Saravanan P

Abstract Drama Inspirational

5.0  

Saravanan P

Abstract Drama Inspirational

வாழவைத்த நண்பன்

வாழவைத்த நண்பன்

2 mins
442


விஸ் தனது மொபைலில் தன் நண்பன் ஜெவிற்கு கால் செய்து கொண்டிருந்தான்.


விஸ் ஜெவை பார்த்து பல வருடங்கள் ஆகியது,இருவரும் வெவ்வேறு மாநிலங்களுக்கு 5 வருடங்களுக்கு முன் சென்று தங்கி தங்கள் வாழ்க்கையை வாழ தொடங்கினர்.


விஸ் ஜெவிடம் போனில் பேச முயற்சி செய்தும் ஜெ பதில் அளிக்கவில்லை.


விஸ்ஸிற்கு ஜெ மீது அளவு கடந்த கோபம் வந்தது,இனி அவனுடன் பேசவே போவதில்லை என முடிவு எடுத்தான்.


அதே நாளில் ஜெ பலமுறை விஸ்ஸிற்கு கால் செய்தும் விஸ் அதை வேண்டுமென்றே அட்டெண்ட் செய்யாமல் இருந்தான்.


ஜெ சரி,அப்பறம் பேசிக் கொள்ளலாம் என நினைத்து கால் செய்வதை நிறுத்தினான்.

நாட்கள்,மாதங்களாக ஆகின.

தான் கால் செய்து எடுக்காத அவன் என் நண்பன் அல்ல என விஸ் முடிவு எடுத்தான்.


விஸ்ஸிற்கு புது நண்பர்கள் கிடைத்தனர்.


அனைவரும் அவனுடன்‌ நன்றாக பழகினர்.


இந்த புது நண்பர்கள் விஸ்ஸின் கல்லூரியில் அவனுடன் படித்தவர்கள்,நன்றாக பேசிக்கொள்ளவில்லை என்றாலும் ஒருவருக்கு ஒருவர் ஒரளவு தெரிந்து வைத்திருந்தனர்.


இப்பொழுது அது ஒரு புதிய நட்பை ஆரம்பித்தது.



விஸ் மற்றும் அவனது புது நண்பர்கள் சேர்ந்து ஒரு தொழில் தொடங்க முடிவெடுத்தனர்.


அதில் அதிக முதலை விஸ் போட்டு முக்கிய பொறுப்பில் இருக்க டீல் போடப்பட்டது.


கம்பெனி ஆரம்பித்து நன்றாகவே செயலாற்றுகின்றனர்.



ஜெ அப்பொழுதும் வாரம் ஒரு தடவை கால் அல்லது வாட்ஸ்-அப்பில் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என மெசேஜ் செய்தான்.


விஸ் காலையும் எடுக்காமல்,அந்த மெசேஜ்களை ஒரு முறை கூட முழுவதும் படிக்காமல் அப்படியே டெலிட் செய்தான்.


விஸ் தனது புது நண்பர்களை அளவுக்கு அதிகமாக நம்பினான்.


ஜெ அவனது உயிர் நண்பனாக இருந்தாலும் ஒரு சிறிய பிரச்சனையை பெரிதாக நினைத்து அவனிடம் இருந்து ஒதுங்கி வாழ ஆரம்பித்தான் விஸ்.



விஸ்ஸின் கம்பெனியில் ஒரு டீல் பொருட்டு தந்த 23 லட்சம் ரூபாய் பணத்தை அவனது நண்பர்களில் ஒருவன் ஏமாற்றி விடுகிறான்.


விஸ் இது குறித்து அந்த பணத்தை எடுத்தவனிடம் சண்டையிட்டால் மற்ற இரு நண்பர்கள் விஸ்ஸிடம் சண்டையிட்டு நீ அவனிடம் பணம் தந்ததற்கு என்ன ஆதாரம்? எங்கள் நண்பன் அப்படி செய்யமாட்டான் என கூறி நீ பொய் சொல்கிறாய் என போர் ஆப் டைரக்டரஸ் இடம் புகார் தந்து விஸ்ஸை கம்பெனி பாலிஸி மூலம் வேலையை விட்டு தூக்குவதாகவும்,

அவரது ஷேர்களை விற்று பணத்தை தரவும் கூறுகின்றனர்.


நான் இந்த கம்பெனியை ஆரம்பித்தவன்,என் ஷேர்களை எப்படி நான் விற்பேன் அது எப்படி கம்பெனி பாலிஸி என கேட்க விஸ் கையெழுத்திட்ட பல பைல்களில் அது இருந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தான்.


தன்னுடைய கனவு வீடு,கல்யாணம் அனைத்தும் முடிந்தது என நினைத்து கதறி அழுதான் விஸ்.


தன் தங்குமிடம் வந்து பொருட்களை எடுத்து கொண்டு பஸ் ஏறினான் விஸ்.


இரண்டு வாரம் தன்னிடம் இருந்த ஷார்களை அடிமட்ட விலைக்கு விற்று 17 லட்சம் தான் அவனுக்கு கிடைத்தது விஸ்.


மீதமுள்ள 6 லட்சத்திலும் 3 லட்சத்தை தனது காரை விற்று திரட்டினான் விஸ்.



தற்பொழுது மூன்று லட்சம் மற்றும் ஒரு நிலையான வேலை தேவை என பலவாறு முயற்சிக்கிறான் விஸ்.


அவனது பழைய கம்பெனியில் அவன் நடந்து கொண்டதை வைத்து பல கம்பெனிகள் அவனுக்கு வேலை தர மறுக்கிறது.


வேலை இல்லாததால் பணம் கடன் தர யாரும் நம்பி கடன் தரவில்லை.


வாழ்க்கையை முடித்து கொள்ளலாம் என்று இருந்த விஸ் தனது மொபைல் காலை எடுத்து பார்க்க "ஜெ காலிங்" என காட்ட போனை அட்டெண்ட் செய்து அழுதபடி நடந்த அனைத்தையும் கூறினான்.


ஜெ அவனுக்கு ஆறுதல் கூறிவிட்டு "இங்க பாருடா,நீ தற்கொலை பண்ண நினைச்சது முட்டாள்தனம்,வாழனும்,இந்த பிரச்சனையெல்லாம் பார்த்துக்கலாம் டா,நான் இருக்கேன்,நம்ம பிரெண்ட்ஸ் இருக்காங்க,உன்னை நம்புறவங்க,அன்பு காட்றவங்க இருக்காங்க.


பார்த்துகலாம் சரியா" என ஆறுதல் கூறி விஸ்ஸை 

தைரியப்படுத்தினான்.


ஒரு வருடம் கழித்து,


தன் நண்பர்களின் உதவியுடன் மீதமிருந்த மூன்று லட்சம் தொகையை தன் பழைய கம்பெனிக்கு தந்து,ஜெ தந்த நம்பிக்கை கடிதத்தின் அடிப்படையில் ஜெவின் பார்ட்னர் கம்பெனியில் ஒரு வேலையுடன் அனைத்து பிரச்சனைகளையும் சமாளித்து,சரி செய்து வாழ ஆரம்பித்தான் விஸ்.


ஜெ மீது விஸ் கொண்ட நட்பு அதிகரித்தது அதனுடன் மரியாதையும் அதிகரித்தது.


Rate this content
Log in

Similar tamil story from Abstract