ஞாயிறுதோறும் சிறுகதை - கதை1
ஞாயிறுதோறும் சிறுகதை - கதை1


அன்பார்ந்த வாசகர்களே ,
பத்மினியின் வணக்கம். நான் ஞாயிறு தோறும் ஒரு சிறுகதையை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். இக்கதைகள் இந்தியில் திருமதி சூரிய பாலா என்ற பெண் எழுத்தாளரால் எழுதப்பட்டவை. ஆராய்ச்சிப் படிப்புக்காக நான் இவர்களைப் படிக்க நேரிட்டது. திருமதி சூரிய பாலாவை மும்பையில் பார்த்தபோது அவர்கள் என் கதைகளை தமிழில் மொழி பெயர்த்து தமிழ் மக்களும் படித்து இன்புற விரும்புகிறேன் என்று கூறினார் அவர் விருப்பத்திற்கு ஏற்ப நானும் மொழிபெயர்ப்பாளராக அவர் கதைகளை இங்கே வாரம்தோறும் ஒவ்வொரு கதையாக மொழி பெயர்த்து கொடுக்க முடிவு செய்திருக்கின்றேன். 52 வாரங்கள் எழுதும் போட்டியில் நான் ஒவ்வொரு வாரமும் ஒரு கதையை மொழிபெயர்த்து கொடுப்பேன். திருமதி. சூரிய பாலா 100 கதைகளுக்கும் மேலாக எழுதியிருக்கின்றார். அவைகளில் 50 கதைகளை நான் இங்கே உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள முடிவு செய்திருக்கின்றேன்.
தங்கள் நல்லாட்சியை விரும்பும்,
பத்மினி
கதை 1
என் பெயர் 'தாதா'
உண்மையில் ‘தாதா’ என்பது குழந்தை சுஜாதா. அவள் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளுக்கு ஒன்றரை வயது. அவரது தாயார் மீனா, தந்தை சுரேஷ். இருவரும் மிகவும் பிரபலமான நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். ஒரு நடுத்தர வர்க்க பெண்மணியாக மீனா உயர் வகுப்பு நடுத்தர வர்க்கத்தில் இருக்கும் தனதுடன் வேலை செய்யும் உயரதிகாரிகளுக்கு சமமாக நிற்க விரும்புகிறாள். மீனா தனது சகாக்களின் குழந்தைகள் படிக்கும் நகரத்தின் புகழ்பெற்ற பள்ளியில் சுஜாதாவுக்கு அனுமதி பெற விரும்புகிறார். "என்னால் கூட முடியும்" என்பதை நிரூபிக்க அவள் விரும்பினாள்.
இன்று சுஜாதாவுக்கான நேர்காணல். நேர்காணலில் ‘உங்கள் பெயர் என்ன?’ என்று கேட்கும்போது மீனா குழந்தைக்கு தனது பெயரை எப்படிச் சொல்ல வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார். ஆனால் நேர்காணலில் சுஜாதா வாய் திறக்கவில்லை. பாவம் மீனா! சுஜாதாவுக்கு என்ன ஆனது என்று அவளுக்குத் தெரியவில்லை. கடந்த சில நாட்களாக மீனா தனது மகளுக்கு “என் பெயர் சுஜாதா” என்று எப்படிச் சொல்ல வேண்டும் என்று கற்றுக் கொடுத்தாள். ஆனால் குழந்தைக்கோ, “என் பெயர் தாதா” என்று மழலையாக சொல்லத்தான் தெரியவந்தது.அதனால் அவள் தனது பெயரை சுஜாதா என்று சொல்ல கற்பிப்பதை மீனா நிறுத்தினாள்.
சுஜாதா தனது பதிலில் மிகவும் மகிழ்ச்சியடைந்தாள். அதனால் அவளுடைய அப்பா அலுவலகத்திலிருந்து வந்ததும், “என் பெயர் தாதா” என்று சொல்ல அவனிடம் ஓடினாள், ஆனால் ஏற்கனவே அலுவலக வேலை பதற்றத்தில் இருந்த சுரேஷ் குழந்தையின் மழலை பேச்சை கவனிக்கவில்லை. குழந்தையோ விட்டுவிட வ
ிரும்பவில்லை. . அவள் அப்பாவுக்கு பின்னால் ஓடி, மீண்டும் மீண்டும், “என் பெயர் தாதா” என்று சொன்னாள்.அப்பா குழந்தையை கோபமாக கத்தினான், ”போதும் நிறுத்திக் கொள். வாயை மூடு.”அது நேர்காணலில் பிரதிபலித்தது. பள்ளியில் அனுமதி கிடைக்கவில்லை.
வீடு திரும்பிய மீனா கண்ணீர் சிந்தத் தொடங்கினாள். இது நடுத்தர வர்க்க குடும்பத்தின் உழைக்கும் பெண்களின் பிரச்சினை. அவர்கள் வீட்டிலிருந்து அலுவலகம் மற்றும் அலுவலகத்திலிருந்து வீட்டிற்குமாக ஓடுகிறார்கள். அவர்கள் குடும்ப தயாரிப்பாளர்கள். மின்சாரம், தொலைபேசி பில், எரிவாயு, வேலைக்காரன், மாமியார்-மாமனார், கணவர், உடன்பிறப்புகள், முதலிய பல பொறுப்புக்களோடு ……. அலுவலகத்தில்… மேலாளர், சகாக்கள், ஈகோக்கள், கவுரவம், கருத்துகள், பதவி உயர்வு, முதலியன உள்ளன…….
இதற்கிடையில் பணிப்பெண் அவள் தன் வேலையை விட்டு வெளியேறுவதாகக் கூற தன் எஜமானி மீனா முன் வந்தாள். சம்பளத்தை உயர்த்துவதற்கான பேராசையில், வேலைக்காரி இம்முடிவு செய்தாள். ஏற்கனவே மீனாவிற்கு வேலைக்காரியின் நடத்தை பிடிக்கவில்லை.அதனால் நீ போகலாம் என்று அவள் சொன்னாள். சுஜாதாவும் சொன்னாள், ”கெட்ட ஆயா ”. உண்மையாக சுஜாதா தனது பொம்மைகள், புத்தகங்கள், டெடி, ரிமோட் கார்கள்,…மட்டுமே அவளது உலகமென வாழ்ந்து கொண்டிருந்தாள். சுரேஷ் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்ததும் என்ன நடந்தது என்று தெரிந்து கொண்டார். மீனாவிடம் ஆறுதல் கூறினார்,“.
கவலைப்படாதே, அன்பே ! ” அவர்கள் இருவரும் தங்கள் அலுவலக வேலைகளைப் பற்றிப் பேசிக்கொண்டே மதிய உணவு உண்டனர். குழந்தை சுஜாதா தனது பெற்றோரைப் பார்த்தாள். அப்போது அவள் தன் தாயை சந்தோஷப்படுத்த விரும்பினாள். அவள் தன் தாய் எப்பொழுதும் தன்னுடன் வீட்டில் தங்க வேண்டும் என்று விரும்புகிறாள். அவளுடைய பார்வையில் அப்பா வீட்டைவிட்டு போகிறார்…. மம்மி போகிறாள்… .ஆயாவும் போகிறாள்..அவர்கள் எல்லோரும் அவளைத் தனியாக தனது அறையில் விட்டுவிட்டு போகிறார்கள். அவள் என்ன செய்ய முடியும்?
அடுத்த நாள் காலையில் சுரேஷ் கிராமத்திலிருந்து வந்த தனது தாயுடன் வீட்டிற்குள் நுழைந்தார். இரவே அவர் தனது தாயுடன் போனில் பேசினார், எல்லாவற்றையும் விளக்கினார்.அதனால் அம்மா காலையிலேயே கிராமத்தை விட்டு புறப்பட்டு வந்தார். பேபி சுஜாதா தனது பாட்டியை வரவேற்கவோ அல்லது விரும்பவோ இல்லை. பாட்டி சூட்கேஸிலிருந்து தனது பொருட்களை ஒவ்வொன்றாக வெளியிலெடுத்து அலமாரியில் அடுக்கத்தொடங்கியதும் சுஜாதா பூஜை சாமான்களைப் பார்த்தாள்.
அவள் பேச ஆரம்பித்தாள், ”இது என்ன? அது என்ன?” என கேட்டாள். இப்போது குழந்தை சுஜாதா பாட்டியை நம்பிக்கையுடன் பார்த்து,”மம்மி, பப்பாவைப் போல என்னை வீட்டில் விட்டுவிட்டு வெளியே போவீர்களா?” என்று கேட்டாள். பாட்டி அவளை மடியில் எடுத்துக்கொண்டு,” இல்லை, அன்பே! நான் உன்னை விட்டு எங்கும் போக மாட்டேன்.” சுஜாதா பாட்டியை கட்டிப்பிடித்து, ”நன்றி பாட்டி!”என்றாள்.