முயற்சியும் தன்னம்பிக்கையும்
முயற்சியும் தன்னம்பிக்கையும்


பள்ளிப்பருவமுதல் கீர்த்தியும் சிவாவும் நெருங்கிய நண்பர்கள்.அவர்களுடன் நிறைய நண்பர்கள் என்றும் சுற்றியே இருப்பார்கள்.சிவா வகுப்பில் முதல் மாணவனாக வருவான் மிகவும் திறமைசாலி.கீர்த்தி சுட்டித்தனமானவள் படிப்பைக்காட்டிலும் விளையாட்டில் கவனம் அதிகம். ஓவியம் வரைவது, கற்பனை கதை எழுதுவதில் மிகவும் இரசனை உடையவள்.
ஐந்தாம் வகுப்பு முடிந்ததும் கீர்த்தியை அவள் பெற்றோர் கான்வென்ட் பள்ளியில் சேர்த்தார்கள்.அங்கே ஆங்கிலம் மட்டுமே பேசவேண்டும் பாடம் முழுவதும் ஆங்கிலத்திலே நடத்தப்பட்டன. கீர்த்திக்கு ஒன்றும் புரியவில்லை மிகவும் கடினமாக எண்ணினாள். ஆனால்,அவள் நம்பிக்கை விடவில்லை எப்படியாவது ஆங்கிலம் சரளமாக பேசி கற்றுக்கொள்ள வேண்டும் என முடிவில் தீர்மானமாய் இருந்தாள்.
யார் எந்த வார்த்தையை ஆங்கிலத்தில் கூறினாலும் உடனே டைரியில் எழுதி கொண்டு அதற்கு அர்த்தம் கண்டரிவாள்.அவளை சக மாணவர்கள் கேலி செய்து கொண்டே இருப்பார்கள் படிப்பிலும் கவனம் சிதறியது. நம்பிக்கை இழக்காமல் விடாமுயற்சியோடு ஒன்பதாம் வகுப்பு வரை முடித்தாள்.
பின்பு,பத்தாம் வகுப்பு நன்றாக படிக்கவேண்டும் என்பதற்காக கீர்த்தியை பள்ளி விடுதியில் சேர்த்தார்கள்.அவள் விளையாடும்போதும் பேசும்போதும் ஏளனமாய் பார்ப்பார்கள். அந்த பள்ளியில் படிக்க விருப்பமின்றி படித்தாள்.உயிரியல் பாடம் எடுக்கும் கிரேசி டீச்சரை மிகவும் பிடிக்கும்.அவர்கள் சுயமரியாதை(self_esteem) , சுயமுன்னேற்றம்(self_development),
தன்னம்பிக்கை(self_confidence) போன்ற தலைப்புகளை ஒரு வகுப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு கூறுவார்.
ஒரு நாள் கீர்த்தியை கவனித்து..நீ ஏன் யாருடனும் சரியாக பேசுவதுமில்லை பாடத்தை கவனிப்பதுமில்லை என வினவினார்..?
எனக்கு ஆங்கிலத்தில் பேசுவதும் எழுதுவதும் மிகவும் கடினமாக உள்ளது ஓரளவிற்கு முயற்சித்து முன்னேற்றம் கண்டுளேன் ஆனால் யாரும் என்னுடன் சரியாக பேசுவதில்லை தாழ்வுமனப்பான்மை வந்துவிட்டது டீச்சர் எனக்கு உதவுங்கள் என்று கேட்டாள்.
உடனே சற்றும் யோசிக்காமல் வெற்றியின் ரகசியம் என்ற புத்தகத்தை கீர்த்தியிடம் கொடுத்தார்.அவள் தினமும் தன்னம்பிக்கைவூட்டும் கதைகளை படித்து தன் தவறுகளை திருத்தி விடாமுயற்சியோடு போராடினால் அதிலே கண்ட வரிகள்..
g> "இருள் என்று தெரிந்தும் கண்களை திறந்து கொண்டுதான் பயணிக்கிறோம்..! அதுபோல தோல்வி என்று தெரிந்தாலும் முயற்சி கொண்டிருப்போம் வெற்றிகாணும் வரை..!" தன் குறைகளை அறிய தொடங்கிவிட்டால் மற்றவர்களை பற்றிய பேச்சுக்கே நேரம் இருக்காது.அவளின் பாதையில் நடைபோட தொடங்கினாள். "எழுந்து நடந்தால் இமையமலையும் நமக்கு வழி கொடுக்கும் உறங்கி கிடந்தால் சிலந்தி வலையும் சிறைபிடிக்கும்" என்ற வாசகத்தை அடிக்கடி நினைவுகூர்ந்தாள். சில நேரங்களில் உங்களை தாழ்த்தி பேசுபவரை அப்படியே விட்டுவிடவேண்டும் ஏனெனில் அவர்களால் செய்ய முடிந்த ஒரே விஷயம் அதுமட்டுமே. ஒரு செயலை செய்வதற்கு முதலில் பயத்தை விட்டொழிக்க வேண்டும்.குரங்கு ஒன்று நிழலை பார்த்து பயந்தோடியது சற்று நின்று திரும்பி பார்த்து நிழல் என்று தெரிந்ததும் பயமும் தெறித்து ஓடியது. கோபத்தில் இருக்கும்போது நிதானமும் குழப்பத்திலே அமைதியும் துன்பத்திலே தைரியமும் தோல்வியிலே பொறுமையும் வெற்றியிலே தன்னடக்கமும் இருந்தால் அவன் வாழ்க்கையை இனிதாக மாற்ற முடியும். விடாமுயற்சியோடு இதை மனதிலே பதித்து வாழ்க்கையின் உண்மை காண்டாள் கீர்த்தி. பள்ளி படிப்புகளை முடித்து கல்லூரியில் பி.டெக்(ஐ.டி) படிப்பில் சேரும்போதும் சிவாவை சந்தித்தால் அவனும் அதே கல்லூரியில் சேர்கிறான். இவளை கண்டு வியந்துபோனான் இவ்வளவு மாற்றமா உனக்குள்ளே பள்ளிப்பருவங்களில் சிவா கீர்த்திக்கு தன்னம்பிக்கை வூட்டி கொண்டே இருப்பான். "ஒன்றே செய்! நன்றே செய்! அதை இன்றே செய்!" என்று கூறுவான். இவள் தன்னம்பிக்கை தளராமல் இருப்பதற்கு சிவாவிற்கு பெரிதும் பங்குள்ளது.பேசிய ஞாபகத்தோடு கதைகளும் கவிதைகளும் நினைவிற்கு வந்தது. அவள் இலக்கை அவளே தீர்மானித்து மறைந்துபோன கற்பனை கதைகளையும் பள்ளியில் கற்ற தன்னம்பிக்கையும் விடாமுயற்சியையும் அனைவரும் கற்று வாழ்வில் வெற்றி பெற வேண்டும்என்று எண்ணி தன்னம்பிக்கையூட்டும் வகையில் நண்பர்களையும் உத்வேகப்படுத்தினாள். நிறைய கவிதைகளை எழுதி வாழ்க்கையில் எவ்வளவு போராட்டமும் போர்க்களமாய் இருந்தாலும் எந்த ஒரு செயலையும் இரசித்து செய்தால் அதன் பொருள் அறிந்து வெற்றி காணலாம் ௭ன்று தெளிவு பெற்றாள்.