Saravanan P

Abstract Drama Inspirational

4  

Saravanan P

Abstract Drama Inspirational

தேவையற்ற சிந்தனைகள்: சிறுகதை

தேவையற்ற சிந்தனைகள்: சிறுகதை

2 mins
8


லட்சுமி,ஒரு கண்டிப்பான குடும்ப தலைவி,கணவர்,ஒரு பிள்ளை என ஒரு நிறைவான வாழ்க்கை வாழ்ந்தாலும் அந்த குடும்பத்தில் நடக்கும் சண்டைகள் மூவருக்கும் அதிக வலியை,வேதனையை தந்து கொண்டு இருந்தது.


கணவர் பெற்றோர் இன்றி அண்ணன் வீட்டில் வளர்ந்ததால் அண்ணன்கள்,அக்கா சொல்வதை அப்படியே நம்பி முடிவுகளை எடுப்பார்.


லட்சுமி தனது சிறு வயதில் சொந்தங்களால் பாதிக்கப்பட்டதால் சுயமரியாதை பாதிக்கப்பட விடமாட்டார்,

சொந்தங்கள் தங்களை எதுவும் சொல்லி விட கூடாது என கவனமுடன் இருப்பார்.


மகனுக்கோ சொந்தங்களில் யார் நல்லவர்,யார் கெட்ட எண்ணங்களுடன் பழகுகிறார்கள் என புரிந்து கொள்ளாமல் ஒருவர் சொன்னதை யாரிடம் சொல்ல கூடாதோ அவரிடம் சொல்லி ரகசியம் மற்றும் மனதிற்குள் எதுவும் வைத்து கொள்ள தெரியாத ஒருவனாக வளர்ந்தான்.


வாழ்க்கை சீக்கிரம் அனைத்தையும் மாற்றும் என்பதை லட்சுமியின் பையன் வளர‌ வளர சொந்தம்,உலகத்தை பற்றி புரிந்து கொண்டான்.


இம்முறை அவனது புரிதல் தான் செய்ய நினைப்பது தவறு இல்லை என்றால் எதற்கு மற்றவர்கள் பற்றி கவலை பட வேண்டும் என்பது தான்.


தான் வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்ட போது அவனை நோகடித்த சொந்தங்கள் மீது மிகுந்த கோபம் கொண்டான்,

ஒருபோதும் தான் இவர்களை மாதிரி இருக்க கூடாது என நினைத்தான்.


வேலை கிடைத்த உடன் தன் முதல் மாத சம்பளத்தில் தனக்கு பிடித்தமானவர்களுக்கு சில பொருட்களை வாங்கி வந்தான்.


அவனது வீட்டில் அப்பொழுது தான் சண்டை ஆரம்பித்தது,


"இந்த வீட்டிற்கு கொடுத்தால் அந்த வீட்டில் என்ன நினைப்பார்கள்,

இவர்களுக்கு கண்டிப்பாக கொடுக்க வேண்டும், குளிக்காமல் போக கூடாத,இவர்கள் என்ன நினைப்பார்கள்,

அவர்கள் என்ன சொல்லுவார்கள்" என இரவு முழுக்க பயணித்து வந்த பையனின் மனதில் என்ன உள்ளது என தெரியாமல் அம்மா பேச,அப்பாவும் பார்ப்பதை அனைத்தையும் தன் அக்காவிடம் சொல்ல வேண்டும் என‌‌ யோசித்து கொண்டிருந்தார்.


அனைத்தையும் கேட்டு பொறுக்க முடியாத பையன் அந்த பொருட்களை விசிறி அடித்து விட்டு சென்றான்.


"என்றைக்கு சொந்தங்கள் என்ன சொல்லுவார்கள் என எண்ணாமல் நமக்கு எது நல்லது, கெட்டது என யோசித்து செயல் படுகிறோமோ அந்த நேரத்தில் இருந்து நம் வாழ்க்கை நல்லா இருக்கும்.


நீங்கள் எது செய்தாலும் அதை நல்லது,கெட்டது என சொல்ல சொந்தங்கள், சமூகம் இருந்து கொண்டே தான் இருக்கும்,தப்பு செய்யாத நீங்கள் அவர்களை பார்த்து என் பயப்படவேண்டும்.


நீங்கள் உங்களுக்காக சிந்தித்து செயல்படுங்கள்,

அடுத்தவர்களை எண்ணி அல்ல நீங்கள் தவறு செய்யாத வரை எதை நினைத்தும் பயப்பட தேவையில்லை".


Rate this content
Log in

Similar tamil story from Abstract