நுங்கு
நுங்கு
நீ நுங்கு எடுத்துட்டு வர்றியா நாளைக்கு?
இல்லை ஆபிசர் சார்! நாளைக்கு பள்ளிக்கு போகணும்..இன்னைக்கு லீவு..அதான் எடுத்துட்டு வந்தேன் என்றான் ராதாகிருஷ்ணன்.
படிச்சு என்ன செய்யப்போறே? இந்தத் தொழில் செய்யறதுக்கே இப்ப ஆள் கிடையாது. படிச்சு நீங்க எல்லாரும் நகர்ப்புறத்துக்கு வந்துட்டா எங்களுக்கு இந்த நுங்கு காய் எல்லாம் வெட்டத் தெரியாதுப்பா....
அதுக்காக நான் படிக்காமல் இருக்க முடியமா? நான் படிச்சுட்டும் இந்த தொழிலைத்தான் சார் வேறுவிதமாகச் செய்வேன். எப்பவும் என் தாய்நாட்டு மண்ணுக
்கு சக்தி அதிகம்சார்..இதுல விளையுற கிழங்கும்,நுங்கும் உலகத்துல எங்கு தேடியும் கிடைக்காது ஏற்றுமதி செய்யறதுக்கு நல்லா படிக்கணும் இல்லையா!
இப்ப குறுஞ்செயலி, கணினி எல்லாம் வந்துடுச்சு..ஆனால் எல்லாமே ஆங்கிலத்துலதான் முக்கால்வாசி இருக்கு...நான் நல்லா படிச்சாத்தான் என் சொந்தங்களுக்கு சொல்லமுடியும் இல்லையா!
இந்த காலத்து பசங்க இந்த நுங்குமாதிரியே இனிப்பானவங்கதான்னு ஒத்துக்கறேன். வீட்டிற்கு நாலு காய் சீவி கொடுப்பா....என்றபடி ஆபிசர் அருகில் இருந்த பனைமரத்தினைப் பார்த்தபடி இருந்தார்.