Saravanan P

Abstract Tragedy Children

4.5  

Saravanan P

Abstract Tragedy Children

பெற்றோர்: யார்?

பெற்றோர்: யார்?

3 mins
318


வருண் அன்று காலை பள்ளிக்கு வெளியே அவன் அப்பா முன் தலையை நிமிர்த்தாமல் நின்று கொண்டு இருந்தான்.


சொன்னது புரிஞ்சுதா? டெஸ்ட்ல மார்க் குறைஞ்சுது னா? என கோபத்துடன் பேச மூன்றாம் வகுப்பு படிக்கும் வருண் சரி அப்பா என சொல்லி பள்ளிக்குள் வந்தான்.


வருண் திரும்பி பார்க்கும் பொழுது இன்னொரு குழந்தைக்கு அவர்கள் பெற்றோர் கொஞ்சி,நெற்றியில் முத்தமிட்டு அனுப்புவதை பார்த்து கண் கலங்கி வகுப்புக்கு வந்தான்.


வருண் தனது இடத்தில் தனியாக தான் அமர்ந்து இருந்தான் அவன் யாருடனும் பேச மாட்டான்,அவனுடனும் யாரும் பேச மாட்டார்கள்.


ரம்யா மேம் வகுப்புக்கு வந்து பாடம் எடுக்க ஆரம்பித்து ஐந்து நிமிடங்களில் வருண் தூங்கி வழிந்தான்.


இதை கவனித்த ரம்யா மேம் அவன் பெயரை சொல்லி கத்தி போய் மூஞ்சி கழுவிட்டு வா என வெளியே அனுப்பினார்.


மூஞ்சி கழுவி வகுப்புக்கு வந்த வருண் அமைதியாக மீண்டும் இடத்தில் அமர்ந்து பாடத்தை கவனித்தான்.


இடைவெளை நேரத்தில் வருண் அவன் இடத்தில் அமர்ந்து அனைவரும் சிரித்து விளையாடுவதை பார்த்து கொண்டே இருந்தான்.


திடீரென இருவர் அவெஞ்சர்ஸ் பொம்மை எடுத்து விளையாட வருண் அதை கிட்ட சென்று பார்த்தான்.


அந்த இரண்டு மாணவர்கள் வருண் பார்ப்பதை உணர்ந்து இங்கிருந்து போ என கூற சோகமாக வந்து தன் இடத்தில் அமர்ந்து ஒரு பேப்பரை கிழித்து வரைய ஆரம்பித்தான்.


அன்றைய வகுப்புகள் முடிந்து வீட்டுக்கு வந்த வருண் அமைதியாக காலணிகளை கலட்டி ஒழுங்காக வைத்து விட்டு,முகம் கை கால் தழுவி விட்டு,டிரஸ் மாத்தி கொண்டு படிக்க அமர்ந்தான்.


அவனது அம்மா பால் ஆத்தி விட்டு டம்மென்று அவன் முன் வந்து வைத்து விட்டு போனை எடுத்து கொண்டு உள்ளே சென்றார்.


வருண் படித்து முடித்து விட்டு டிவி போட சென்று ஒரு கணம் நின்றான்.


பிறகு டிவி போட்டு கார்டூன் பார்த்து கொண்டு இருக்க அவனது அப்பா வண்டி சத்தம் கேட்டு டிவியை ஆப் செய்து விட்டு தனியே அமர்ந்தான்.


அவனது அப்பா வீட்டிற்குள் வந்து முகம் கை கால் கழுவி உடை மாற்றி கொண்டு டிவி முன் சென்று கையை நீட்டி விட்டு பெல்டை எடுத்தார்.


வருண் முன் வந்து நின்று எவ்வளவு தைரியம் இருந்தா டிவி போட்டுருப்ப? என அடிக்க ஆரம்பிக்க "என்னை அடிக்காதீங்க அப்பா,வலிக்குது" என கதறி அழுதான் வருண்.


பெல்டை வீசி விட்டு சாப்பிட்டு விட்டு அவர் அமர்ந்து டிவி பார்க்க வருண் பயந்து கொண்டே தன் அறைக்கு சென்று படுத்து உறங்கினான்.


அடுத்த நாள் பள்ளிக்கு வந்த வருண் தன் இடத்தில் அமர்ந்து இருந்தான்.


ரம்யா மேம் அன்று வகுப்புக்கு வந்து போர்டில் ஒரு வாக்கியம் எழுதி அதற்கு விடை எழுத சொல்லி வருணை அழைக்க வருண் தாங்கி தாங்கி நடந்து வந்து சாக் பீஸ் வாங்க கையை நீட்டும் பொழுது ஒரு பெல்ட் காயத்தை கண்ட ரம்யா மேம் நீ பதில் சொல்லு நான் எழுதுறேன் என எழுதி விட்டு அவனை முதல் பெஞ்ச்சில் பிற மாணவர்களுடன் அமர வைக்கிறார்.


வருணை இடைவேளை நேரத்தில் அழைத்த ரம்யா மேம் அவனிடம் வீட்ல யாராவது அடிச்சாங்கல? என கேட்க இல்லை என தலையாட்டி விட்டு நின்ற வருணின் தலையில் கை வைக்க ஸ்ஸ் என்றான் வருண்.


தலையில் இருந்த வீக்கத்தை பார்த்த ரம்யா மேம் அவனை டிஸ்பென்ஸரி அழைத்து சென்று எங்க வலிக்குது என கேட்க வருண் தன் சட்டையை கழட்டி காட்ட உடம்பில் அவ்வளவு காயங்கள் ரத்தம் கட்டியும் பழுத்து போயும் இருந்தது.


ரம்யா மேம் கண் கலங்கி நின்ற வருணை பார்த்து வா பள்ளி முதல்வரை பார்க்க போகலாம் அப்படினு கூப்பிட வேண்டாம் மேம் என அவர்கள் கையை பிடித்து தடுத்தான் வருண்.


ரம்யா மேம் அவனுக்கு மருந்து போட்டு விட்டு அவனை அமர சொல்லி விட்டு பள்ளி முதல்வரை பார்த்து விஷயத்தை சொல்ல அவரும் வருணை பார்த்து மனம் கலங்கினார்.


பள்ளி முதல்வர் வருணை நம்ம தான் பார்த்து கொள்ள வேண்டும்,இந்த பள்ளி நேரத்தில் அவன் வாழ்க்கையை நல்வழிப்படுத்தி,அவன் திறமையை வெளியே கொண்டு வரனும் என அனைத்து ஆசிரியர்களுக்கும் உத்தரவு போட்டார்.


அனைத்து ஆசிரியர்களும் வருணுடன் மற்ற மாணவர்களை பேச வைத்தனர், அவனது திறமைகளை கண்டுபிடித்து அதற்கு பயிற்சி அளித்தனர்.


வருண் மனம் திறந்து முதல் முறை ரம்யா மேம்மிடம் "என் அம்மா என்கிட்ட ஒழுங்கா பேச மாட்டாங்க,என்னை தள்ளியே வைச்சுருக்காங்க,என் அப்பா என்னை அடிக்காத நாளே இல்லை" என அழுதபடி மேம் முகத்தை பார்த்தான்.


வருணின் அப்பா இவன் பிறந்த நேரம் தான் அவர் தொழில்,வாழ்க்கை பின்னடைந்தது என அவன் மீது வெறுப்பை கொட்டினார்.


வருணின் அம்மா அவனை கட்டாயத்தின் பெயரில் பெற்று கொண்டு,சிறு வயதில் மெதுவாக படித்த மற்றும் சுறுசுறுப்பு இல்லாமல் இருந்த வருணை தனிமையில் தவிக்க விட்டார்.


7 வருடங்கள் கழித்து,


வருண் அனைவருடனும் சகஜமாக பழகி ஒரு ஓவியனாக பல விருதுகள் வென்று பள்ளி அளவில் மூன்றாவது மாணவனாக வந்தான்.


இது எல்லாம் அந்த பள்ளி ஆசிரியர்,முதல்வர், மாணவர்களால் தான்.


அனைத்து பெற்றோருக்கும்,வருங்கால பெற்றோருக்கும்,குழந்தை வளர்ப்போர்க்கும்,


"பிள்ளைகள் தவறு செய்தால் கண்டியுங்கள்,ஒரு பெற்றோர் அன்பு,ஒரு பெற்றோர் கண்டிப்பு அல்லது அன்பு கலந்த கண்டிப்பை அவர்களிடம் காட்டுங்கள்.


உங்கள் பிள்ளையை உடலளவில்,மனதளவில் காயப்படுத்தி என்ன சாதிப்பீர்கள்,நீங்கள் அவர்கள் மனதில் நிரப்பும் வெறுப்பு அவர்களை முடக்கும்.


உங்களால் இந்த உலகத்திற்கு வந்த குழந்தைகள் தானே அவர்கள் தவிர உங்களது ஆசை,பேச்சை கேட்டு நடக்கும் ஆள் அல்ல.


அவர்களுக்கும் ஆசை,கனவு,சுயசிந்தனை உள்ளது,இவையெல்லாம் மேற்பார்வை இடுவது தான் பெற்றோரின் கடமை.


உங்கள் குழந்தையுடன் ஒரு நாள் சகஜமாக பேசுங்கள்,அவர்களை உங்களிடம் பேச விடுங்கள்."










Rate this content
Log in

Similar tamil story from Abstract