Saravanan P

Abstract Drama Inspirational

4.5  

Saravanan P

Abstract Drama Inspirational

உதவும் உள்ளம்

உதவும் உள்ளம்

2 mins
6


பகலவன் பள்ளி முடிந்து வீட்டிற்குள் நுழைந்தான்.

இன்னும் ஒரு வாரத்தில் தீபாவளி என அவனது அம்மா சொல்லி கொண்டே அவன் சாப்பிட சாப்பாடு எடுத்து வைத்தார்.

பகலவன் டிவிக்கு அடியில் 5000 ரூபாய் இருப்பதை கண்டான்.

அவனது அம்மா வருவதை கொலுசு சத்தம் மூலம் உணர்ந்து பையை வைத்து விட்டு வேகமாக முகம்,கை,கால் சுத்தம் செய்ய சென்றான்.

முகம்,கை,கால் சுத்தம் செய்து விட்டு சாப்பிட அமர்ந்த அவன் தனக்கு இந்த தீபாவளிக்கு டிரஸ் எடுக்க வேண்டாம்,போன வருசம் எடுத்த டிரஸ் போட்டுக்குறேன் என சொன்னான்.

அவனது அம்மா குனிந்து பேசிய அவனது முகத்தை நிமிர்த்தி அறைந்தார்.

என்ன‌ பேச்சு இது? என திட்டி விட்டு,மரியாதையா சாப்பிட்டு கடைக்கு வர? ஊர்ல இருக்கிறவன் எல்லாம் நல்லா நாள் அதுவுமா உங்கள் பையன் ஏன் இப்படி டிரஸ் போட்டிருக்கான் என் கேட்கவா? என் சொல்லிவிட்டு சென்றார்.

அடுத்து துணி கடைக்கு சென்று டிரஸ் எடுத்து விட்டு ஒரு சாப்பாட்டு கடைக்கு சென்றனர் பகலவனும்,அவனது அம்மாவும்.

அவனது அம்மா என்ன சாப்பிடுற? என கேட்க, பகலவன் அமைதியாக அமர்ந்திருந்தான்.

ஏய் என அவனது அம்மா சொல்லி விட்டு சப்ளையர் இடம் அவர்களுக்கு ஒரு தோசை மற்றும் ஒரு சில்லி பரோட்டா ஆர்டர் கொடுத்து விட்டு பையனை பார்த்து கொண்டிருந்தார்.

இருவரும் சாப்பிட்டு விட்டு பஸ் ஏறினர்.

பகலவனின் அம்மா அவனது கையில் காசு கொடுத்து பஸ் டிக்கெட் எடுக்க சொன்னார்.

பகலவனும் பேசாமல் காசை கையில் வாங்கி டிக்கெட் எடுத்தான்.

வீட்டிற்கு சென்ற உடன் பகலவனின் அம்மா அவனிடம் எதற்கு இப்படி வாயை மூடிட்டே இருக்க? வாயை திறந்தா மூடவே மாட்ட? என கேட்க பகலவன் அவனது ஸ்கூல் பையை திறந்து ஒரு ஆதரவற்றோர் இல்லத்திற்கு உதவ ஒவ்வொரு மாணவனும் தனக்கு தெரிந்தோரிடம் நிதி சேகரித்து வர சொல்லி பள்ளியில் படிவம் ஒன்று தந்ததை கூறினான்.

தன்னிடம் ஏற்கனவே நிறைய துணி உள்ளது என கூற அவனது அம்மா அவனை அரவணைத்து கண்ணீர் துளிர்த்தார்.

பகலவன் அம்மா அவனிடம் “இது நல்ல விசயம் தான்,ஆனால் நமக்கு மிஞ்சி தான் தானமும்,தர்மமும்,நாம நம்ம தேவைகளை பூர்த்தி பண்ணிட்டு வாழ்றோம் அதுக்காக நானும் உங்க அப்பாவும் எவ்வளவு செலவுகளை குறைச்சு இருக்கோம் என் உனக்கு தெரியாது.

வருசத்துல ஒரு நாள்,நம்ம சேர்த்த காசுல ஒரு நல்ல டிரஸ் நம்ம மூணு பேரும் போட்டுக்கனும்ல,200 ரூபாய் அவங்களுக்கு உதவ குடு, நம்ம தீபாவளி செலவால நம்மளால நிறைய தர முடியாது” என கூறினார்.

பகலவன் தன் சொந்தக்காரர்கள்,பக்கத்து வீடு என கொஞ்ச பேரிடம் பணம் வாங்கி அவர்கள் பெயர்களையும் அந்த படிவத்தில் எழுதி பள்ளிக்கு சென்று மொத்தம் 600 ரூபாய் தந்தான்.

12 வருடங்கள் கழித்து,

சென்னையில் ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தான் பகலவன்.

சொந்த ஊர் விட்டு சென்னை வந்த பகலவன் தனது சம்பளத்தில் தங்கும் இடம்,சாப்பாடு,பஸ் செலவுகள் என பணத்தை மிகவும் கவனத்துடன் செலவழித்தான்.

பெற்றோர்க்கு அனுப்பும் பணத்தை சம்பளம் வந்த உடன் தனியே எடுத்து வைத்தான்.

அதே போல் பிறருக்கு உதவ தனது தேவையற்ற செலவை குறைத்து சிறிது பணம் சேர்த்து ஆன்லைனில் பகிரப்பட்டும் உதவி தேவைகளை கண்டு உதவுவான்.

அவ்வாறு சேர்த்து வைத்த பணத்தில் உதவிகள் செய்து முடித்து மாத கடைசியில் செலவுகளை சமாளித்து கொண்டிருந்தான் பகலவன்.

அப்பொழுது மருத்துவ பண உதவி என அவன் மெசேஜ் ஒன்றை பார்க்க உடனே பகலவன் தன்னிடம் உள்ள பணத்தை பார்க்க 200 ரூபாய் அக்கவுண்ட்டில் இருந்தது.

இன்னும் மூன்று நாள் தாக்குபிடிக்க இவ்வளவு போதுமா? என மனம் யோசித்தாலும் உதவ வேண்டும் என அவனுக்கு தோன்றி கொண்டே இருந்தது.

40 ரூபாய் தரலாம் என முடிவு எடுத்து அந்த உதவி தேவையில் இருந்த நம்பருக்கு அனுப்பினான் பகலவன்.

அப்பொழுது உதவிய பின் கிடைத்த மனநிறைவு பகலவனுக்கு அளக்க முடியாது மகிழ்ச்சியை தந்தது.

“உதவுவது என்பது நாம் மனதார இயன்றதை கொடுப்பது.

நம்மால் நிறைய தர முடியும் என்றால் தரலாம் அல்லது நம்மால் இயன்ற உதவியை மகிழ்ச்சியுடன் செய்வோம்.

நாம் செய்யும் உதவி கேட்பவர்களை சென்றடைய வேண்டும்

 என எண்ணினால் போதும்,நாம் அந்த உதவியை செய்து விடலாம்”.



Rate this content
Log in

Similar tamil story from Abstract