saravanan Periannan

Abstract Romance Classics

4.5  

saravanan Periannan

Abstract Romance Classics

பொன்னியின் செல்வனில் காதல் கதை

பொன்னியின் செல்வனில் காதல் கதை

2 mins
1.0K


கல்கி அவர்களின் எழுத்துகள் மூலம் உயிர் பெற்ற பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள் கொண்ட காதலை பற்றி.

நம் வாலிப பிரயாணி வந்தியத்தேவன் தோழர் பட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலன் இட்ட பணியை மேற்கொள்ள காஞ்சியில் இருந்து ஓலையை கொண்டு போய் தஞ்சையில் சேர்க்க வேண்டும்.

அவனது எண்ண ஓட்டம் எப்படி இருந்தது "பொன்னி நதி பாயும் சோழ நாட்டை கண்களால் பார்த்து விட வேண்டும்,சுந்தர சோழரை தரிசனம் செய்தல் பிறகு அறிவும்,அழகும் இணைந்த இளவரசி குந்தவையை பார்க்க அல்லவோ அந்த மனம் எண்ணமிட்டது ஓலை கொடுக்கும் சாக்கில்."

 நம் வல்லவராயன் சிநேகம் செய்து கொண்டது என்னமோ நம் வீர வைஷ்ணவர் திருமலையை தான்.

பின்பு தன் நண்பன் கந்தமாறன் அரண்மனை நோக்கி சென்றான் வல்லத்து இளவரசன்.

நம் வாலிப பிரயாணிக்கு தான் எத்தனை பெயர்கள் வல்லவராயன், வந்தியத்தேவன்,வல்லத்து இளவரசன்,வாணர் குலத்து வீரன்.

அங்கு தன் வீரத்தை காட்டியபடி சம்புவரையர் அரண்மனையில் நுழைந்தான் வந்தியத்தேவன்.

ஒளிந்திருந்த தன் தோழனின் தங்கையை காணாது ஒளிந்திருந்து நடந்த சதி திட்டங்களை கேட்கும் பாக்கியம் அல்லவோ நம் வந்தியத்தேவனுக்கு.


குடந்தை சோதிடர் இல்லத்தில் இளைய பிராட்டி குந்தவையை காணும் வாய்ப்பு கிட்டுகிறது.ஆனால் நம் வீர வாலிபன் வந்தியத்தேவனால் பார்க்க முடியவில்லை.

பின்பு கிளம்பி தஞ்சாவூர் செல்லும் மோகன சுந்தரி,அழகின் சிற்பமென பல்லக்கில் சென்ற பழுவூர் ராணி நந்தினியை காணும் நம் வீர வாலிபன் முத்திரை மோதிரம் பெற்று விடுகிறான்.

நந்தினியிடம் பேசும்போதேல்லாம் இளைய பிராட்டி அல்லவோ அவன் மனதில் தோன்றினாள்.

முதல் காதலர்கள் பொன்னியின் செல்வனில் நம் வந்தியத்தேவன் மற்றும் குந்தவை தான்.

பின்பு இளவரசன் அருள்மொழிவர்மன்,நமது பொன்னியின் செல்வனும்,அடிக்கடி மயங்கும் வானதியும் ( மூர்ச்சை மூலம் காதல் பெற்றாள் இந்த மகராசி),ஆம் மூர்ச்சை அடையவில்லை என்றால் பொன்னியின் செல்வரே இவளிடம் வந்து பேசியிருப்பாரா இல்லை தன் தமக்கையிடம் கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ள சொல்லி கேட்டிருப்பாரா.

இந்த காதலுக்கு முன் நம் சேந்தன் அமுதனை வந்தியத்தேவனிடம் தம் அத்தை மகளை பற்றி கூறி இருக்கிறாள்.

ஆம்,படகு வலிக்கும் வீரமான பூங்குழலி தான்.


இது ஒரு ஆத்மார்த்தமான காதல்,கிட்டதட்ட சேந்தன் அமுதன் பூங்குழலியை பூசித்தார் காதலால் என சொல்லாம்.

வந்தியத்தேவன் குந்தவையோ ஒருவரை ஒருவர் மனதில் ரகசியமாய் அல்லவோ காதல் புரிந்தனர்.

அருள்மொழி,வானதி காதலோ தனி ரகம்,மெல்ல மெல்ல வளர்ந்தது.

அருள்மொழி,பூங்குழலி இருவருக்கும் ஒருவர் மீது இன்னொருவருக்கு அந்த காதல் எண்ணம் இருந்தது என சொல்லாம்.


மூர்க்கதனமான காதல் நம் ஆதித்த கரிகாலனுக்கும்,நந்தினிக்கும்.

காதலி கெஞ்சியும் மனது இரங்காமல் வாள் வீசிய ஆதித்த கரிகாலன் பின்னாளில் சதியில் மாட்டி உயிரிழந்தான்.

தவறு செய்து விட்டோமோ என்ற எண்ணமே ஆதித்த கரிகாலனை படாத பாடு படுத்திவிட்டது அவன் நிம்மதியை பறித்து.

பவித்ரமான காதல்கள் என பொன்னியின் செல்வனில் சில உண்டு.

சேந்தன் அமுதன் பூங்குழலி மீது கொண்ட காதல்.


சுந்தர சோழன் ஊமைராணி மந்தாகினியிடம் கொண்ட காதல்.

எப்படி இந்த காதலை பற்றி சொல்லாமல் இருப்பேன், மணிமேகலை வந்தியத்தேவன் மீது கொண்ட காதல்.

பித்து பிடித்து பிச்சியாக மணிமேகலையை மாற்றிய காதல்,அண்ணன் தந்தை குடும்பம் பற்றிய கவலை அவளுக்கு இல்லை,காதலன் மீது சுமத்தப்பட்ட பழி துடைக்க தன் தலையில் கொலை பழி போட்டுக்கொண்ட மாதரசி.

தமையன் தோள் பின் நின்றபடி,

காதலன் முகம் கண்டாயடி மணிமேகலையே,

கண்ட மாத்திரம் மனதை வந்தியத்தேவன் தாழ் மனதை கொடுத்தாய்,

வீணை மீட்டியபடி அவன் முகம் பார்த்தாய்யடி,

பிச்சியாகவே மாறிப்போனாயடி ரத்தினமே அவன் மீது கொண்ட அன்பினால்,

வந்தியத்தேவா உனக்கு தனயள் பிறந்தால் பெயர் மணிமேகலை என்று பெயர் இடுவாய் அல்லவோ.

மனம் வலித்தது மணிமேகலை உயிர் பிரிந்து அவள் ஆத்மா வந்தியத்தேவனின் உயிரில் கலந்த போது.

மணிமேகலை கதாபாத்திரத்தில் நான் உணர்ந்தது எதிர்பார்ப்பற்ற காதல் கொண்டாள் இந்த பெண்.



ஆனால் இவள் குடும்பத்தினர் இவள் மீது திணித்த முடிவுகள் பழைய மதுராந்தகன் பிறகு ஆதித்த கரிகாலனை மணம் செய்ய வற்புறுத்தியது மிகவும் தவறான செயல்.

பெண்களின் திருமண வாழ்வில் சரியான வரனை தேர்வு செய்ய உதவுங்கள் ஆனால் நீங்கள் எடுத்த முடிவை அவள் மீது திணிக்காதீர்கள்.


என் கருத்து: பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்கு ஆதரவு தாருங்கள்,அதனொடு பொன்னியின் செல்வன் புத்தகங்களையும் படியுங்கள்.



Rate this content
Log in

Similar tamil story from Abstract