Saravanan P

Drama

4  

Saravanan P

Drama

சட்டென்று வந்த நினைவுகள்

சட்டென்று வந்த நினைவுகள்

2 mins
8


அன்று கம்பெனியில் தந்த பாராட்டுகள், நண்பர்கள் என் நினைத்தவர்கள் அவனுக்கு தந்த கேலி,கிண்டல் மற்றும் அவன் மிகவும் நட்புடன் பேசியவர்கள் அவனுடன் பெரிதாக பேசாமல்,அவனே வலிய சென்று பேசினாலும் கேள்விக்கு பதில் என நடந்து கொண்டது என நினைத்து நினைத்து கம்பெனி வண்டியில் வந்து கொண்டிருந்தான் சரவணன்.

வண்டி அவன் தங்கி இருந்த ஹாஸ்டல் அருகே வந்து நின்றும் அன்று ஏனோ அங்கு செல்வதில் அவன் காலுக்கு அவ்வளவு ஆர்வம் இல்லாமல் மிகவும் மெதுவாக நடந்து சென்றான்.

பல நாட்களாக ஹாஸ்டல் சாப்பாடு சாப்பிட்ட அவன் நாக்கு சுவையான உணவு ஒன்றை சாப்பிட நினைத்தது போலும் அவன் கால்கள் ஒரு பிரியாணி கடை நோக்கி நடந்தது.

ருசிக்கு இல்லை என்றாலும் பசிக்கு சாப்பிட வேண்டும்,கிடைக்கும் உணவை குறை சொல்லாமல் சாப்பிட வேண்டும் என அறிவுரை கூறும் அனைவரையும் எங்கள் ஹாஸ்டல் வந்து ஒரு இரண்டு நாள் சாப்பிட அன்புடன் சொல்கிறேன்.

கிடைத்த உணவை சாப்பிட சொல்பவர்கள் அதை செய்பவர்கள் பாவம் என கூற வேண்டாம்,அது அவர்கள் கடமை என்பதை விட பொறுப்பு.காசு வாங்கி கொண்டு சப்பை கட்டு கட்ட அவர்கள் ஒன்றும் சேவை செய்யவில்லை,நான் உணவுக்கு பணம் தருகிறேன்,அதற்கு சரியான உணவை தர வேண்டியது அவர்கள் பொறுப்பு,கடமை தானே தவிர கடமைக்கு அல்ல.

அந்த கடை வாசலை அடைந்த சரவணன் புரோட்டா கொத்தும் சத்தம் கேட்டான்.

பின்பு கடைக்கு உள்ளே சென்று ஒரு‌ மட்டன் பிரியாணி,ஒரு ஆம்பலெட் ஆர்டர் கொடுத்து விட்டு மொபைலை எடுத்து சாப்பாடு வரும் வரை பார்க்க முற்பட்டவன் ஏனோ மொபைலை ஓரமாக கைக்கு அருகில் வைத்து விட்டான்.

மகிழ்ச்சி,சோகம் என் இரண்டையும் தரும் இந்த கைபேசி அவனுடைய சோகத்துக்கு காரணமான அனைத்து நினைவுகளையும் உள்ளடக்கி இருந்தது.

ஆரோக்கிய அறிவுரை: இந்த கதையில் கடை உணவுகளை மட்டுமே சாப்பிடவேண்டும் என் கூற வரவில்லை.


அனைவருக்கும் தரமான,சுவையான உணவை ஒரு நாளாவது உண்ண வேண்டும் அதுவும் ஒரு கடைக்கு சென்று என்ற ஆசை இருக்கும்,அந்த ஆசை கொண்ட சரவணனும் அந்த கடைக்கு சென்றான்.

அப்பொழுது அவன் பின்னால் அமர்ந்திருந்த நபர்களில் ஒருவர் தனது மொபைலில் எதிர்நீச்சல் படத்தின் “வெளிச்ச பூவே” பாடலை பிளே செய்தார்.

சரவணனுக்கு அந்த பாடலுடன் அவன் சேர்த்து வைத்திருந்த அவனுடைய ஐந்தாம் வகுப்பு காதல் நினைவுகள் அவனுக்கு வந்தது.

அது நட்பா,காதலா? என்று சொல்ல சரவணனுக்கு தெரியவில்லை என்றாலும் அந்த பெண்ணுடன் பேசி பழகிய 6 மாதங்கள் அவனுக்கு நினைக்கும் போதெல்லாம் மகிழ்ச்சி,சோகம் என் இரண்டையும் கொடுத்தது.

ஏனெனில் அந்த பெண்ணை அவன் ஆறாம் வகுப்பு சென்ற பிறகு பார்க்கவில்லை,அவள் வேறு பள்ளிக்கு சென்று விட்டாள்.

உணவு வந்ததும் அதை சாப்பிட்டு கொண்டிருக்கும் போது ஹோட்டல் டிவியில் விஜய் டிவியில் “கும்கி” படம் ஓடி கொண்டிருந்தது.

அந்த படத்துடனும் அந்த ஐந்தாம் வகுப்பு நினைவுகளை சேர்த்து வைத்திருந்தான்,அது அந்த பாடலின் ஒவ்வொரு வரியுடனும் அவனுக்கு ஞாபகம் வந்தது.

நினைவுகளை மெல்ல அசைபோட்டு கொண்டு வீடு வரை நடந்து சென்று இரவு படுத்த உடன் மொபைலில் யூடியூப் திறக்க அது துப்பாக்கி படத்தை பரிந்துரைத்தது.

அந்த படம் அவனது மொத்த 10ஆவது வயது வாழ்க்கை, ஐந்தாம் வகுப்பு நினைவுகளை கொண்டு வந்தது.

சிறிது நேரம் படத்தை பார்த்து விட்டு பின்பு அலாரம் வைத்து விட்டு போனை தள்ளி வைத்து விட்டு படுத்துறங்கினான் சரவணன்.



Rate this content
Log in

Similar tamil story from Drama