல் யூத் அவார்டை ஜனாதிபதி கையால் வாங்க இருப்பவன். 


   அவன் காதலிக்கும் தேவிகா இருபத்தைந்து வயது அழகுச்சிலை. இளமை அவளது உடம்பின் ஒவ்வொரு செல்லிலும் வேரூன்றியிருந்தது. யு.எஸ் இல் எம் பி ஏ முடித்து, இந்தியா வந்து அவளும் அப்பாவின் டெக்ஸ்டைல் மில்லை இரண்டாக்கினாள்.


இருவருக்கும் திருமணம் செய்தால் மில் நான்காகிவிடும் என்று கணக்குப் போட்டு, கிஷோரின் அப்பா கனகசுந்தரம் காய் நகர்த்தியதில் இருவரும் இப்போது காதலர்களானார்கள். 


  கிஷோர் தன் டிரேட்மார்க் புன்னகையை தேவிகாமீது பாய்ச்ச

  "இந்த உன் புன்னகையில் தான்டா உன்னிடம் நான் விழுந்தேன், என் அன்புப் புன்னகை மன்னா!" என்று முன் நெற்றியில் விழுந்த முடியை நளினமாக ஒதுக்கி விட்டுக் கண் சிமிட்டினாள்.


  "உன்னோட பார்வையிலயே நான் மயங்கிட்டேன் தேவிகா"

  "ஓ.கே காதல் கைய்ஸ். லெட்ஸ் கட் தி கேக்"

  "ஹேப்பி பர்த்டே டூ யூ" கூச்சல்கள், ஷாம்பெயின் பாட்டில்கள் திறக்கப்படும் ஓசைகளின் நடுவே அழகாகக் கேக்கை வெட்டி, கிஷோரின் வாயில் இவள் ஊட்ட, அவன் பாதி சாப்பிட்டு விட்டு, மீதியை இவள் வாயில் ஊட்டினான். 


   சந்தோஷக் கூச்சல்கள், அட்டகாசச் சிரிப்புக்கள் சூழ்ந்திருக்க பார்ட்டி ஆரம்பமாகியது. விதவிதமான நிறங்களில் விதவித திரவங்களை அழகான கண்ணாடிக் கோப்பைகளில் செல்வந்தர்கள் ஸிப்பிக் கொண்டும், பிஸினஸ் பேசிக்கொண்டும், சின்னச்சின்ன ப்ளேட்களில் அடிக்கடி வலம் வரும் நொறுக்குத் தீனிகளை மென்று கொண்டும் தொப்பைபை வளர்த்துக் கொண்டிருந்தார்கள். 


  இரவு உணவை அனைவரும் முடித்து, பதினோரு மணிக்கு ஒருவழியாகப் பார்ட்டி முடிய பில் பார்த்து இருபது லட்சத்தைக் கட்டிவிட்டு தங்களது பி எம் டபிள்யூ உள் அமர்ந்தார்கள் கிஷோரும் தேவிகாவும்!

  "இப்ப எங்க போறோம் தேவிகா?"


  "நேரா உன் வீட்டுக்குப் போ. மாமா அத்தை காலில் விழுந்து ஆசீர் வாதம். அதன் பின் என் வீடு உன் மாமா அத்தை காலில் விழந்து ஆசீர் வாதம்!"

  "காரை நகர்த்தி அவினாசி ரோட்டில் ஊர்ந்து, காந்திபுரம் வந்து, ஹன்ரட் ஃபீட் ரோட்டில் திரும்பியவுடன் ஒரு சின்னக் கூட்டம் தெரிந்தது.


கூட்டத்தில் இருந்து ஒருவர் அவசரமாக ஓடிவந்தார். காரை நிறுத்தும்படிப் பதட்டத்துடன் சைகை காட்டினார். 

   "தம்பி, ஒரு ஆக்ஸிடென்ட். பையனுக்கு ஒரு பதினஞ்சு வயசிருக்கும். ஆம்புலன்ஸ் சொல்லியாச்சு. வர லேட்டாகும். நீங்க மனசு வச்சீங்கன்னா உங்க கார்ல ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிரலாம்"

  "பையன் யாருங்க?"


  "தெரியலீங்க தம்பி"

  "சரி உள்ளே ஏத்துங்க"

  மூன்று பேர் அந்தப்பையனை உள்ளே படுக்க வைக்க, அவினாசி ரோட்டில் இருந்த அந்தப் பெரிய மருத்துவ மனையின் ட்ராமா வார்டில் நிறுத்தினான் கிஷோர். 

  ஃபார்மாலிட்டீஸ் முடித்து, போலீஸ் வந்து அவனுடைய பெற்றோரை அழைத்துவர, 

டாக்டர் ஒருவர் வெளியே வந்து, "எக்ஸ்ட்ரா டியூரல் ஹெமரேஜ், இம்மீடியட்டா பர் ஹோல் போட்டு ட்ரெய்ன் பண்ணனும்" என்றவாறே சென்றார். 


   அந்தப் பையனின் பெற்றோர்கள் புரியாமல் விழிக்க, 

"சார் ஆப்பரேஷன் பண்ணனும், ஒரு லட்ச ரூபாய் செலவாகும். இங்க பண்ணிக்கிறீங்களா இல்ல சி எம் சி யில என் ப்ரெண்ட் சுந்தசேனுக்கு லெட்டர் தரட்டா? அங்க ஃப்ரீ!"


  "எங்களுக்கு அவ்வளவு வசதியில்லை டாக்டர். நாங்க சி எம் சிக்கே போறோம்"

  அதற்குள் ஜூனியர் டாக்டர் ஒருவர் ஓடிவந்து,"சார் தட் பாய் ஈஸ் ஹேவிங் ஃபிட்ஸ்" என்று படபடக்க, "இனிமேல் ஷிஃப்ட் பண்ண முடியாது. உடனே ஆப்பரேஷன் பண்ணனும்" என்று கூற, கேட்டுக் கொண்டிருந்த கிஷோரும், தேவிகாவும் டாக்டரிடம் வந்து "செய்யுங்க டாக்டர். இந்தாங்க ஒரு லட்ச ரூபாய்குச் செக்".


  ஆப்பரேஷன் முடிந்து, பையன் கண்விழிக்க, அவன் பெற்றோர்கள் நன்றியுடன் இவர்களைப் பார்க்கக் கிடைத்த மன நிம்மதியுடன் காரில் வந்து ஏறினார்கள். 

  ரியர்வியூ மிர்ரரில் தன் முகம் பார்த்தான் கிஷோர். தலை கலைந்திருந்தது. ஆனால் அவன் புன்னகையில் ஒரு கம்பீரம் கலந்திருந்தது. 

    


Rate this content
Log in

Similar tamil story from Abstract