Saravanan P

Abstract Drama Inspirational

4.5  

Saravanan P

Abstract Drama Inspirational

புதுமை பெண்

புதுமை பெண்

3 mins
233


டீ போடுங்கமா,கிளம்புறாங்க பாருங்க வசந்தி குடும்பம் என ரவி தன் மனைவி பத்மாவிடம் கூறினார். 


வசந்தி பரவாயில்லை அண்ணே என எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அவர்களை சமாதானப்படுத்தி வசந்தி மற்றும் அவர்கள் குடும்பத்தை அமர வைத்தார்.


பத்மா வசந்தி குடும்பத்திற்கு டீ போட்டு தந்து விட்டு ஒரு டம்ளர் டீயை கையில் எடுத்து விட்டு மகள் இந்துவின் ரூமிற்கு சென்றார்.


இந்து நிச்சயம் முடிந்த பின் வீட்டில் அணியும் நைட்டியை போட்டு கொண்டு வேர்வை வடிந்த மேக்-அப் உடன் அமர்ந்து போன் பார்த்து கொண்டு இருந்தாள்.


பத்மா டீயை கொடுத்து குடிக்க சொல்லி திருமணத்திற்கு ஒகே சொல்லி எங்கள் பொறுப்பு பாரத்தை குறைச்சு இருக்க,நிச்சயம் நல்லபடியா முடிஞ்சுருச்சு என செல்ல இந்து டீயை வாங்கி வைத்து கொண்டு மொபைலில் ஹெட்செட் போட்டு காமெடி வீடியோக்கள் பார்க்க ஆரம்பித்தாள்.


அதே நேரத்தில் இந்துவை பார்க்க அவளது பெரியப்பா மகள் நளினி அங்கு வந்தாள்.


நளினியை வரவேற்ற ரவி வாம்மா என சொல்லி இந்து ரூம்ல இருக்கா என அனுப்பி விட்டு இவள் எதுக்கு இப்ப வந்தா என மனதிற்குள் திட்டிக் கொண்டார்.


வசந்தி நளினியை நிறுத்தி தனது மகளின் மேல்படிப்பு சம்பந்தமான விஷயங்களை கேட்டு விட்டு வந்து ரவியிடம் நல்ல பொண்ணு தான் என்ன கொஞ்சம் பொறுத்து போயிருக்கலாம் என கூறினார்.


இந்து யாரோ தன் அறைக்கு வெளியே நடந்து வருவதை உணர்ந்து எழுந்து அமர்ந்தாள்.


ரூமின் கதவை தட்டிய நளின் "இந்து உள்ளே வரலாமா" என கேட்க, இந்து உடனே வாங்க அக்கா கதவு திறந்து தான் இருக்கு என கூறினாள்.


உள்ளே வந்த நளினியை பார்த்த இந்து அவளை கட்டி அணைத்து கொண்டாள்.


எவ்வளவு நாள் ஆச்சு உங்களை பார்த்து என இந்து கேட்க,வேலை மா அதான் என நளினி சொல்லி கொண்டே இருவரும் மொட்டை மாடிக்கு போவோம் என பேசி மொட்டை மாடிக்கு சென்றனர்.


இந்து நளினியின் வேலை பற்றி கேட்டு விட்டு பின்பு அமைதி ஆனாள்.


நளினி இந்துவின் மாப்பிள்ளை,அவர் குடும்பம் பற்றி கேட்டு விட்டு "ரொம்ப ஒத்துக்க சொல்லி எதாவது பண்ணாங்களா?" என இந்துவிடம் கேட்டாள்.


இந்து உடனே இல்லை அக்கா,எனக்கு மாப்பிள்ளையை பிடிச்சிருக்கு என கூறினாள்.


வரதட்சணை என நளினி கேட்க,இந்து உடனே ரெண்டு பக்கமும் பேசி முடிவெடுத்தாங்க என சொல்ல,நளினி பின்பு நீ உன் வேலையை திருமணத்திற்கு பிறது தொடர்ந்து செய்வியா? என கேட்க இந்து குழப்பத்துடன் பார்த்தாள்.


இங்க பாரு இந்து,மாப்பிள்ளை கிட்ட எல்லாத்தையும் இப்பவே தெளிவா பேசிரு,அவங்க என்ன நினைக்கிறாங்க அப்படினு தெரிய வேணாமா என நளினி கேட்டாள்.


நளினி பின்பு என்னை முகத்துக்கு நேரா மதிச்சு,படிப்பு,உதவி அப்படினு என் கிட்ட கேட்டாலும் என்னை நான் இல்லாதப்ப எப்படி பேசுவாங்கனு எனக்கு தெரியும்,உங்க வீட்ல இப்ப நான் உன் கூட இருக்கதை நினைச்சு என சொல்லும்போதே பத்மா அங்கு வந்து டீ,பஜ்ஜி இருக்கு நளினி வந்து சாப்பிடு என சொல்ல நளினி திரும்பி உங்க பொண்ணுக்கு தப்பா நான் எதுவும் சொல்லல என சொல்லிவிட்டு மீண்டும் திரும்பினாள்.


பத்மா நளினியை பாவமாக பார்த்து விட்டு கீழே சென்றாள்.


நளினி பேச ஆரம்பித்தாள்,


"இந்து,என்னை பத்தி உனக்கு தெரியும்,லவ் பண்ணி கல்யாணம் பண்ணியும் வாழ்க்கை மோசமா மாறிருச்சு கொஞ்ச நாள்ல, காரணம் அவங்க அதிகமா என் வீட்ல இருந்து பணம் கொண்டு வர சொன்னங்க,என்னை கொடுமை படுத்துனாங்க,எங்க வீட்ல பொருத்து போக சொன்னாங்க,ஆனா இந்து என் வாழ்க்கைய பற்றி நான் முடிவு எடுத்தேன்,நான் புகுந்த வீட்டை விட்டு வெளி வந்தேன்,டைவர்ஸ் அப்ளை பண்ணி எனக்காக போராடினேன்,1 வருசம் எல்லாருடைய பேச்சையும் சகிச்சுகிட்டேன்.


எல்லாரும் என்னை பொருத்து போக சொன்னாங்க,என்னை வாழவெட்டினு சொன்னாங்க,யாரும் என்னை பத்தி யோசிக்கவும் இல்லை,அந்த பையனையும் அவங்க குடும்பத்தையும் கேள்வி கேட்கவும் இல்லை,என்னையும் என் குடும்பத்தையும் சுத்தி சுத்தி கேட்டாங்க.


என்னோட நம்பிக்கை,மன உறுதி,நான் படிச்ச படிப்பு என்னை மீண்டு வர வச்சுது,கஷ்டம் இருந்தது ஆனால் அதை எல்லாம் போராடி தாண்டிய அப்பறம் என் வாழ்க்கையை நான் உணர ஆரம்பிச்சேன்,அதை மதிச்சு வாழ ஆரம்பிச்சேன்.


என்னை பொருத்த வரைக்கும் இந்து,வரதட்சணை பொண்ணு வீட்டிலிருந்து கேட்கிறது எப்படி தப்போ,அளவுக்கு அதிகமா மாப்பிளை பற்றி இல்லாம அவரோட சொத்து,பணம் பற்றி கேட்டு முடிவு செய்வதும் தப்பு,நம்மை வாழ்க்கையை அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செஞ்சு வாழ்ந்தால் போதும்.

உனக்கு இதை நான் ஏன் சொல்றேன்னா,நீ தான் வாழ போற,நீ தான் உன் வாழ்க்கை பற்றி முடிவு எடுக்கனும்.

கணவரோட கஷ்டத்துடல பங்கு எடுத்துக்கிறதும்,கணவரோட கொடுமையை பொருத்துக்குறதும் ஒன்னு கிடையாது.


நாம அவங்க படுத்துற கஷ்டத்தால அந்த உறவை விட்டு வெளி வர முடிவு எடுத்தா ,அதுல உறுதியா இருக்கனும்" என பேசி முடிக்க இந்து அவர்களை மரியாதையுடன் பார்த்தாள்.


பெரியப்பா பேச்சை எப்பவும் மீறாம இருந்த அக்கா,இப்ப புதுமை பெண்ணா என் கண்ணுக்கு தெரியுறீங்க,நீங்க சொன்ன எல்லாத்தையும் நான் என் மனசுல வச்சு நடந்துக்குவேன் என கூறி அவரை மீண்டும் கட்டிப்பிடித்தாள் இந்து.




Rate this content
Log in

Similar tamil story from Abstract