முகநூல்
முகநூல்


லிசியும்,சுமியும் மலேசியா பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்தவர்கள். சுமி இந்தியாவில் தமிழ்நாட்டில் திருமணமாகி செட்டில் ஆகிவிட்டாள். இருந்தும் மலேசியாவில் வாழும் ஆந்திர மாநிலத்து லிசிக்கு அவ்வப்போது பரிசுகளை அனுப்பிக்கொண்டே இருந்தாள். வருடாவருடம் புத்தாண்டு பரிசு வரும். ஜனவரி 10 தேதிவரை காத்திருந்த லிசி அது வராமல் போகவே தொலைபேசியில் பலமுறை தொடர்பு கொண்டும் சுமியைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.முகநூலில் செய்திகளை எல்லாம் போட்டாள்.
சரி! நேரில் பார்க்கலாம் என மலேசியன் ஏர்லைன்சில் பதிவு செய்துவிட்டு கிளம்புவதற்காக காத்திருந்தாள். தனது தோழிக்குத் தேவையான பொருள் எல்லாம் வாங்கி வைத்திருந்தபோது வாசல்கதவு தட்டப்படுவது தெரிந்து கதவைத் திறந்தாள்.
பொங்கல் பானையோடு சுமி மருதாணி சிவந்த விரல்களோடு கதவை ஒட்டி சாய்ந்தபடி நான் இந்த வருடம் உன்கூட பொங்கல் கொண்டாட வந்திருக்கேன் என்றபடி சிரித்தவளை உள்ளே அழைத்து சோஃபாவில் உட்கார வைத்தாள்.
மொபைல் விடாது ஒலிக்கவே எடுத்த லிசி அதிர்ந்தாள்.
ஒன்றும் பேசாமல் சுமியிடம் பேச்சு கொடுத்துக்கொண்டிருந்தாள். அவள் பையை கெட்டியாகப் பிடித்தபடி பேசியதைக் கண்டுபிடித்தாள். கொஞ்சநேரத்தில் இந்திய பெண் உளவுத்துறை அதிகாரி கதவைத்தட்டி சோஃபாவில் உட்கார்ந்திருந்த பெண்ணை அரெஸ்ட் செய்தார்.
தேங்க்யு சோ மச் மேடம்! நீங்கள் சொல்லியவுடன் நான் அலெர்ட் ஆகிட்டேன். இவ உங்க சினேகிதி பாஸ்போர்ட்டைத் திருடி அவ உருவத்துல வந்திருக்கா.....இதை நீங்க போட்ட முகநூல் பதிவுகளைப் பார்த்து செஞ்சிருக்கா இந்தமாதிரி ஒருவர் பாஸ்போர்ட்டைத் திருடி அதே மாதிரி மேக்கப் செய்துட்டு வந்து வீடுகளில் திருட வர்றது வாடிக்கையாப் போச்சு!என அவளை நெட்டி வெளியே தள்ளினார் அதிகாரி.